11. இலிங்க புராணம் - பதினெண் புராணங்கள்
இலிங்கம் என்பது ஒரு குறியீடாகும். பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஒரு விதையாகும். பரப்பிரம்மம், அலிங்கம் என்று சொல்லப்படும் நாமம், ரூபம் கடந்த பொருளாகும். நிர்குணமானதாகும். முக்குணங்களின் வடிவமாகிய பிரகிருதியுடன், நிர்குணப் பிரம்மம் தொடர்பு கொள்ளும் பொழுது, வடிவமற்றதாகிய இப்பிரகிருதி வடிவுடைய இப்பிரபஞ்சமாகத் தோற்றுவிக்கப்படுகிறது. இப்பிரபஞ்சத் தோற்றத்திற்கு மூலமாகிய பிரகிருதி மகாதேவனுடன் தொடர்பு கொண்டு தோற்றுவிக்கப்படுகிறது.
“பரப்பிரம்மம் நிர்குனமானதாய், லிங்க வடிவையும் தாண்டி இருப்பினும், அந்தப் பரப்பிரம்மமே லிங்கம், பிரகிருதி ஆகிய அனைத்திற்கும் மூலமாய் அமைந் துள்ளது. அலிங்கம் என்பது சிவனையே குறிக்கும். அந்த அலிங்கமே சிவனோடு தொடர்புடைய லிங்கமாகி அந்த லிங்கத்தோடு தொடர்புடையது சைவம் எனப்படும்.” (லிங்கபுராணம் 1-3-)
“லிங்கம் என்ற சொல்லுக்கு தன்னைத்தானே தோற்றுவித்துக்கொண்டு, தனித்து பிரபஞ்சத்தையும் தன்னுள் அடக்கி இருப்பது என்பது பொருளாகும். மகாதேவியே மாபெரும் பெண் தெய்வமாவாள். பிரகிருதியே பிரபஞ்சத்தின் விதைகளைத் தாங்கி நிற்பவள் லிங்கபுராணம் 1-19-16)
இப்புராணம் இரண்டு பெரும் பகுதிகளைக் கொண்டது. சிவ வழிபாட்டுக்காரர்களுக்கு இப்புராணம் ஒரு கையேடாகும். இப்புராணம் சிவமூர்த்தத்தை வழிபடுவதற்குரிய வழிகளைச் சொல்வதுடன் சிவனுடைய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் என்ற ஐந்து வடிவங்களையும் உள்ளடக்கியதாகும். பிரபஞ்சங்களின் உற்பத்தி அழிவு மறுஉற்பத்தி ஆகிய நேரங்களில் சிவம் இந்த ஐந்து வடிவங்களில் தேவையானதை மேற்கொண்டு பிரம்மனுக்கு ஆணையிட்டுப் படைப்பைத் தொடங்குமாறு ஏவுகிறது. இது விஷ்ணுவை, சிவனுக்குக் கீழ் பணிபுரிபவராகக் காட்டுகிறது. இன்று 11,000 பாடல்களுடன் காணப்படும் மூலமாக இருந்த பழைய லிங்க புராணம் இழக்கப்பட்டதை ஈடுசெய்யும் முறையில் அமைந்துள்ளதாகும். மூல புராணத்தில் காணப்படாத பல தாந்திரீக வித்தைகள் இப்புராணத்தில் கூறப்பட்டுள்ளன.
பல நூல்களில் லிங்கபுராணத்தில் இருந்து இன்றுள்ள லிங்க புராணத்தில் காணப்படவில்லை. ஆதலால்தான் மூல லிங்க புராணம் இழக்கப்பெற்ற நிலையில் அந்த இடத்தை நிரப்ப இந்தப் புதிய லிங்க புராணம் இயற்றப்பட்டுள்ளது. இப்புராணங்களைப் படிக்கப் போகும் நாம், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் வணங்கிவிட்டுத்தான் புராணங்களைப் படிக்க வேண்டும். ஒருமுறை நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் அனைவரும் கூடியிருந்தனர். அப்பொழுது சுதா ஜாதியைச் (சத்திரியத் தகப்பனுக்கும், பிராமணத் தாய்க்கும் பிறந்தவர்) சேர்ந்த லோமஹர்ஷனர் அங்கே வந்தார். பல தீர்த்தங்களில் நீராடிவிட்டு உலகைச் சுற்றி வரும் நாரதரும் எதிர்பாராதவிதமாக அங்கே வந்தார். முனிவர்கள் லோமஹர்ஷனரைப் பார்த்து, இப்புராணங்களை எல்லாம் இயற்றிய வேதவியாசரிடம் நேரடியாகப் பாடங் கேட்கும் பாக்கியம் செய்தவர் நீங்கள். ஆகவே நாரதரும் இங்கிருக்கும் நேரத்தில் இலிங்க புராணத்தை எங்கட்குச் சொல்ல வேண்டும் என்று கேட்க, லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார்:
பிரபஞ்சம்
ஆதியில் பரப்பிரம்மம் ஒற்றையாக இருந்தது. எங்கும் எதுவும் இல்லை. அது தன்னைத்தானே மூன்றாகப் பிரித்துக் கொண்டு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூன்று வடிவெடுத்தது. இதை அடுத்து எங்கும் நிறைந்த நீர் அதில் தோன்றி முட்டை, பிரம்மன் படைப்பைத் துவங்குதல், காலப்பிரமாணம், யுகங்களின் அளவு ஆகியவை ஏனைய புராணங்களைப் போலவே இங்கும் உள்ளன. இதில் புதிதாகக் கண்டுள்ள செய்தி வருமாறு உற்பத்தி துவங்கு முன்னர் தனது வேலைப் பளு மிகுதியாக இருப்பதால் தனக்கு உதவி செய்யுமாறு பிரம்மன் சிவனை வேண்டிக்
தேடல் தொடர்பான தகவல்கள்:
11. இலிங்க புராணம் - Linga Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, லிங்க, இப்புராணம், புராணம், அந்த, ஆகிய, என்பது