மருத்துவப் பேட்டி - சின்னம்மை

- டாக்டர். ஜெயவேலன், ஐ.ஐ.டி
சின்னம்மை ஒரு கெடுதல் இல்லாத நோய் என்றே பலரும் இன்னமும் நினைக்கிறார்கள். ஆனால் இதன்மூலம் நீண்டகால பாதிப்புகள் உண்டாகலாம். உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படக்கூடும். குழந்தைகளின் மூளை, சிறுநீரகம், கண், கல்லீரல் முதலிய உறுப்புகளையும் சிலசமயம் இது பாதிக்கக்கூடும்.
குழந்தைகளை மட்டும்தான் இந்த நோய் தாக்கும் என்ற தவறான நம்பிக்கையும் இருக்கிறது. பருவ வயதினரையும் சின்னம்மைக்கான நுண்கிருமிகள் தாக்கக்கூடும். காய்ச்சல், உடல் வலியைத் தொடர்ந்து தோலில் சிறிய, தடித்த சிவப்பு தோல் திட்டுகல் தோன்றும். பிறகு சிறு கொப்புளங்கள் ஏற்படும். ஒவ்வொரு கொப்புளத்திலும் எக்கச்சக்கமான வைரஸ் கிருமிகள்!
சின்னம்மையால் தாக்கப்பட்டிருக்கும் போது நிமோனியா போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்புண்டு என்பதே இந்த நோயைத் தவிர்க்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.
கர்ப்பிணிப் பெண்களை சின்னம்மை தாக்கும் போது, கருவில் உள்ள குழந்தையும் பாதிக்கப்படலாம்.
சின்னம்மை வைரஸ் நுண்கிருமிகள் சிலசமயம் உடலில் வீரியம் இல்லாமலேயே பலநாட்கள் இருந்து. பிறகு உடலில் எதிர்ப்புசக்தி குறையும் போது அக்கியாக வெளிப்படக்கூடும்.
சின்னம்மை வைரஸ் நுண்கிருமிகள் சிலசமயம் உடலில் வீரியம் இல்லாமலேயே பலநாட்கள் இருந்து, பிறகு உடலில் எதிர்ப்புசக்தி குறையும்போது அக்கியாக வெளிப்படக்கூடும். வயதானவர்களுக்கு அக்கி வரும்போது அவர்களும் மற்றவர்களும் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக சின்னம்மையால் பாதிக்கப்பட்ட முதலிரண்டு நாட்களில் அது பிறருக்குத் தொற்றக்கூடிய வாய்ப்பு மிக அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சின்னம்மையின் அறிகுறிகளான உடல் களைப்பு, காய்ச்சல் போன்றவற்றிற்கு மருந்து கொடுப்பார்களே தவிர. சின்னம்மைக்கு நேரிடையாக மருந்து கிடையாது. தோலில் உண்டாகும் அரிப்பைப் போக்க சாலமைன் லோஷனை தடவச் சொல்வார்கள். வெள்ளைத் துணியின் மீது வேப்பிலைகளைப் படரவிட்டு அதன்மேல் நோயாளிகளைப் படுக்கச் செய்யும் பழக்கம் இங்கு காலம்காலமாக இருக்கிறது. அரிப்பு ஏற்பட்ட இடத்தில் வேப்பிலைக் கொத்தால் வருடிக்கொடுப்பது இதமாகவும் இருக்கும். செப்டிக்கும் ஆகாது என்பது மருத்துவ உலகம் ஏற்றுக் கொண்டது.
தலைக்குக்குளிப்பது குறித்து விதவிதமான நம்பிக்கைகள் உள்ளன. குளிப்பதில் தவறில்லை. ஆனால் கொப்புளங்களின் மேற்பகுதியில் உதிர்ந்துவிட்ட நிலையில் உட்புறம் தண்ணீர் தேங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சின்னம்மை - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - சின்னம்மை, உடலில், வைரஸ், போது, நுண்கிருமிகள், உடல், சிலசமயம், பிறகு