ஸ்கந்த புராணம் - பகுதி 6 - பதினெண் புராணங்கள்
அக்னி மூலம் சிவனுடைய சக்தியைப் பிச்சையாக ஏற்ற தேவர்கள் பெரும் துன்பத்திற்கு உள்ளாயினர். (ஸ்கந்த புராணம் ஸ்கந்தனுடைய உற்பத்தியைக் கூறுகின்ற பகுதியை இரண்டு வேறுபட்ட பாடல்களால் கூறுகிறது. மேலே சொல்லப்பட்ட வகையில் இந்த இரண்டு வகைக்கும் அதிக வேறுபாடு இல்லை. அக்னி அணு உருவாகச் சென்றான் என்பது முதல் வகை இரண்டாவது வகை சிவன் அக்ன? வந்திருப்பதை அறிந்து தன் ஆற்றலின் ஒரு பகுதியை அவனிடம் தந்தான் என்று கூறுகிறது. இதற்குப் பிறகு இந்த 2 வகைப்பட்ட கதைகளும் பெறும் மாறுதல்களுடன் காணப் படுகின்றன) முதல்வகை: சிவனுடைய ஆற்றலை பார்வதி மூலம் பெற்றுக் கொண்ட அக்னியும், மற்ற தேவர்களும் பெரும் பிரச்சனைக்கு உள்ளானார்கள். தங்கள் உடம்பில் ஏற்பட்டுள்ள துன்பத்தைப் போக்கிக் கொள்ள வழி தெரியாமல் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். விஷ்ணு அவர்களைப் பார்த்து நாம் அனைவரும் சிவனை நோக்கிப் பிரார்த்தனை செய்வோம். அது ஒன்றுதான் வழி என்றார். அனைவரும் சிவனை தியானித்துப் பிரார்த்தனை செய்தனர். சிவன் எதிர்ப்பட்டு அக்னியைத் தவிர மற்ற தேவர்கள் அனைவரும் உள்ளே இருக்கின்றதை வாந்தி எடுத்துவிடுமாறு கட்டளை இட்டார். அவர்களும் அப்படியே செய்தனர். அதனால் தங்கள் உடல் துன்பம் தீர்ந்தனர். அக்னியைப் பொறுத்தவரை யாராவது குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தால் அவர்களிடம் சூடு உண்டாக்கும் முறையில் இந்த ஆற்றலை அவர்களுக்கும் செலுத்திவிடு என்று சிவன் கட்டளை இட்டார்.
இந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்ட அக்னி, ஒரு குளத்தின் கரையில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது சப்த ரிஷிகளின் மனைவிமார்கள் அனைவரும் குளிப்பதற்காக அந்தக் குளத்திற்கு வந்தனர். எல்லைமீறிய குளிரில் அவர்கள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அக்னி அங்கே கணகனவென்று எரியும் நெருப்பாக இருந்தான். ரிஷிபத்தினிகள் நெருப்பைக் கண்டதும் அதில் குளிர்காய விரும்பினர். அக்னியும் ஒரு தேவன் ஆகையால், வசிட்டன் மனைவியாகிய அருந்ததி மட்டும் அவன் பக்கத்தில் போவது தவறு என்று சொல்லி, எட்டி நின்றுவிட்டாள். ஆனால் மற்ற அறுவரும் அக்னியின் பக்கத்தில் சென்றனர். அவர்களுடைய உடம்பில் உள்ள சதை, தோல் என்பவற்றின் மூலமாக தன்னிடமிருந்த ஆற்றலை அவர்களுக்குள் செலுத்திவிட்டான். ரிஷிபத்தினிகள் வீடு திரும்பினர். நடந்ததைக் கேள்வியுற்ற அறுவரும் அவர்களை மனைவியாக ஏற்றுக் கொள்ள மறுத்து, நட்சத்திரங்களாகப் போகக்கடவீர் என்று சாபமிட்டனர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 4 | 5 | 6 | 7 | 8 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 6 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவனுடைய, அக்னி, சிவன், அனைவரும், தேவர்கள், மற்ற, மூலம், ஆற்றலை, சென்று, கோயிலுக்குள், இல்லை, தங்கள்