மருத்துவப் பேட்டி - களங்கப்படுத்தும் கரும்புள்ளி - எய்ட்ஸ்

- டாக்டர். சுரேஷ்ராஜ்
ஆதி மனிதர்கள் காட்டுமிராண்டிகளாய்க் கட்டப்பாடின்றி வாழ்ந்து வந்த காலத்தில் ஒழுக்கம் கட்டுப்பாடு உடல் உயிரைப் பேணும் முறை முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை பகுத்தறிவோடு கூடிய பண்பு நலம் போன்றவை இல்லாமல் இருந்திருக்கலாம்.
இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த பெருமக்கள் பிறவி எடுத்ததன் பெரும் பயனை உணர்ந்து அதற்கேற்ற வகையில் நடைமுறை வாழ்க்கையை நல்லமுறையில் அமைத்துக் கொண்டு ஒழுக்கமாக வாழ்ந்து காட்டினார்கள்.
பின்னர் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட நவீன ஆர்ப்பாட்ட வளர்ச்சிகளால் நாகரிக அலங்திகோலங்களால் வாழ்க்கை முறைகள் தடம் புரண்டன. எப்படி எல்லாம் வாழ்ந்து பார்க்க முடியுமோ, அப்படி எல்லாம் வாழ்ந்து பார்க்க முடியுமோ அப்படி எல்லாம் வாழ்ந்துபார்ப்போம் என்ற அறைகூவல்விட்டு தவறான பாதையில், தவறு எனத் தெரிந்தும் வாழ்க்கைக்கு ஒவ்வாத பலவித தீயமுறைகளை இன்றைய தலைமுறையினர் பழக்க வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.
இப்படிப்பட்ட சமுதாயச் சீர் குலைவால் பண்பற்ற வாழ்க்கை முறைகளால் புதிது புதிதாக நோய்கள் தோன்ற ஆரம்பித்துவிட்டன. அவ்விதமான நோய்களுள் ஒன்று தான் எய்ட்ஸ்.
மனித குலம் இன்று ஆபத்துடன் எதிர் நோக்கி நிற்கும் இந்த எய்ட்ஸ் மிகவும் கொடுரமானது. எய்ட்ஸ் என்பது ஒரு குறிபிட்ட நோய் அன்ற பல கோளாறுகளின் மொத்த வெளிப்பாடாகும் இதற்கு இட்டுச்செல்வன பல்பேறு பாலியல் ஒழுங்கீனங்கள்.
இந்த நோய் வெளிக்காட்டும் பாதிப்பை அறிந்து நாகரிகத்தின் உச்சாணிக்கொம்பில நிற்கும் நாடுகளில் உள்ள மக்கள் பயந்து நடுங்கி வண்ணம் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
நாகரிகம் என்ற பெயரில் காமக்களியாட்டங்களில் வரைமுறையின்றி அருவருக்கத்தக்க வகையில் ஈடுபட்டு இயற்கையான வாழ்க்கை முறைகளிலிருந்து விடுபட்டு செயற்கையான போலி வாழ்க்கை வாழும் இன்றைய நாகரிக மனிதனுக்கு இயற்கை தரும் தண்டனைதான் எய்ட்ஸ்.
குடும்ப வாழ்வு நிலைகுலைந்து கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று வாழும் மேலை நாட்டில் தோன்றி வெகுவேகமாய்ப் பல நாடுகளிலும் இந்நோய் பரவி வருகிறது.
குறிப்பாக எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இந்திய இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்கிற புள்ளி விவரம் பண்பாடு பற்றிப் பெருமை பேசிக் கொள்ளும் நம் நாட்டு வரலாற்றைக்களங்கப் படுத்தும் ஒரு கரும் புள்ளியாகும்.
