15. கூர்ம புராணம் - பதினெண் புராணங்கள்
விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து மன்னன் இந்திரத் துய்மனுக்குச் சொல்லியதே இப்புராணமாகும். இப்புராணத்தில் பக்திமார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகள், பரப்பிரம்மம் பற்றிய ஞானம், ஆன்ம விடுதலை அடைய செய்யப்பட வேண்டிய ஆன்மிகப் பயிற்சிகள் என்பவை பற்றிப் பேசப்பெறுகிறது. நைமி சாரண்ய வனத்தில் கூடிய முனிவர்களுக்கு, விஷ்ணு கூறியவற்றை லோமஹர்ஷனர் கூறினார்.
கூர்ம புராணத்தின் அழிந்துபோன மூலப் பகுதியில் பிராமி, பாகவதம், செளரி வைஷ்ணவி என்ற நான்கு பிரிவுகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் இப்பொழுது கிடைக்கும் கூர்ம புராணத்தில் பிராமி சம்ஹிதை மட்டுமே உள்ளது. இதில் 6,000 பாடல்கள் மட்டுமே உள்ளன.
இந்து சமயத்தின் மூன்று முக்கியப் பிரிவுகளான சைவம், வைணவம், சாக்தம் என்பவை பற்றிப் பல செய்திகளை இப்புராணம் கூறுகிறது. சைவ, வைணவப் போராட்டத்திற்கு அப்பாற்பட்டு, வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு முயற்சி. அதாவது சிவன், விஷ்ணு ஆகிய இருவரும் வெவ்வேறானவர் அல்லர் ஒருவரே என்ற ஒருமைப்பாட்டை மிகவும் அழுத்தமாகக் கூறுவது இப்புராணமே ஆகும். இறைவன் ஒருவனே ஆனாலும் அவனுக்குப் பல பெயர்கள் இருப்பது போல, விஷ்ணு சிவன் ஆகிய இரு பெயர்கள் இருப்பினும், இருவரும் ஒருவரே ஆவர் என்றும், வேற்றுமை பாராட்டுவது தவறு என்றும் கூறுவது இப்புராணமே ஆகும். சக்தி வழிபாடு செய்யும் சாக்தம் வேறு அன்று என்றும், சக்தி என்பது சக்திமானிடம் இருப்பது போல சக்தி எனப்படும் பெண் தெய்வமும், சிவனிடம் அடக்கம் என்றும் இப்புராணம் கூறுகிறது.
நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் கூடி யாகம் செய்ய ஆரம்பித்தனர். அங்கு இருந்த லோமஹர்ஷனரைப் பார்த்து, “வேதவியாசரின் சீடராகிய தாங்கள் எல்லாப் புராணங்களைப் பற்றியும் அறிந்தவர். எங்களுக்குக் கூர்ம புராணம் பற்றி விளக்க வேண்டும்” என்று கேட்க, லோமஹர்ஷனர் கூற ஆரம்பித்தார்.
கூர்ம புராணம், மஹா புராணங்களில் பதினைந்தாவது புராணமாகும்.
லட்சுமியின் தோற்றம்
வெகு காலத்திற்கு முன்னர், தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைய ஆரம்பித்தனர். மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பினை நாண் ஆகவும் வைத்துக் கடைய ஆரம்பித்தனர். மந்தர மலை தங்குவதற்கு விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து, தன் முதுகில் மலையைத் தாங்கிக் கொண்டார். கடலைக் கடைந்த பொழுது, செல்வத்திற்கு அதிபதியான லட்சுமிதேவி வெளிப்பட்டு, விஷ்ணுவுடன் கலந்தார். இந்திரனும், மற்ற தேவர்களும், முனிவர்களும் லட்சுமியின் அழகைக் கண்டு திகைத்து, 'யார்’ என்று கேட்டனர். அதற்கு விஷ்ணு, "இவரே லட்சுமி ஆவாள். சக்தி என்றும் அழைக்கப்படுவார். லட்சுமியின் உதவியுடனேயே நான் இந்த உலகத்தையும், அதில் உள்ள மக்களையும் என்னுடைய மாயையினால் உண்டாக்கி இருக்கிறேன். இலட்சுமி என்னிலிருந்து வேறுபட்டவள் அல்லள் என்றாலும், இலட்சுமியே எனக்கு எல்லா சக்தியும் கொடுப்பவள் என்று கூறி, இந்திரத்துய்மன் கதையை விஷ்ணு கூற ஆரம்பித்தார்.
இந்திரத்துய்மன்
வெகு காலத்திற்கு முன்னர், இந்திரத்துய்மன் என்ற அரசன் ஒருவன் இவ்வுலகை ஆண்டு வந்தான். இவ்வரசன் இறந்து, அடுத்த பிறவியில் ஒரு பிராமணனாகப் பிறந்தான். நேர்மையும், நல்லொழுக்கமும் கொண்ட இப்பிராமணன், நீண்ட நாட்கள் தவம் செய்து வந்தான். தவத்தின்
தேடல் தொடர்பான தகவல்கள்:
15. கூர்ம புராணம் - Kurma Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, விஷ்ணு, கூர்ம, என்றும், சக்தி, இந்திரத்துய்மன், லட்சுமியின், ஆரம்பித்தனர், இப்புராணம்