எரேமியாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 50
2 பபிலோனின் வீழ்ச்சி- இஸ்ராயேலின் மீட்சி: "புறவினத்தார் நடுவில் பறைசாற்றுங்கள், தெரியப்படுத்துங்கள்@ கொடியேற்றுங்கள், அறிவியுங்கள், மறைக்கவேண்டாம்@ ~பபிலோன் பிடிப்பட்டது, பேல் அவமானம் அடைந்தான்@ மெரோதாக் தோற்றுப் போனான், அதன் படிமங்கள் அவமானமுற்றன, அதன் சிலைகள் கலங்கி நின்றன ~ என்று சொல்லுங்கள்,
3 ஏனெனில் வடக்கிலிருந்து அதற்கெதிராய் ஓர் இனம் வரும், அதன் நாட்டைப் பாழாக்கும்@ அதில் யாரும் குடியிருக்க மாட்டார்கள், மனிதனும் மிருகமும் அதை விட்டு ஓடிப் போவார்கள்.
4 அந்நாட்களில், அக்காலத்தில், இஸ்ராயேல் மக்களும் யூதா மக்களும் திரும்பி வருவார்கள்@ வரும் போதே அவர்கள் அழுது கொண்டு வருவர், அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவரைத் தேடி வருவர், என்கிறார் ஆண்டவர்.
5 சீயோனுக்கு வழி கேட்பார்கள், அவர்கள் கண்ணெல்லாம் அதிலேயே இருக்கும்@ ~வாருங்கள் என்றென்றைக்கும் மறக்க முடியாத உடன்படிக்கையால் ஆண்டவரோடு நாம் சேர்ந்துகொள்வோம்~ என்பார்கள்.
6 நம் மக்கள் காணாமற் போன ஆடுகளாய் இருந்தார்கள்@ அவர்களின் ஆயர்களே அவர்களை வழிதவறச் செய்தார்கள், மலைகளின் மேல் அலைய அடித்தார்கள், மலையிலிருந்து குன்றுக்கு இறங்கிப் போனார்கள், தங்களுடைய கிடையை முற்றிலும் மறந்து விட்டார்கள்.
7 கண்டவர்கள் அனைவரும் அவர்களை விழுங்கினார்கள் ~நாம் குற்றமற்றவர்கள்@ ஏனெனில் அவர்கள் தான் ஆண்டவருக்கு எதிராய்ப் பாவஞ் செய்தார்கள், உண்மையான கிடையும், தங்கள் தந்தையரின் நம்பிக்கையுமான ஆண்டவருக்கு எதிராய் நடந்தனர்~ என்று அவர்களின் பகைவர் சொல்லிக் கொள்வார்கள்.
8 பபிலோனிலிருந்து தப்பி ஓடிப்போங்கள், கல்தேயர் நாட்டிலிருந்து வெளியேறுங்கள், மந்தைக்கு முன் போகும் கடாக்களைப் போலிருங்கள்.
9 இதோ பபிலோனுக்கு எதிராக வட நாட்டிலிருந்து, மக்களினங்கள் பலவற்றைத் தூண்டிக் கொண்டு வருவோம், அவர்கள் அதற்கு எதிராய் அணிவகுத்து நிற்பார்கள், அதுவும் அவர்களால் கைப்பற்றப்படும்@ அவர்களின் அம்பு வில் வீரரின் அம்பு போன்றது, வெற்றி பெற்றாலன்றித் திரும்பி வராது.
10 கல்தேயர் நாடு கொள்ளையடிக்கப்படும், அதனைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவார்கள், என்கிறார் ஆண்டவர்.
10 கல்தேயா நாடு கொள்ளையடிக்கப்படும், அதனைக் கொள்ளையிடுவோர் அனைவரும் நிறைவு பெறுவார்கள் என்கிறார் ஆண்டவர்,
11 "நம் உரிமைச் சொத்தைச் சூறையாடியவர்களே, நீங்கள் அக்காளித்தாலும், அகமகிழ்ந்தாலும், மேய்ச்சலுக்குப் போன காளை போலக் கும்மாளம் அடித்தாலும், வலிமை மிக்க வரிக்குதிரைகள் போலக் கனைத்தாலும்,
12 உங்கள் தாய் மிகுந்த அவமான மடைவாள், உங்களைப் பெற்றவள் வெட்கி நாணுவாள்@ இதோ மக்களினத்துள் கடையளாய் இருப்பாள், பாழடைந்ததும் வறண்டதுமான பாலை நிலமாவாள்.
13 ஆண்டவருடைய கோபத்தின் காராணமாய் அது குடியிருப்பாரற்ற காடாகும், அதன் வழியாய்ப் போகிற எவனும் திகைப்பான், அதன் தண்டனைகளை எல்லாம் கண்டு நகைப்பான்.
