தாவரவியல் :: கண்ணறையும் திசுவும்

11. உயிரணுவின் மரபணுக்களில் காணப்படும் விந்தைப் பொருள்கள் யாவை?
டிஎன்ஏ, ஆர்என்ஏ.
12. டிஎன்ஏவின் வேலை என்ன?
1. மரபுப் பண்பை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்வது.
2. புரதச் சேர்க்கையைக் கட்டுப்படுத்துவது.
13. ஆர்என்ஏவின் வேலை என்ன?
இவ்விரு வேலைகளுக்கும் டிஎன்ஏவுக்கு உதவுவது இது.
14. கண்ணறைச் சேர்ப்புப் பொருள்கள் யாவை?
இவை கரிமப் பொருள்களும் கனிமப்பொருள்களும் ஆகும். வளர்சிதை மாற்ற வினைப்பொருள்களும், சேமிப்புப் பொருள்களும் ஆகும்.
15. கண்ணறைப் படலம் என்றால் என்ன? வேலை என்ன?
கண்ணறையின் வெளிப்புற எல்லையாக ஒருவழி ஊடுருவுப்படலம். பொருள்கள் உள்வருவதையும் வெளிச்செல்வதையும் கட்டுப்படுத்துவது. கண்ணறைக் சுவராக்கத்தில் சிறந்த பங்குபெறுவது. விலங்குக் கண்ணறை, தாவரக் கண்ணறை ஆகிய இரண்டிலும் உளளது.
16. விலங்குக் கண்ணறைக்கும் தாவரக் கண்ணறைக்குமுள்ள வேறுபாடுகள் யாவை?
1. தாவரக் கண்ணறைக்குக் கண்ணறைச் சுவர் உண்டு. விலங்குக் கண்ணறைக்கு இது இல்லை.
2. கோல்கை அமைப்பு கருவி விலங்குக் கண்ணறையில் உண்டு. தாவரக் கண்ணறையில் இல்லை.
17. கண்ணறைக் கொள்கைகள் யாவை?
1. உயிரிகளின் அமைப்பலகும் வேலையலகும் உயிரணு.
2. அனைத்து உயிரணுக்களும் முன்னரே தோன்றிய கண்ணறைகளிலிருந்தே உண்டாகின்றன.
18. கண்ணறைப் பிரிவின் வகைகள் யாவை?
1.இழைப்பிரிவு (மைட்டாசிஸ்)
2. குன்றல் பிரிவு (மீயாசிஸ்)
3. இழையில் பிரிவு (ஏமிட்டாசிஸ்).
4. கட்டவிழ் உட்கருப்பிரிவு.
19. கண்ணறைப் பிரிவிலுள்ள நான்கு நிலைகள் யாவை?
1. முதல்நிலை
2. நடுநிலை
3. பின்னிலை
4. முடிவுநிலை.
20. இழைப்பிரிவு என்றால் என்ன?
இதில் உட்கரு மறைமுகமாகப் பிரியும். இது தாவரத்தின் வளர்ச்சிப் பகுதியிலும் தண்டு முனையிலும், வேர் முனையிலும் நடைபெறுவது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கண்ணறையும் திசுவும் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - யாவை, என்ன, தாவரக், விலங்குக், கண்ணறைப், பொருள்கள், வேலை