தாவரவியல் :: கண்ணறையும் திசுவும்

21. இழைப்பிரிவை (மைட்டாசிஸ்) ஆராய்ந்தவர் யார்? எப்பொழுது தம் முடிவுகளை வெளியிட்டார்?
வால்தர் பிளிமிங் இழைப்பிரிவை ஆராய்ந்தவர். தம் முடிவுகளை 1882இல் வெளியிட்டார்.
22. நேர்முகப்பிரிவு என்றால் என்ன?
கண்ணறைப் பிரிவில் உட்கரு நேரடியாகப் பிரிதல்.
23. குன்றல் பிரிவு என்றால் என்ன?
இதில் நிறப்புரிகள் இருமநிலையிலிருந்து (2n) ஒருமநிலைக்குக் குறைக்கப்படுகின்ற. ஆண் அணுவில் 23 ஒற்றை நிறப்புரியும், பெண் அணுவில் 23 ஒற்றை நிறப்புரியும் இருக்கும். இவை இரண்டும் கூடி உருவாகும் கருவணுவில் மீண்டும் 23 இணைநிறப்புரிகள் உண்டாகும்.
24. இருநிலை வடிவி என்றால் என்ன?
கண்ணறைப் பிரிவின் பொழுது தோன்றும் உரு. இது விண்மீன் போன்ற இருவடிவங்களாலானது. கதிரினால் இணைக்கப்பட்டிருப்பது.
25. ஈரிணைநிலை என்றால் என்ன?
குன்றல் பிரிவில் ஒரு நிலை. இதில் சுருள் இழைகள் இரண்டிரண்டாக அமையும்.
26. அல்கணிகம் என்றால் என்ன?
கண்ணறைச் சுவர், கண்ணறை இடைப்பொருள் ஆகியவை தாவரம் முழுதும் தொடர்ச்சியாக இருத்தல். குழாய்த்திசுவில்லாத தாவரங்களில் நீர் இயக்கம் இதன் வழியாகவே நடைபெறுகிறது.
27. விண்மீன் வடிவி என்றால் என்ன?
1. கண்ணறைப் பிரிவில் தோன்றும் உரு. மையப் புரிகளைச் சூழ்ந்துள்ள கதிர்கள் விண்மீன் வடிவத்தில் இருப்பவை.
2. தும்பைக் குடும்பத்தின் தொகையைக் குறிக்கும்.
28. செயற்கைப் பண்பு என்றால் என்ன?
தாவர இயற்கைத் தொடர்புகளைக் கருதாது, ஒருசார் நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பண்பு.
29. மூலக்கணியம் என்றால் என்ன?
விண்மீன் வடிவிகளையும் கதிர்களையும் உண்டாக்கும் தனிச்சிறப்புள்ள பொருள். இது கண்ணறைப் பிரிவில் உண்டாவது.
30. கருமூலக்கண்ணறை என்றால் என்ன?
பாலணுக்களை உண்டாக்கும் உயிரணுக்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணறையும் திசுவும் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - என்றால், என்ன, விண்மீன், கண்ணறைப், பிரிவில்