கருட புராணம் - பகுதி 3 - பதினெண் புராணங்கள்
சாளக்கிராமம்
சாளக்கிராமம் என்பது விஷ்ணுவைக் குறிக்கும் ஒரு வடிவமாகும். இது பலவகைப்படும். சங்கு, சக்கரம், பத்மம் ஆகிய அடையாளங்களை இதே வரிசையில் பெற்றிருப்பது கேசவ சாளக்கிராமம். இம்முறை மாறி சக்கரம், சங்கு பத்மம், கதை என்ற வரிசையில் பெற்றிருப்பது மாதவ சாளக்கிராமம். பத்மம், கதை, சக்கரம், சங்கு வரிசையில் இருப்பது நாராயண சாளக்கிராமம். கதை, பத்மம், சங்கு, சக்கரம் வரிசையில் இருப்பது கோவிந்த சாளக்கிராமம். பத்மம், சங்கு சக்கரம் கதை வரிசையில் இருப்பது விஷ்ணு சாளக்கிராமம். சங்கு, பத்மம், கதை, சக்கரம் இருப்பது மதுசூதனன் சாளக்கிராமம். கதை, சக்கரம், சங்கு பத்மம் வரிசையில் இருப்பது திரிவிக்கிரம சாளக்கிராமம். பத்மம், சக்கரம், கதை, சங்கு வரிசையில் அமைந்திருப்பது பத்மநாப சாளக்கிராமம். சக்கரம், சங்கு, கதை, பத்மம் வரிசையில் அமைந்திருப்பது வாசுதேவ சாளக்கிராமம். கதை, பத்மம், சக்கரம், சங்கு வரிசையில் அமைந்திருப்பது ஸ்ரீகிருஷ்ண சாளக்கிராமம்.
கோயில் அமைப்பு
கோயில்கள் ஐந்து வகைகளில் அமையலாம். அவை முறையே வைரஜா, புஷ்பகா, கைலாசா, மாளகா, திரிபிஷ்டபா. இவற்றிடையே வேறுபாடு இவற்றின் அமைப்பில் உள்ளதாகும். வைரஜா சதுர வடிவிலும், புஷ்பகா நீண்ட சதுர வடிவிலும், கைலாசா வட்ட வடிவிலும், மாளகா முட்டை வடிவிலும், திரிபிஷ்டகா அறுகோண வடிவிலும் அமைந்திருக்கும். இந்த முழு அமைப்பில் உள்ளே வேண்டுமான மாற்ற அமைப்புகள் இருக்கலாம். கோயிலின் நுழைவாயிலின் பக்கத்தில் நாடகம் நடத்துவதற்குக் களம் அமைக்கப்பட வேண்டும். கோயில் பூசாரி, கோயிலுக்குச் சற்றுத் தள்ளி குடியிருக்க வேண்டும். கோயிலைச் சுற்றி நந்தவனங்கள், குளங்கள் முதலியன இருத்தல் வேண்டும்.
சோதிட நம்பிக்கைகள்
27 நட்சத்திரங்களில் அஸ்வினி, அனுஷம், ரேவதி, மிருகசீரிடம், மூலம், புனர்வசு, பூசம், ஹஸ்தம் என்ற இந்த நட்சத்திரங்கள் பிரயாணத்திற்கு உகந்தவை. கிணறு, குளம் வெட்ட பரணி, கார்த்திகை ஆயில்யம், மகம், மூலம், விசாகம், பூரட்டாதி என்ற நட்சத்திரங்கள் உகந்தவை. இதே நட்சத்திரங்கள் தானியம் அறுவடை செய்யவும், கோயில் கட்டவும் உகந்தவை. விதை விதைக்க ரேவதி, அஸ்வினி, சித்திரை, ஸ்வாதி, ஹஸ்தம், புனர்பூசம், அனுஷம், மிருகசீரிடம் ஆகியவை ஏற்றவையாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கருட புராணம் - பகுதி 3 - Garuda Puranam - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, சாளக்கிராமம், பத்மம், சக்கரம், சங்கு, வரிசையில், வடிவிலும், இருப்பது, உகந்தவை, நட்சத்திரங்கள், வேண்டும், அமைந்திருப்பது, கோயில்