தாவரவியல் :: பசுமைப்புரட்சி வித்தகர் பால்
1. பால் என்பவரின் முழுப் பெயர் என்ன?
பெஞ்சமின் பியரி பால்.
2. இவர் எம் மாநிலத்தவர்?
பஞ்சாப் மாநிலத்தவர்.
3. இவர் எப்பொழுது பிறந்தார்?
1906 மே 26.
4. தொடக்கக் கல்வியை எங்குக் கற்றார்?
பர்மாவில் கற்றார்.
5. அவர் பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் நாட்களில் எப்படி விளங்கினார்?
சிறந்த மாணவராதலால் பல பரிசுகளும் உதவித் தொகைகளும் வாங்கினார்.
6. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு எதற்குச் சென்றார்?
அங்கு ஐந்தாண்டுகள் தங்கித் தம் முனைவர் பட்டப் படிப்பை முடித்துப் பர்மா திரும்பினார்.சென்ற ஆண்டு1929.
7. அவர் தந்தையார் தொழில் என்ன?
அவர் தந்தையார் மருத்துவர்.
8. அவருக்கு எதில் நாட்டம் அதிகமிருந்தது?
தோட்டக்கலையில்.
9. இந்நாட்டத்தை யார் விரும்பிப் பெற்றது?
பால் தம் தந்தையிடமிருந்து இந்நாட்டத்தை விரும்பிப் பெற்றார். அது அவரது வாழ்க்கைப் பொழுதுபோக்கு ஆயிற்று.
10. எந்த ஆண்டு அவருக்கு ஆராய்ச்சிப்பணி கிடைத்தது? எங்கு?
1933இல் புது தில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சிப்பணி கிடைத்தது.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பசுமைப்புரட்சி வித்தகர் பால் - தாவரவியல், Botany, அறிவியல் வினா விடை - Science Quiz - Science - அறிவியல் - Science Data Warehouse - அறிவியற்க் களஞ்சியம் - அவர், பால்