16. மச்ச புராணம் - பதினெண் புராணங்கள்
வடமொழியில் இப்புராணத்தின் பெயர் மத்ஸ்ய புராணம் என்று வழங்கப்படும்.
விஷ்ணு, மீன் அவதாரம் எடுத்து பெருவெள்ளத்தில் இருந்து மண்ணையும், குடிகளையும் காப்பாற்றுவது பற்றிப் புராணம் பேசுகிறது. தொன்மையான இக்கதை பார்சிகளின் வேதமாகிய அவஸ்தாவிலும், கிரேக்கப் பழங்கதைகளிலும் இடம் பெற்றுள்ளதாகும்.
மச்ச அவதாரத்தில், வேதத்தை எடுத்துச் சென்று நீருக்கடியில் வைத்திருந்த ஹயக்கிரீவன் என்ற அசுரனைக் கொன்று வேதத்தை மீட்டுக் கொடுத்த கதை இதிலடங்கும். இந்தியாவில் உள்ள சைவம், வைணவம், சாக்தம், செளரம், காணாபத்தியம், கெளமாரம் ஆகிய ஆறு சமயங்களும் வேதங்களை ஒப்புக் கொள்வதால், இந்தப் புராணத்தையும் ஏற்றுக் கொள்கின்றன.
14000 பாடல்களைக் கொண்ட இப்புராணம், மேலே கூறிய ஆறுவகைச் சமயங்களில் குறிப்பிட்ட ஒரு சமயத்துக்கு உரியது என்று கூறமுடியாது.
முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் பலரும் கூடி ஒரு யாகம் நடத்தினர். யாகம் முடிந்தபின் லோமஹர்ஷனரைப் பார்த்து இதுவரை பல புராணங்களை எங்களுக்குக் கூறினர்கள். மேலும் கேட்க வேண்டும் என்ற ஆசையால் உங்களை நாடுகிறோம் என்று கூறினார்கள்.
லோமஹர்ஷனர், "புராணங்களில் எல்லாம் மிகப் பழைமையானதும், புண்ணியம் வாய்ந்ததும் ஆன மச்ச புராணத்தை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மிக்க கவனத்துடன் அதைக் கேட்பீர்களாக" என்ற முன்னுரையுடன் லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார்.
விஷ்ணுவும், மனுவும்
முன்னொரு காலத்தில் மனு என்ற மன்னன் இப்பூமியை ஆட்சி செய்து வந்தான். இவன் முதல் மனு என்று மச்ச புராணம் கூறினாலும், அதே நேரத்தில் இவன் சூரியன் மைந்தன் என்றும் கூறுகிறது (மற்றப் புராணங்களின்படி சூரியன் மைந்தனாகிய மனு ஆவான்,) உரிய காலத்தில் மனு வேந்தன் அரசைத் தன் மகனிடம் ஒப்புவித்து விட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்றான். ஆயிரம் வருடங்கள் தவம் செய்த பிறகு பிரம்மா அவன் எதிரே தோன்றினார். 'உனக்கு என்ன வரம் வேண்டும்’ என்று பிரம்மா கேட்க, மனு பின்வருமாறு பதில் கூறினான். "பிரம்மனே! என் விருப்பத்தையெல்லாம் ஒரே ஒரு வரத்தில் கேட்டு விடுகின்றேன். அண்மைக் காலத்திலோ அல்லது பலகாலம் கழித்தோ பிரளயம் வந்து இவ்வுலகத்தை அழிக்கப் போகிறது. அந்த அழிவுக் காலத்தில் நான் மட்டும் இருந்து இந்த உலகத்தையும் எல்லா உயிர்களையும் காக்கும் பணியைச் செய்ய வேண்டுகிறேன்” என்றான். அதுகேட்ட பிரம்மன், "அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தான்.
சிலகாலம் சென்றபிறகு ஒரு நாள், தவசியாகிய மனு பக்கத்தில் உள்ள குளத்தில் நீராடச் சென்றான். குளித்த பிறகு, பிதுர்க்கடன் செய்வதற்காக இரண்டு கைகளையும் குவித்து அதில் நீரை முகந்தான். கைக்குள் இருந்த நீரில் மிகச்சிறிய மீன் குஞ்சு இங்கும் அங்கும் நீந்திச் சென்றது. அதை விட்டுவிட மனமில்லாத மனு அதைத் தன் கமண்டலத்துள் போட்டான். மறுநாள் கமண்டலத்தை விடப் பெரிதாகிவிட்ட அந்த மீன், 'மனுவே இந்தக் கமண்டலம் சிறிதாக இருக்கிறது. பெரிய இடத்தில் என்னை விடவும் என்று கூற, மன்னன் அதை ஒரு தொட்டியில் விட்டான். ஒரே நாளில் தொட்டி முழுவதையும் அடைத்துக் கொண்டது அந்த மீன். மறுபடி குளத்தில் விட, குளத்தைவிடப் பெரிதாக மீன் வளர அதை கங்கையில் விட, கங்கையை அடைத்துக் கொண்டு பெரிதாக வளர, இறுதியில் மீனை சமுத்திரத்தில் விட்டான். கடல் சிறிதாகும்படி மீன் வளர்ந்து கடலையே அடைத்துக் கொண்டது. இது கண்டு அதிசயித்த மனு
தேடல் தொடர்பான தகவல்கள்:
16. மச்ச புராணம் - Matsya Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, மீன், காலத்தில், அடைத்துக், அந்த, ", புராணம், மச்ச