ஸ்கந்த புராணம் - பகுதி 7 - பதினெண் புராணங்கள்
காங்கேயனின் தோற்றம் குறித்த செய்தி எங்கும் பரவி பார்வதியையும் எட்டிற்று. உடனே பார்வதி குழந்தையைக் காண விரும்பினாள். நாரதரும் இவர்கள் வருகைக்கு உதவி புரிந்தார். சிவனும் பார்வதியும் கார்த்திகேயன் இருந்த இடத்தை நெருங்கினர். பல வாத்திய கோஷங்கள் எழுப்பப்பட்டன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். குழந்தையைப் பார்வதி எடுத்து அணைத்துக் கொண்டாள். பிறகு சிவனும் எடுத்து அணைத்துக் கொண்டார்.
குழந்தையை அணைத்துக் கொண்டே சிவன், இந்தக் குமரன் என்ன செய்ய வேண்டும் உங்களுக்கு என்று கேட்டார். தேவர்கள் குமரனை எங்கள் படைத்தலைவனாக ஆக்குங்கள் என்று வேண்டிக் கொண்டனர். அந்த நேரத்தில் பிரம்மனுடைய ஆணையின்படி மிருத்யுவின் மகனாகிய சேனா என்பவள் அங்கே வந்து சேர்ந்தாள். அப்பொழுது தேவர்கள் சிவனைப் பார்த்து இந்தப் பெண் குமரனைக் கணவனாக அடைய வேண்டும் என்று பலகாலம் தவம் செய்தாள் என்று கூறினர். இதனைச் சிவன் ஏற்றுக் கொள்ள, உடனே சேனாவைக் குமரனுக்கு மணமுடித்தனர். சேனாவை மணந்ததால் சேனாவுக்குத் தலைவன் என்ற முறையில் சேனாபதி என்ற பெயர் குமரனுக்கு ஏற்பட்டது. இந்த நேரத்தில் கார்த்திகைப் பெண்கள், கார்க முனிவர், பார்வதி ஆகிய மூவரிடையே குழந்தை யாருடையது என்பதில் பெரிய கலகம் விளையத் தொடங்கியது. அங்கே வந்த நாரதர் சிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த இக் குழந்தை பெரிய அசுரனை அழிப்பதற்காக என்றே சிறப்பாகக் கூறப்பட்டதாகும். ஆகவே நீங்கள் உரிமை கொண்டாட வேண்டாம் என்று கார்த்திகைப் பெண்களை அடக்கினார். குமரன் உடனே கார்த்திகைப் பெண்களைப் பார்த்து நீங்கள் என்றும் கார்த்திகை நட்சத்திரத்தின் இடமாக ஆகாயத்தில் இருப்பீர்களாக என்று வரமளித்தார்.
இதற்கு அடுத்தபடியாக ஸ்கந்தபுராணத்தில் இதே கதை முற்றிலும் வேறுவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் கதையில் சிவனுக்கு இடமே இல்லை. ஸ்கந்தன் அக்னியின் புதல்வன் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
தாரகன் போர்
தேவர்கள் ஸ்கந்தனிடம் வந்து தங்களுக்கு உதவியாகப் போரிட்டுத் தாரகனை அழிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். போர்க்களத்தில் அசுரர்களும் தேவர்களும் நேருக்கு நேராகப் போர் புரியத் தயாராக நின்றனர். ஸ்கந்தன் ஓர் அதிசயிக்கத்தக்க விமானத்தில் ஏறி இருந்தார். இரண்டா வது வகை வரலாற்றில் இவர் மயில் மீது அமர்ந்து போருக்கு வந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்திரன் ஐராவதம் மேலும், யமன், வருணன், அக்னி, குபேரன் ஆகியோர் தத்தம் வாகனங்களிலும் ஏறிவந்திருந்தனர். அவர்கள் படைகளும் அவர்களைச் சுற்றி நின்றன. எண்ணிலடங்காத படைக்கலங்களையும் அவர்கள் தாங்கி நின்றனர். எதிரணியில் தாரகனும் ஒர் அற்புதமான விமானத்தின் மேல் ஏறிவந்தான். அவனைச் சுற்றி யானை, குதிரை முதலிய நால்வகைப் படைகளும் தக்க ஆயுதங்களுடன் போருக்குத் தயாராக நின்றன.
சண்டை தொடங்கியது. தேவர்களுக்கு உதவியாக மாந்தாதாவின் மகனாகிய முசுகுந்தனும், சிவனிடம் தோன்றிய வீரபத்திரனும் போரிட்டனர். சண்டை தொடங்கிய சற்று நேரத்திற்கெல்லாம் இந்தப் படைகள் தாரகனை எதிர்த்து நிற்க முடியாதென விஷ்ணு அறிந்து கொண்டார். எனவே
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 7 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, தேவர்கள், கார்த்திகைப், குழந்தை, அணைத்துக், வேண்டும், பார்வதி, குமரன், ஸ்கந்தன், வந்து, உடனே