மருத்துவப் பேட்டி - செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்

நேரடியாக புகைப்பிடிப்பவர்களுடன் ஒப்பிடும் போது செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங் மூலம் குறைந்த அளவுக்கே சிக்கல்கள் ஏற்படும் என்று நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இதுவரை கருதப்பட்டு வந்ததைக் காட்டிலும் ஆபத்தான கெடுதல்கள் உண்டாவதாக தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
பொதுவாக ரத்தத்தில் காட்டினைன் என்ற பொருளின் அளவு 50 முதல் 60 சதவீதம் அளவுக்கு இருந்தால் மட்டுமே இதய நோய் ஆபத்து அதிகமாக இருக்கும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால் செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங் மூலம் இந்த ஆபத்தான காட்டினைன் அளவு சகட்டுமேனிக்கு கூடுவதாக தெரிய வந்துள்ளது. சாதாரணமான, அதாவது மந்தமான அளவுக்கு செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங் வாய்ப்பு உள்ளவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 25 முதல் 30 சதவீதம் இருக்கிறதாம்.
ஆகையால் புகைப்பிடித்தால்தானே ஆபத்து என்று யாரும் நினைக்க வேண்டாம். புகை போக்கிகள் வெளியே விடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் பெரிய ஆபத்து காத்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - ஆபத்து, ஸ்மோக்கிங், ஹேண்ட், செகண்ட்