14 அண்டை நாடுகளில் வாழும் வில் வீரர்களே, நீங்களனைவரும் பபிலோனுக்கு எதிராக அணிவகுங்கள்@ அதனை அம்பால் தாக்குங்கள், அம்புமாரி பொழியுங்கள், ஏனெனில் ஆண்டவருக்கு எதிராய்ப் பாவஞ் செய்தது.
15 அதனைச் சுற்றி நாற்புறமும் வந்து ஆர்ப்பரியுங்கள், அது சரணடைந்தது@ அதன் அடிப்படைகள் சரிந்தன, மதில்கள் தகர்க்கப்பட்டன@ ஏனெனில், இது தான் ஆண்டவர் வழங்கும் பழி: நீங்களும் அதனைப் பழி வாங்குங்கள், அது செய்தது போல நீங்கள் அதற்குச் செய்யுங்கள்.
16 பபிலோனிலிருந்து விதைப்பவனைச் சிதறடியுங்கள், அறுவடைக் காலத்தில் எவனும் அரிவாள் பிடிக்க விடாதீர்கள்@ கொடியவனின் வாளுக்கு அஞ்சி அவனவன் தன் தன் மக்களிடம் திரும்புவான், அவனவன் தன் தன் சொந்த நாட்டுக்கு ஓடிப்போவான்.
17 இஸ்ராயேல் சிதறிக் கிடக்கும் மந்தை, சிங்கங்கள் அதனை வெளியில் விரட்டின@ முதற் கண் அசீரிய அரசன் அதனை விழுங்கினான், பின்னர் பபிலோன் மன்னன் நபுக்கோதனசார் அதன் எலும்புகளை முறித்தான்.
18 ஆதலால் இஸ்ராயேலின் கடவுளாகிய சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அசீரிய அரசனை நாம் தண்டித்தது போலவே, இதோ, பபிலோனிய மன்னனையும் அவன் நாட்டையும் தண்டிப்போம்.
19 இஸ்ராயேலையோ அதன் மேய்ச்சலுக்கு அழைத்து வருவோம், செழிப்பான கார்மேலிலும் பாசானிலும் மேயும்@ எப்பிராயீம் மலைகளிலும் கலாயாத் நாட்டிலும் அதன் விருப்பம் முற்றிலும் நிறைவுறும்.
20 அந்நாட்களில், அக்காலத்தில், இஸ்ராயேலின் அக்கிரமத்தைத் தேடிப் பார்ப்பார்கள், ஆனால் ஒன்றும் காணப்படாது@ யூதாவில் பாவத்தைத் துருவித் தேடுவார்கள், ஆனால் அதிலே பாவம் இராது@ ஏனெனில் நாம் யாரை எஞ்சியவர்களாய் விட்டோமே அவர்களை மன்னிப்போம், என்கிறார் ஆண்டவர்.
21 மெராத்தாயீம் நாட்டுக்கு எதிராகப் புறப்படு, பெக்கோது குடிகளுக்கு எதிராகப் போருக்கெழு@ அவர்களை வெட்டி வீழ்த்து, முற்றிலும் அழித்துவிடு, நாம் உனக்குச் சொல்வதெல்லாம் செய், என்கிறார் ஆண்டவர்.
22 இதோ, நாட்டிலே அமர்க்களத்தின் ஆரவாரம்@ பேரழிவின் கூக்குரல் கேட்கின்றது.
23 அனைத்துலகிற்கும் சம்மட்டியாய் இருந்தது நொறுங்கித் தூளானதெவ்வாறு? நாடுகளுக்குள் பபிலோன் பாலைவெளியானதெப்படி?
24 பபிலோனே, உனக்கு வலை வீசினோம், நீ விழுந்தாய்@ உனக்குத் தெரியாமலே நீ பிடிபட்டாய்@ ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக எழும்பினாய்.
25 ஆண்டவர் தமது படைக்கலக் கொட்டிலைத் திறந்து, கோபத்தின் படைக்கலங்களை வெளிக் கொணர்ந்தார்@ ஏனெனில் சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் அவற்றைக் கொண்டு, கல்தேயர் நாட்டில் செய்ய வேண்டிய அலுவலுண்டு.
26 எப்பக்கமுமிருந்து அதற்கெதிராய்ப் புறப்படுங்கள், அதன் களஞ்சியங்களைத் திறங்கள்@ தானியக் குவியல் போலக் குவித்து அதை முற்றிலும் அழியுங்கள், ஒன்றையும் அதில் மீதியாக விட வேண்டாம்.
