1 நாள் ஆகமம் - பழைய ஏற்பாடு

அதிகாரம் 4
2 சோபாலின் மகனான ராயியா யாகாத்தைப் பெற்றார். யாகாத் அகுமாயி, லாத் என்பவர்களைப் பெற்றார். சாராத்தியரின் வம்சங்கள் இவையே.
3 எத்தாமின் சந்ததியார், எஸ்ராகேல், எசெமா, எதெபோசு ஆகியோரே@ இவர்களுடைய சகோதரியின் பெயர் அசலெல்புனி.
4 பானுவேல் கேதோரின் தந்தை. ஏசேர் ஓசாவின் தந்தை. இவர்கள் அனைவரும் பெத்லெகேமின் தந்தையான எப்பிராத்தாவுக்கு முதல் மகனாகப் பிறந்த கூருடைய புதல்வர்களாம்.
5 தேக்குவாவின் தந்தையாகிய அசூருக்கு ஆலா, நாரா என்ற இரு மனைவியர் இருந்தனர்.
6 நாரா அவருக்கு ஊசாம், ஏப்பேர், தேமனி, அகஸ்தரி என்பவர்களைப் பெற்றாள். இவர்களே நாராவின் புதல்வர்கள்.
7 ஆலாவின் புதல்வர், செரேத், இசார், எத்னான் ஆகியோராவர்.
8 கோஸ் என்பவர் அனோப், சொபொபா ஆகியோரையும், ஆருமின் மகனான அகரெகேலின் வழி வந்தோரையும் பெற்றார்.
9 யாபேசு தம் சகோதரரை விட அதிகப் புகழ் பெற்றவராய் விளங்கினார். அவருடைய தாய், "நான் துக்கத்தோடு அவனைப் பெற்றேன்" என்று சொல்லி அவருக்கு யாபேசு என்று பெயரிட்டிருந்தாள்.
10 யாபேசு இஸ்ராயேலின் கடவுளை நோக்கி, "நீர் என்னை இன்மொழி கூறி ஆசீர்வதித்தருளும்@ என் நிலங்களின் எல்லைகளையும் விரிவுபடுத்தியருளும். உமது அருட்கரம் என்னோடு என்றும் இருக்கட்டும்@ தீமை என்னை மேற்கொள்ளாதவாறு காத்தருளும்" என்று வேண்டிக்கொண்டார். அவர் கேட்டதைக் கடவுள் அருளினார்.
11 சுவாவின் சகோதரர் சலேப் மகீரைப் பெற்றார்.
12 இவர் எஸ்தோனைப் பெற்றார். எஸ்தோன் பெத்திராபாவையும் பெசேயையும், நாவாஸ் நகரத்துக்குத் தந்தையாகிய தெகின்னாவையும் பெற்றார். இவர்களே ரெக்கா என்ற ஊரில் வாழும் மனிதர்கள்.
13 கெனேசுவின் புதல்வர் ஒத்தோனியேல், சராயியா ஆகியோராவர். ஒத்தோனியேலுக்கு ஆத்தாத், மவொநதி என்ற மக்கள் இருந்தனர்.
14 மவொநதி ஒப்ராவைப் பெற்றார். சராயியா தொழிலாளி பள்ளத்தாக்கு என அழைக்கப்பெறும் இடத்தின் தலைவரான யோவாபைப் பெற்றார். ஏனெனில் அவ்விடத்தில் தொழிலாளர்கள் குடியிருந்தனர்.
15 எப்பொனேயின் மகன் கலேபின் புதல்வர்: ஈர், ஏலா, நகாம் ஆகியோராவர்@ ஏலாவின் மகன் பெயர் கெனெசு.
16 யலெலேலுடைய புதல்வர்: சீப், சீப்பா, தீரியா, அஸ்ராயேல் என்பவர்கள்.
