தாவரவியல் :: முத்துறை அறிஞர் சாகினி
11. அவர் கண்டுப்பிடிப்புகளின் சிறப்புகள் யாவை?
1. அவர் தொல்தாவரவியல் ஆராய்ச்சி, கண்ட நகர்வுக் கொள்கைக்கு ஆதரவாக இருந்தது.
2. அவர் கண்டுபிடிப்புகளில் சில தற்பொழுதுள்ள தாவரங்களுக்கும், பழங்காலத் தாவரங்களுக்கும் இடையே உள்ள உயிர்மலர்ச்சி உறவினை உறுதி செய்ய உதவின.
12. அவர் எவ்வாறு ஒரு புவி அமைப்பியல் அறிஞராக இருந்தார்?
1. தம் பண்படாக் கருவிகள், விரிந்த தொல் தாவர அறிவு ஆகியவற்றைக் கொண்டு சில பழைய பாறைகளின் வயதை உறுதி செய்தார். அவர் கருத்துப்படி பாகிஸ்தான் பஞ்சாபிலுள்ள உப்பு மலைத்தொடரின் வயது 40 -60 மில்லியன் ஆண்டுகள்.
2. மத்தியப் பிரதேசத்திலுள்ள தக்கானக் கண்ணிகள் மூவூழியைச் சார்ந்தவை என்று இவர் கண்டார். அதாவது அவற்றின் வயது 62 மில்லியன் ஆண்டுகள்.
13. அவர் எவ்வாறு தொல்பொருளாய்வில் ஆர்வம் காட்டினார்?
இது தொடர்பாக இவர்தம் ஆராய்ச்சிகளில் ஒன்று இதுவே. ரோடாக என்னுமிடத்திலுள்ள நாணய வார்ப்புகளை 1936 இல் கண்டறிந்தார்.
14. எதற்காக அவர் என்ன பரிசு பெற்றார்?
பாழைய இந்தியாவில் நாணய வார்ப்பு நுணுக்கங்களை இவர் ஆராய்ந்தார். இதற்காக இவருக்கு இந்திய நாணய வியல் கழகம் நெல்சன் ரைட் பதக்கத்தை வழங்கிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முத்துறை அறிஞர் சாகினி - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அவர், நாணய