27 அதன் இளங்காளைகளையெல்லாம் வெட்டுங்கள், அவர்கள் கொலைக்களத்திற்குப் போகட்டும்! அவர்கள் அனைவர்க்கும் ஐயோ கேடு! அவர்கள் நாளும், தண்டனைக் காலமும் வந்து விட்டதே.
28 இதோ, பபிலோன் நாட்டிலிருந்து அவர்கள் தப்பிப் பிழைத்து ஓடுகிறார்கள்@ திருக்கோயிலை முன்னிட்டு நம் கடவுளாகிய ஆண்டவர் வாங்கிய பழியைச் சியோனில் அறிவிக்க ஓடுகிறார்கள்.
29 பபிலோனின் அகந்தை: "பபிலோனுக்கு எதிராய் வர வேண்டுமென்று வில் வீரர் அனைவரையும் அழையுங்கள்@ அதனைச் சுற்றிலும் வளைத்துக் கொள்ளுங்கள், எவனும் தப்பியோட விடாதீர்கள்@ அதன் செயலுக்கேற்றவாறு செய்யுங்கள், அது செய்த யாவற்றின்படியும் நீங்கள் செய்யுங்கள்@ ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக எழும்பி நின்றது, இஸ்ராயேலின் பரிசுத்தரை அவமதித்தது.
30 ஆதலால் அதன் இளைஞர்கள் பொதுவிடங்களில் மடிவார்கள், அதன் வீரர் அனைவரும் அந்நாளில் அழிவார்கள், என்கிறார் ஆண்டவர்.
31 அகங்காரியே, இதோ நாம் உனக்கெதிராய் வருகிறோம், ஏனெனில் உன்னுடைய நாள் வந்து விட்டது@ உன்னைத் தண்டிக்க வேண்டிய காலம் நெருங்கிற்று, என்கிறார் சேனைகளின் ஆண்டவராகிய இறைவன்.
32 அகங்காரி இடறி விழுவான், அவனைத் தூக்கி விட எவனுமிரான்@ அவனுடைய பட்டணங்களில் நெருப்பு வைப்போம், சுற்றிலுமுள்ள அனைத்தையும் அது சுட்டெரிக்கும்.
33 ஆண்டவர்: இஸ்ராயேலின் மீட்பர்: "சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: இஸ்ராயேல் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள், யூதா மக்கள் அவர்களோடு துன்புறுத்தப்படுகிறார்கள், அவர்களை அடிமைப்படுத்தினவர் அனைவரும் அவர்களைத் தங்களோடு வைத்திருக்கிறார்கள், அவர்களை விட்டு விட மறுக்கிறார்கள்.
34 ஆனால் அவர்களுடைய மீட்பர் வல்லமை மிக்கவர், அவருடைய பெயர் சேனைகளின் ஆண்டவர் என்பதாம்@ அவர்களுடைய வழக்கை அவரே நடத்துவார், அப்போது பூமிக்கு அமைதி தந்து பபிலோனின் அமைதியைக் குலைப்பார்.
35 கல்தேயர் மேலும், பபிலோனின் குடிமக்கள் மேலும், அதன் தலைவர்கள், ஞானிகள் மேலும் வாள் வரும், என்கிறார் ஆண்டவர்.
36 நிமித்திகர் மேல் வாள் வரும், அவர்கள் அறிவிலிகளாகி நிற்பார்கள்@ போர் வீரர்கள் மேல் வரும், அவர்கள் அழிக்கப்படுவார்கள்!
37 குதிரைகள் மேலும், தேர்ப்படை மேலும், அதன் நடுவில் இருக்கும் கூலிப்படைகள் மேலும் வாள் வரும், அவர்கள் பேடிகள் ஆவார்கள்! அதன் எல்லாச் செல்வங்கள் மேலும் வாள் வரும், அவை கொள்ளையடிக்கப்படும்!
38 அதன் நீர் நிலைகள் மேல் வறட்சி வரும், அவை யாவும் வற்றிப் போகும்! ஏனெனில் அது படிமங்கள் மலிந்த நாடு, அவர்களோ சிலைகளைப் பற்றிப் பெருமையாய்ப் பேசுகின்றனர்.
39 ஆதலால் பபிலோனில் காட்டு மிருகங்களும், அவற்றோடு கழுதைப் புலிகளும் வாழும், அங்கே தீக் கோழிகள் குடியிருக்கும்@ என்றென்றைக்கும் மக்கள் அங்கே குடியறேப் போவதில்லை, எல்லாத் தலைமுறைகளுக்கும் அது குடியற்றுக் கிடக்கும்.