17 எஸ்றாவுடைய புதல்வர்: ஏத்தோர், மேரேத், எப்பேர், யலோன் என்பவர்கள். மறுபடியும் அவன் மரியாம், சம்மாயி என்பவர்களையும், எஸ்தமோவின் தந்தையாகிய எஸ்பாவையும் பெற்றார்.
18 மேலும் அவருடைய யூத மனைவி கேதோரின் தந்தையாகிய யரேதையும், செக்கோவின் தந்தையாகிய ஏபேரையும், சனோயேயின் தந்தையாகிய இக்குதியேலையும் பெற்றாள். இவர்களே மெரேத்தின் மனைவியும் பார்வோனின் மகளுமான பெத்தியாவின் புதல்வர்கள்.
19 கெயிலாவின் தந்தையாகிய நகாமின் சகோதரியும் ஒதியாவினுடைய மனைவியுமான ஒரு பெண்கார்மி, மக்காத்தியைச் சேர்ந்த எஸ்தாமோ ஆகியோரைப் பெற்றெடுத்தாள்.
20 சீமோனுடைய புதல்வர்: அம்னோன், ரின்னா, பெனானான், திலோன் என்பவர்கள். எசியுடைய புதல்வரோ சோகேது, பென்சோகேது என்பவர்கள்.
21 யூதாவின் மகன் சேலோவுடைய புதல்வர்: லெக்காவின் தந்தையாகிய ஏரும், மரெசாவின் தந்தையாகிய லாதாவும், பெத்தாஷ்பேயாவில் இருந்த சணற் புடவை நெய்யும் வீட்டைச் சேர்ந்த வம்சங்களும், யோவாக்கீமும்,
22 கோசேபா ஊரைச் சேர்ந்த மனிதர்களும், மோவாவை ஆண்டபின் லாகே ஊருக்குத் திரும்பியிருந்த யோவாசும் சாராபும் ஆகிய இவர்களேயாம்.
23 இவ்வரலாறுகள் மிகவும் பழமையானவை. இப்போது அவர்கள் நெதாயிம், கெதெரா என்ற இடங்களில் குயவர்களாய் வாழ்ந்து வருகின்றனர். அரசனின் வேலையைக் கவனித்து வரும் பொருட்டு அவர்கள், அங்கே குடியேறினர்.
24 சிமேயோனுடைய புதல்வர்: நமுவேல், யாமின், யாரிப், சாரா, சவுல் என்பவர்கள்.
25 இவருடைய மகன் பெயர் செல்லும்@ இவருடைய மகன் பெயர் மப்சாம்@ இவருடைய மகன் பெயர் மஸ்மா.
26 மஸ்மாவுடைய புதல்வரில் ஒருவர் பெயர் அமுயேல். இவர் சக்கூரைப் பெற்றார்@ சக்கூர் செமேயியைப் பெற்றார்.
27 செமேயிக்குப் பதினேழு புதல்வரும், ஆறு புதல்வியரும் இருந்தனர். அவருடைய சகோதரர்களுக்கோ பிள்ளைகள் ஒரு சிலரே. அவர்களின் சந்ததி யூதாவின் புதல்வரைப் போலப் பெருகவில்லை.
28 இவர்கள் பெத்சபே, மொலதா, அசர்சுகால்,
29 பாலா, ஆசோம், தொலாத்,
30 பாதுயெல், ஒரமா, சிசெலேக்,
31 பெத்மற்காபொத், அசார்சுசிம், பெத்பெராயி, சாரிம் ஆகிய இடங்களில் குடியிருந்தனர். தாவீது அரசர் காலம் வரை இவையே அவர்களின் நகர்களாய் இருந்தன.
32 எத்தாம், அவேன், ரெம்மோன், தொக்கேன், ஆசான் என்ற ஐந்து ஊர்களும் அவர்களுக்குச் சொந்தமாய் இருந்தன.
33 அவற்றை அடுத்துப் பாகால் வரை இருந்த எல்லாச் சிற்றூர்களும் அவர்களுடையனவே. இவ்விடங்களில் தான் அவர்கள் வாழ்ந்து வாந்தார்கள். அவர்களுக்குரிய தலைமுறை அட்டவணையும் இருந்தது.
