13. ஸ்கந்த புராணம் - பதினெண் புராணங்கள்
பதினெட்டுப் புராணங்களில் பாடல்களின் அடிப்படையில் பார்த்தால் ஸ்கந்த புராணம் மிகப் பெரியதாகும். இதில் உள்ள மொத்தப் பாடல்கள் 81,000 ஆகும். வேறு எந்தப் புராணமும் இவ்வளவு அதிகப் பாடல்களைப் பெற்றிருக்கவில்லை. இதைவிடப் பெரிய ஒன்று உண்டு என்றால் அது ஒரு லட்சம் பாடல்களைக் கொண்ட வியாச பாரதமே ஆகும். சங்கர பகவானின் மகனாகிய ஸ்கந்தனால் இப்புராணம் சொல்லப்பட்டமை யின் அவருடைய பெயரையே இப்புராணம் தாங்கி நிற்கிறது. இப்புராணம் இரண்டு வடிவுடன் உள்ளது. ஒன்று சம்ஹிதை (தொகுப்பு) என்ற பெயருடன் உள்ளது. அது 1. சனத் குமார சம்ஹிதை-36,000 பாடல்கள், 2. சூத சம்ஹிதை-6000, 3. சங்கர சம்ஹிதை-30,000 பாடல்கள், 4. வைஷ்ணவ சம்ஹிதை-5,000 பாடல்கள், 5. பிரம்ம சம்ஹிதை-3000 பாடல்கள், 6. செளர சம்ஹிதை-1,000 பாடல்கள் என்ற முறையில் முதல் தொகுப்பு உள்ளது.
மற்றொரு வடிவு காண்டம் எனப்படும். அவை: 1. மஹேஸ்வரி-இது கேதார காண்டம்; குமாரிகா காண்டம் அருணாசல மஹாத்மிய காண்டம் என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. 2. வைஷ்ணவ காண்டம்-இது பூமிவராக காண்டம் உத்கல காண்டம், பத்ரிகாசரம மஹாத்மியம், வைசாக மஹாத்மியம், ஸ்ரீ அயோத்ய மஹாத்மியம் என்ற எட்டுப் பிரிவுகளைக் கொண்டது. 3. பிரம்ம காண்டம்-இது சேது மஹாத்மியம் தர்மாரண்ய மஹாத்மியம் சாதுர்மாஸ்ய மஹாத்மியம் பிரம்மோத்ர காண்டம் ஆகிய நான்கு பிரிவுகளைக் கொண்டது. 4. காசி காண்டம்-இது பூர்வார்த்த உத்தாரார்த்த ஆகிய இரு பிரிவுகளைக் கொண்டது. 5. அவந்தி காண்டம்அவந்தி ஷேத்ரா மஹாத்மியம், ரேவாகாணம் ஆகிய இருபிரிவுகளைக் கொண்டது. 6. நாகர காண்டம்பூர்வார்த்த, உத்தரார்த்த ஆகிய இருபிரிவுகளைக் கொண்டது. 7. பிரபாச காண்டம்-துவாரகா மஹாத்மியம் என்ற பிரிவினைக் கொண்டது.
இந்தப் புராணத்தில் பல்வேறு சடங்குகள் பற்றி மிக விரிவாகப் பேசப்பட்டுள்ளது. பிரசித்திபெற்ற சத்திய நாராயணன் கதை இப்புராணத்திலும் உள்ளது. மாறுபட்ட பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசும் இப்புராணம் ஒருவரால் குறிப்பிட்ட ஒரு பொருளைப் பற்றிப் பாடப் பெறவில்லை என்பதை அறிய முடியும். சடங்குகள் பற்றிப் பல்வேறு புராணங்களிலும், பிறவற்றிலும் பேசப்பட்டுள்ள வற்றை ஒரே இடத்தில் தொகுத்துக் கொடுப்பது நலம் என்று கருதிய சிலர் இதில் தம் விருப்பத்தை நிறை வேற்றிக் கொண்டனர். அறிவு ஊட்டும் பற்பல கதைகள் இப்புராணத்தில் உள்ளன. ஒருவன் தான் விரும்பிய தெய்வத்தை ஒருமுகப்பட்ட மனத்தோடு வழிபடுவானே யானால் அதற்குரிய பயனை அவன் உறுதியாகப் பெறுவான் என்ற அடிப்படை இப்புராணம் முழுவதிலும் பரவி நிற்கிறது.
நைமிசாரண்ய வனத்தில் ஒரு பெரிய யாகத்தைப் பார்ப்பதற்காக முனிவர்கள் அனைவரும் கூடிஇருந்தனர். யாகத்தைக் காணவந்த லோமஹர்ஷனரைப் பார்த்து முனிவர்கள் புலோமஹர்ஷனரே! நீங்கள் வேதவியாசரின் சிடராயிற்றே. சிவனுடைய பெருமையை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொள்ள, அவர் சொல்ல ஆரம்பித்தார்.
தட்சயாகம்
தட்சப் பிரஜாபதி என்பவன் தன் மகளாகிய தாட்சாயணியைச் சிவனுக்கு மணம் செய்து கொடுத்திருந்தான். திருமணத்திற்குப் பிறகு தன் மருமகனாகிய சிவன் தனக்குரிய மரியாதை தரவில்லை என்று தட்சன் மனம் புழுங்கினான். அந்தப் புழுக்கத்தின் காரணமாக அவன் சிவனையும், தாட்சாயணியையும் கண்ட இடங்களிலெல்லாம் தரக் குறைவாகப் பேசி வந்தான்.
சிவனை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தால் தட்சன் ஒரு யாகத்தைத் தொடங்கினான். தெய்வங்கள், தேவர்கள், முனிவர்கள் ஆகிய அனைவரையும் அந்த யாகத்திற்கு வருமாறு அழைப்பு அனுப்பிய தட்சன் வேண்டுமென்றே சிவனை, தாட்சாயணியை அழைக்காமல் விட்டு விட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
13. ஸ்கந்த புராணம் - Skanda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, காண்டம், மஹாத்மியம், சம்ஹிதை, கொண்டது, பாடல்கள், இப்புராணம், ஆகிய, பிரிவுகளைக், உள்ளது, தட்சன், முனிவர்கள், பல்வேறு, பற்றிப்