ஸ்கந்த புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
மனமிரங்கிய சிவன் நந்திக்கும் தன் காவலர்களில் ஒரு இடத்தைத் தந்தார். (இக்கதை கூர்மபுராணத்தில் வேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது)
சிவபக்தர்கள் பற்றிய வேறு கதைகள்
சிவ புண்ணியத்தைச் செய்பவர்கள் சிவலோகம் செல்வர். சிவன் கோயிலில் கைகளால் கூட்டி மெழுகுதலும், கால்களால் கோயிலை வலம் வருதலும் சிவ புண்ணியமாகும். இது பற்றிய கதை வருமாறு:
பறந்து செல்லும் ஒரு பூச்சி சிவன் கோயிலுக்குள் புகுந்து, சிவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தைச் சாப்பிடச் சென்றது. அது இறக்கையை படபடவென்று அடித்துக் கொண்டதால் கோயிலில் இருந்த தூசி அப்பால் போயிற்று. அந்தப் பூச்சி இறந்தவுடன் நேரே சிவலோகம் சென்று பலகாலம் அங்குத் தங்கி இருந்துவிட்டு மறுபடியும் காசிராஜன் மகளாகப் பூமியில் பிறந்தது. காசிராஜன் மகளாகப் பிறந்தும் அப்பெண் தினந்தோறும் சிவன் கோயிலுக்குச் சென்று தன் கைளாலேயே கோயிலைக் கூட்டி மெழுகி வந்தாள். இச் செயலைக் கண்ட உத்தாலகா முனிவர் "மகளே, உன்னிடம் நூற்றுக்கணக்கான பணியாளர் உள்ளனர். அவர்களில் ஒருவரை இவ்வேலையைச் செய்யுமாறு ஏவாமல் நீ ஏன் இதனைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அந்த அரசகுமாரி சிவத் தொண்டு என்பது, என் கைகளாலேயே செய்யப்பட வேண்டும். இது தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை என்று கூறினாள்.
சிவனை பூஜித்து இராவணன் பத்துத் தலைகளைப் பெற்றான். மேலும் வரங்கள் பெறவேண்டும் என்ற எண்ணத்தால் போனபிறகு சிவன் வெளிப்பட்டு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, யாராலும் வெல்லப்படாத வரம் வேண்டும் என்று கேட்டான். அந்த வரத்தைப் பெற்றுக் கொண்ட இராவணன் சிலகாலம் கழித்து தன் ஒன்றுவிட்ட சகோதரன் ஆகிய குபேரனைப் பார்க்க கைலை மலைக்குச் சென்றான். இராவணனைத் தடுத்து நிறுத்திய நந்தி, குபேரன் வேறு ஒரு பணியில்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 3 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், நந்தி, வேடன், வேண்டும், வேறு, அந்த, வந்து, செயலைக்