ஸ்கந்த புராணம் - பகுதி 2 - பதினெண் புராணங்கள்
சிவனுடைய பணியாளர்கள், சிவகணங்கள் ஆகியவர்கள் மிகக் கொடுமையான ஆயுதங்களைத் தாங்கி யாகசாலைக்கு விரைந்தனர். சினம் கொண்ட சிவன் தன் ஜடாமுடியில் இருந்து ஒரு முடியை எடுத்துக் கீழே எறிந்தவுடன் அந்த முடி ஒரு பயங்கர உருவமாகப் பரிணமித்தது. மூன்று கண்களையும், ஆயிரம் கைகளையும், வீரபத்திரர் என்ற பெயரையும் கொண்ட அவ்வுருவம் சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் அமர்ந்திருந்தது. சிவன் விட்ட உஷ்ணமான பெருமூச்சிலிருந்து பல கிருமிகளும், அழிவைத் தரும் கிருமிகளும் வெளிவந்தன. அதன் மூச்சிலிருந்து மகாகாளி உதயமாயினாள். அந்தக் கூட்டம் முழுவதும் தட்சன் யாக சாலையில் புகுந்தது. பிருகு, புஷா போன்ற முனிவர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். இவர்கள் இருவரையும் சூரியனின் அம்சம் என்றும் கூறுவர். தட்சனை நேசித்து யாகத்திற்கு வந்த பிரம்மா, விஷ்ணு ஆகிய இருவரும் தோற்கடிக்கப்பட்டனர். தட்சன் தலை அறுக்கப்பட்டது. வீரபத்திரனும், அவனது படையும் முழு அழிவை ஏற்படுத்தின.
தட்சனின் தந்தையாகிய பிரம்மன் சிவனிடத்தில் வேண்டிக் கொள்ள, எல்லையற்ற கருணையுடன் சிவன் யாகசாலைக்கு வந்தார். அனைத்தையும் பார்வையிட்ட அவர், தட்சனை மன்னித்து அவனை மீண்டும் உயிர்ப்பிக்க எண்ணினார். ஆனால் தட்சன் தலை அறுத்த வீரபத்திரன், அத்தலையை யாக குண்டத்தினுள் போட அத்தலை முழுவதும் எரிந்து சாம்பலாயிற்று. வேறு வழியின்மையின், ஒரு வெள்ளாட்டுத் தலையை அறுத்து தட்சன் உடம்பில் ஒட்டவைத்து அவனை உயிர்ப்பித்தார் சிவன். அவமானப்பட்ட தட்சன், சிவனை வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். முற்றும் அழிந்து விட்ட யாகசாலையை அதன் பழைய நிலைக்குக் கொண்டு வந்தார் சிவன். அன்றிலிருந்து தட்சன் பெரிய சிவ பக்தன் ஆனான.
சிவ புண்ணியம்
சிவன் கோயிலுக்குப் போவது, கோயிலைத் துடைத்து மெழுகிச் சுத்தம் செய்வது, கோயிலுக்கு விளக்கிடுவது, தூபம், தீபம் ஏற்றுவது ஆகியவை சிவ புண்ணியங்களாகும்.
கோயில் கட்டுவது, நாள் ஒன்றுக்கு ஒன்று முதல் மூன்று முறை சிவன் கோயிலுக்குச் செல்வது ஆகிய செயல்களும் பெரும் புண்ணியத்தைத் தரும்.
நந்தியின் கதை
அவந்தி நகரத்தில் நந்தி என்ற ஒரு வைசியன் வாழ்ந்து வந்தான். வாணிபம், கால்நடை வளர்ப்பு என்ற இருதுறைகளிலும் செல்வம் சேகரித்துப் பெருஞ் செல்வந்தனாக வாழ்ந்து வந்தான். அவந்தியின் பக்கத்தில் இருந்த ஒரு பெரிய குளக்கரையில் ஒரு பெரிய சிவன் கோயில் இருந்தது. நந்தி தினந்தோறும் அக்குளத்தில் மூழ்கி, பொன்னையும், மணியையும் சிவனுக்கு அளித்து வழிபட்டு வந்தான்.
நந்தி வழிபட்ட அதே லிங்கத்தை ஒரு வேடனும் வழிபட்டு வந்தான். தினந்தோறும் அவன் வழிபட வரும்போது சிவலிங்கத்தின் எதிரே இருந்த பொன், மணி, பூக்கள் ஆகியவற்றைக் காலால் எற்றிவிட்டுத் தான் கொண்டு வந்த மான்கறி, வில்வம் ஆகியவற்றைச் சிவனுக்கு அர்ப்பணித்து வழிபட்டான். தான் அளித்த பொன்னும், மணியும் சிதறிக் கிடப்பதைக் கண்ட நந்தி ஒருநாள்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 24 | 25 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்கந்த புராணம் - பகுதி 2 - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சிவன், தட்சன், வந்தான், நந்தி, பெரிய, வந்த