மருத்துவப் பேட்டி - உயிர்க்கொல்லிகளில் இருந்து பாதுகாப்பு
- மருத்துவ நிபுணர் குணசேகரன் கருப்பையா
மனிதர்களுக்கு ஸ்மால்பாக்ஸ் எனப்படும் அம்மை நோய் வருவது போல எலிகளுக்கு மவுஸ்பாக்ஸ் என்ற அம்மை நோய் வருகிறது. (இந்த இரண்டு நோய்களுக்கும் காரணமான வைரஸ் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.) இது சாதாரண நிகழ்வாக தெரிந்தாலும் என்னக் காரணத்தால் சில எலிகளுக்கு மட்டும் வருகிறது. மற்ற எலிகளுக்கு வருவதில்லை என்ற விவரம் தெளிவாக அறியப்படும் பட்சத்தில் மனிதர்களை உயிர்க்கொல்லி தாக்குதல்களில் இருந்து காப்பாற்ற முடியும்.
ஸ்மால்பாக்ஸ் போன்ற மவுஸ்பாக்ஸ் வைரஸ் கிருமிகளின் தாக்குதலை எதிர்த்து சமாளிக்கும் எலிகளின் உடம்பில் சைட்டோ கைன்ஸ் என்ற குறிப்பிட்ட புரோட்டீன்கள் உண்டாகின்றன. ஆனால் மவுஸ்பாக்ஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் எலிகளுக்கு இத்தகைய புரோட்டீன்கள் உண்டாவதில்லை. இந்த வித்தியாசத்தை அறிவதன் மூலம் ஸ்மால்பாக்ஸ் நோயை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் அதற்கான சிகிச்சைகளை மேலும் மேம்படுத்த முடியும் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் மருத்துவ நிபுணர் குணசேகரன் கருப்பையா கூறினார். இதன் மூலம் உயிர்க்கொல்லி தாக்குதல்களால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தை தடுத்து நிறுத்த முடியும். உயிர்க்கொல்லி கிருமிகளிடம் இருந்து மனிதர்களையும், சுகாதாரத் துறையினரையும் காப்பாற்ற முடியும்.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க்கில் இரட்டை கோபுரம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி தகர்த்ததை தொடர்ந்து உயிர்க்கொல்லி கிருமிகளை பயன்படுத்தி பயங்கர தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உயிர்க்கொல்லி தாக்குதலில் இருந்து மனிதர்களை காப்பாற்ற வழி பிறந்திருப்பது பெரிய விஷயமாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
உயிர்க்கொல்லிகளில் இருந்து பாதுகாப்பு - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - உயிர்க்கொல்லி, எலிகளுக்கு, முடியும், காப்பாற்ற, ஸ்மால்பாக்ஸ், மவுஸ்பாக்ஸ், இருந்து