ஸ்கந்த புராணம் - பகுதி 4 - பதினெண் புராணங்கள்
நீலகண்டர்
அமிர்தத்தைப் பெறவேண்டுமென்று தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையப் புறப்பட்டனர். மேரு மலையை மத்தாகவும், வாசுகியை நாணாகவும் வைத்துக் கடைய முற்பட்டபொழுது, மத்து தங்குவதற்கு அடை இல்லாமையால் கடைய முடியவில்லை. விஷ்ணு கூர்ம வடிவம் கொண்டு மேருமலையை முதுகில் தாங்கினார். அதனால் பாற்கடல் கடையப்பட்டது. தேவர்களுடைய பேராசை காரணமாக கடைய வேண்டிய வேகம் அதிகப் படுத்தப்பட்டவுடன், பாற்கடலிலிருந்து மிகப் பெரிய விஷம் வெளியே வந்து தேவருலகம் முழுவதையும் மூடிக் கொண்டது. அதன் பயனாகத் தேவர்கள் உடல் கருத்தனர். விஷ்ணுவோ விஷம் பரவியதால் நீல நிறத்தைப் பெற்றுவிட்டார். யாரும் தாங்க முடியாத நிலை வந்தவுடன் கணேசர் சிவனிடம் சென்று உலகைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறியவுடன் சிவன் அந்த விஷத்தை எடுத்து உண்டு விட்டார். அது அவர் கண்டத்தில் தங்கி, அதனை நீலநிறமாக மாற்றி விட்டது. அதிலிருந்து அவருக்கு நீலகண்டன் என்ற பெயர் வந்தது.
ராகு என்ற பாம்பு பல தலைகளைக் கொண்டதால் தேவர்களை மிகவும் அச்சுறுத்தி வந்தது. தேவர்கள் சிவனிடம் முறையிட சிவன் அந்தப் பாம்பின் தலைகளை எல்லாம் கிள்ளிப் போட்டு விட்டு ஒரே தலையுடன் இருந்த ராகுவை தலையில் சூடிக் கொண்டார். ராகுவின் கதை மற்றப் புராணங்களில் வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது)
சிவலிங்க வரலாறு
சிவலிங்கத்தின் இலக்கணத்தை ஒருமுறை அகஸ்தியருக்கு நந்தி விளக்கிக் கூறினார். சத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களையும் தன்னுள் பெற்று நிற்பவள் பிரகிருதி ஆவாள். யுக முடிவில் இந்த முக்குணங்களும், பிரகிருதியும் பரமாத்மாவில் சென்று லயித்து விடுகின்றன. அவ்வாறு லயித்த நிலையில் அது லிங்க வடிவாகக் காட்சி அளிக்கிறது. முக்குணங்களும் அதனுள் அடங்கி விடுதலின், லிங்கம் நிர்குணமாக விளங்குகிறது. இந்த லிங்க வடிவிலிருந்து சிவன் வெளிப்பட்டு மனைவி, பிள்ளைகள் என்பவருடன் மக்கள் ஏற்றுக் கொள்ளுகின்ற முறையில் காட்சி அளிக்கின்றார்.
தாரகாசுரன் கதை
தாட்சாயணி தட்சனுடைய யாகத்தில், யாக குண்டத்தில் விழுந்து உயிரை விட்டாள். தாட்சாயணி இல்லாமையால் சிவன் மிகவும் மனம் மாறுபட்ட நிலையில் எதிலும் ஈடுபடாமல் தவம் செய்து கொண்டிருந்தார். சிவன் தேவர்களுக்கு உதவ மாட்டார் என்று தெரிந்தவுடன் அசுரர்கள் மிக மகிழ்ச்சி அடைந்தனர்.
தைத்தியர்களுள் ஒருவனாகிய நமுச்சி என்பவனின் மகன் தாரகன் பிரம்மாவைக் குறித்து கடுந்தவம் இயற்றினான். அவன் தவத்திற்கு மெச்சிய பிரம்மா என்ன வரம் வேண்டும் என்று கேட்டபொழுது, 'யாராலும் வெல்லப்படாத ஒர் ஆற்றல் வேண்டும் என்று தாரகன் கேட்டான். அத்தகைய ஒரு வரத்தைத் தர தனக்கு ஆற்றல் இல்லை என்று பிரம்மன் கூறிவிட்டு, 'அதற்குப் பதிலாக உனக்கு ஒரு நல்ல வரத்தைத் தருகிறேன். ஒரு குழந்தைதான் உன்னை வெல்ல
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 4 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், வேண்டும், கடைய