தாவரவியல் :: முத்துறை அறிஞர் சாகினி
1. பிர்பால் சாகினி யார்?
இந்தியத் தொல் தாவரவியலார், புவி அமைப்பியலார்.
2. அவர் எங்கு எப்பொழுது பிறந்தார்?
பஞ்சாபில் 1891 இல் பிறந்தார்.
3. அவர் மேல் பட்டப்படிப்பின் சிறப்பென்ன?
முதல் அறிவியல் பெருமுனைவர் பட்டத்தைப் (D.Sc) பெற்ற இந்தியர், 1929.
4. எப்பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றர்?
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றார்.
5. அவர் எப்பொழுது இலண்டன் அரசர் கழக உறுப்பினரானார்?
1936 இல் உறுப்பினரானார்.
6. இளமையிலிருந்து அவரிடம் காணப்பட்ட பண்பு என்ன?
எதிலும் தீரச் செயல் செய்யும் பண்பு காணப்பட்டது.
7. அவர் செய்த அருஞ்செயல்கள் யாவை?
1. இந்தியக் கோண்ட்வானாவின் தினைத் தாவரங்களை விரிவாக முதன்முதலில் ஆராய்ந்தவர் இவரே.
2. பீகாரில் இராஜ்மகால் குன்றுகள் தாவரத் தொல்படி வங்களின் சுரங்கம். ஆகவே, இக்குன்றுகளை இவர் ஆராய்ந்தார். இங்குச் சில புதிய பேரினங்களை இவர் கண்டறிந்தார்.
8. அவர் புதிதாகக் கண்டறிந்த பேரிளங்கள் யாவை?
1. ஒமோக்சைலான் இராஜமகாலென்சி.
2. இராஜ மகாலியா பரடோரா.
3. வில்லியம் சோனியா சேவார்தியானா.
9. அவர் புதிதாகக் கண்டறிந்த உறையில் விதையில்லர்த் தாவரங்களின் தொகுதி யாது?
பெண்டாக்கிலி,
10. இக்கண்டுபிடிப்பின் சிறப்பென்ன?
இது உலகக் கவனத்தைக் கவர்ந்தது.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
முத்துறை அறிஞர் சாகினி - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அவர்