40 சோதோம், கொமோரா, அவற்றின் சுற்றுப் புற நகரங்களைக் கடவுள் அழித்த போது நிகழ்ந்தவாறே, அங்கே மனிதன் எவனும் குடியிருக்க மாட்டான், எவனும் தங்கியிருக்க விரும்பான், என்கிறார் ஆண்டவர்.
41 "இதோ வடக்கிலிருந்து மக்களினம் ஒன்று வருகிறது, வலிமையான மக்களும், மன்னர்கள் பலரும் பூமியின் கோடியிலிருந்து எழும்பி வருகிறார்கள்.
42 அவர்கள் வில்லையும் ஈட்டியையும் பிடித்துள்ளார்கள், அவர்கள் கொடியர்கள், இரக்கமற்றவர்கள்@ அவர்களுடைய ஆரவாரம் கடலோசை போல் இரையும்@ பபிலோன் என்னும் மகளே, உனக்கெதிராய்ப் போருக்கு அணி வகுத்து குதிரைகள் மேல் ஏறிக் கொண்டு வருகிறார்கள்.
43 பபிலோனிய மன்னன், அவர்கள் வருகின்ற செய்தியைக் கேள்விப்பட்டான், அவனுடைய கைகள் விலவிலத்துப் போயின@ நெருக்கடியும் வேதனையும் பிரசவப் பெண்ணைச் சூழ்வது போல் அவனை வளைத்துக் கொள்ளும்.
44 இதோ, சிங்கம் ஒன்று யோர்தான் ஆற்றையடுத்த அடர்ந்த காட்டிலிருந்து செழிப்பான மேய்ச்சல் நிலத்துக்குள் பாய்ந்து வந்து துரத்துவது போல், அவர்களை நாம் நாட்டிலிருந்து துரத்துவோம்@ நமக்கு விருப்பமானவனை அதற்குத் தலைவனாக்குவோம். நமக்குச் சமமானவன் யார்? நம்மை அழைத்து வர ஆணையிடுபவன் யார்? நம் முன்னிலையில் எதிர்த்து நிற்கும் மேய்ப்பவன் எவன்?
45 ஆதலால் பபிலோனுக்கு எதிராக ஆண்டவர் செய்திருக்கும் யோசனையையும் கல்தேயர் நாட்டுக்கு விரோதமாக அவர் எண்ணியிருக்கும் எண்ணங்களையும் கேளுங்கள்: மந்தையில் மிகச் சிறியளவும் இழுத்துப் போகப்படும்@ அவற்றின் கிடை அதைக் கண்டு திகைப்படையும்@
46 பபிலோன் பிடிப்பட்ட ஆரவாரத்தால் நிலம் நடுங்கும், அதன் கூக்குரல் மக்களினத்தார் நடுவில் கேட்கும்."
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 46 | 47 | 48 | 49 | 50 | 51 | 52 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எரேமியாஸ் ஆகமம் - பழைய ஏற்பாடு, ஆண்டவர், ஏனெனில், என்கிறார், வரும், அவர்களை, மேலும், ", நாம், கல்தேயர், மேல், அனைவரும், ஆண்டவருக்கு, எதிராக, பபிலோன், ஏற்பாடு, சேனைகளின், எவனும், இஸ்ராயேலின், மக்கள், கடவுளாகிய, வாள், முற்றிலும், அவர்களுடைய, வந்து, நாட்டிலிருந்து, ஆதலால், பபிலோனுக்கு, பழைய, பபிலோனின், கொண்டு, வில், நடுவில், எதிராய், நாடு, கொள்ளையடிக்கப்படும், நாட்டுக்கு, போலக், நீங்கள், ஆகமம், எரேமியாஸ், மக்களும், போல், இஸ்ராயேல், அவர்களின், அங்கே, திருவிவிலியம், மீட்பர், கூறுகிறார், பபிலோனிய, ஆன்மிகம், மன்னன், யார், அவனவன், கிடக்கும், அசீரிய, பற்றியும், அழைத்து, செழிப்பான, வேண்டிய, விடாதீர்கள்@, வீரர், வளைத்துக், எழும்பி, ஒன்று, கூக்குரல், அவனுடைய, குதிரைகள், வருகிறார்கள், எதிராகப், அவற்றின், கண்டு, அதில், தான், எதிராய்ப், பாவஞ், வடக்கிலிருந்து, பபிலோனிலிருந்து, குடியிருக்க, விட்டு, என்றென்றைக்கும், யூதா, அக்காலத்தில், செய்தார்கள், அந்நாட்களில், படிமங்கள், போகும், திரும்பி, வருவர், வாழும், செய்தது, நாட்டைப், அதனைச், கோபத்தின், பெறுவார்கள், அம்பு, வருவோம், அதனைக், கொள்ளையிடுவோர், நிறைவு, செய்யுங்கள்