34 மேலும் மொசொபாப், எம்லெக் என்பவர்களும்,
35 அமாசியாவின் மகன் யோசா, யோவேல், அசியேலின் மகன் சரையாவின் புதல்வன் யோசபியாக்குப் பிறந்த ஏகு, எலியோவெனாயி,
36 யாக்கோபா, இசுகையா, அசையா, அதியேல், இஸ்மியேல், பனையா ஆகியோரும்,
37 சமையாவின் புதல்வன் செம்ரியுடைய மகன் இதையாவுக்குப் பிறந்த அல்லோனின் மகன் செப்பையுடைய புதல்வன் சிசா ஆகியோரும்,
38 தத்தம் குலங்களில் தலைவர்களாக விளங்கி வந்தனர். இவர்கள் குலவழி வந்தோர் பலுகிப் பெருகினர்.
39 அவர்கள் தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடிக் காதேரின் எல்லையான பள்ளத்தாக்கின் கீழ்புறம் வரை சென்றனர்.
40 மிகச் செழிப்பான மேய்ச்சல் நிலங்களைக் கண்டுபிடித்தனர். முன்னர் அங்கு தான் காமின் சந்ததியார் வாழ்ந்து வந்தனர். வளப்பமும் அமைதியும் உடைய பரந்த நாடு அது.
41 மேலே சொல்லப்பட்டவர்களோ யூதாவின் அரசர் எசேக்கியாசின் காலத்தில் அங்குச் சென்று அங்கே வாழ்ந்து வந்த மெயீனியரைக் கொன்று போட்டனர்@ அவர்களுடைய கூடாரங்களை அழித்து இந்நாள் வரை அவர்களுள் எவரும் அங்கிராதவாறு அவர்களை ஒழித்து விட்டனர். தங்கள் ஆடுகளுக்குத் தேவையான மிகச் செழிப்பான மேய்ச்சல் நிலங்கள் அங்கு இருந்தமையால் அவர்கள் அங்கேயே குடியேறினார்கள்.
42 சிமேயோனின் புதல்வராகிய இவர்களில் ஐந்நூறு வீரர் ஏசியின் புதல்வர் பல்தியாஸ், நாரியாஸ், ரப்பையாஸ், ஓசியேல் என்பவர்களைத் தலைவர்களாக கொண்டு, செயீர் மலைக்குச் சென்றனர்.
43 அமலேக்கியரில் மீதியாய் எஞ்சி இருந்தவர்களைக் கொன்று விட்டு, அங்கே குடியேறினார்கள். அவர்கள் இன்று வரை அங்கேயே வாழ்ந்து வருகின்றார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 28 | 29 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
1 நாள் ஆகமம் - பழைய ஏற்பாடு, பெற்றார், மகன், புதல்வர், தந்தையாகிய, பெயர், வாழ்ந்து, ஏற்பாடு, என்பவர்கள், பழைய, இருந்தனர், பிறந்த, புதல்வன், நாள், புதல்வர்கள், இவர்கள், அங்கே, யூதாவின், இவருடைய, அவருடைய, இவர்களே, யாபேசு, ஆகமம், அரசர், அவர்களின், இருந்தன, தான், தங்கள், அங்கு, மேய்ச்சல், கொன்று, அங்கேயே, குடியேறினார்கள், செழிப்பான, மிகச், தலைவர்களாக, வந்தனர், இடங்களில், சென்றனர், ஆகியோரும், இவர், சந்ததியார், கேதோரின், தந்தை, நாரா, இவையே, என்பவர்களைப், திருவிவிலியம், ஆன்மிகம், மகனான, அவருக்கு, பெற்றாள், குடியிருந்தனர், மேலும், இருந்த, மவொநதி, சராயியா, ஆகியோராவர், ", என்னை, ஆகிய