பால்வினை நோய்களின் ஒட்டுமொத்தப் பிரதிபலிப்பான எய்ட்ஸ் நோயைக் குணப்படுத்த இதுவரை மருந்துகள் கண்டு பிடிக்கப்படவில்லை. தடுத்து நிறுத்தவும் மருந்துகள் அறியப்படவில்லை. எனினும் இந்த எய்ட்ஸ் நோயை விரட்டி ஒட்டும் மருந்தைக் கண்டறியும் முயற்சியில் சித்த மருத்துவர்கள் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர் என்பது ஒர் ஆறுதலான செய்தி.
மற்ற பால்வினை நோய்களை எளிதில் குணப்படுத்தி விடலாம். இந்தோய் தவறான வழியில் செல்வோரை மட்டுமன்றி அப்பாவிகளையும் தொற்றக் கூடிய அபாயம் நிறைந்தது. கடந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் எய்ட்ஸ் மற்றும் எய்ட்ஸ் சமபந்தப்பட்ட பால்வினை நோய்களால் 13 இலட்சம் பேர் இறந்துள்ளதாகக் கண்டறியப்பட்டள்ளது. 1996-ஆம் ஆண்டில் 31 இலட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய்க் கிருமியான எச்.ஐ.வி. புதிதாகத் தொற்றும் அபாயம் உள்ளது.
கி.பி. இரண்டாயிரம் ஆண்டுத் தொடக்கத்தில் தமிழகத்தில் 5 இலட்சம் பேரை எய்ட்ஸ் எச்.ஐ.வி. கிருமி தாக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக 80 ஆயிரம் பேர் இறந்து விடக் கூடிய வாய்பும் உள்ளதாக் கருதப்படுகிறது.
முறையற்ற உடலுறவு நடவடிக்கைள் கொள்வோரை எய்ட்ஸ் நோய் தாக்கும் என்பது இன்று நிச்சயிக்கப்பட்ட ஒன்று இத்தகையவருடன் அறியாமையாலோ எதேச்சையாகவோ அல்லது கட்டாயம் காரணமாகவோ உடலுறவு கொள்ளும் பிறருக்கும் எய்ட்ஸ் பரவுகிறது.
முறையற்ற உடலுறவு நடவடிக்கைகள் என்றால் இயற்கை நியதிகளைக் கண்மூடித்தனமாக மீறும் விலை மாதர் தொடர்பு ஒரினச் சேர்க்கை போன்றவையாகும்.
எய்ட்ஸ் - இப்படி ஒரு நோயை மனித குலம் என்றோ ஒரு நாள் சந்திக்கநேரும் என்பதைத் தீர்க்க தரிசனமாகத் தெரிந்துதான் நம் முன்னோர் கற்பு பற்றியும் முறையான தாம்பத்ய உறவுபற்றியும் வலியுறுத்தி வந்துள்ளனர்.
மேலும் அதேபோன்று நமக்கென்று பல விதிமுறைகளையும் ஓழுக்கமான பல பண்பாடுகளையும் கலாசாரங்களையும் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் முக்கியமான ஒன்று தான் கற்பு.
உலகின் வேறெந்த நாட்டிலும் இது போன்ற கற்பு. ஒருவனுக்கு இருத்தி என்ற உண்மையான இல்லற வாழ்க்கைத் தத்துவம். இத்தனை அதிகமாக அழுத்தந்திருத்தமாக வலியுறுத்தபட்டதில்லை.
நமது கலாசாரம் பண்பாடு முதலியன எத்தனைப் பாதுகாப்பான வாழ்க்கையை நமக்கு அமைத்துத் தந்துள்ளது என்பதை இதுபோன்ற சந்தர்ப்பங்களில் மட்டுமே நாம் புரிந்துகொள்ள இயலும்.
முன்னோர் வகுத்த வழிமுறைப்படி நடக்காமல் கேவலம் சிற்றின்ப ஆசைகளால் தடம் புரண்டு மனைவி குழந்தைகள் வேதனைப்படும்படி கீழ் மகனாகிப் பால்வினை நோய்களால் பாதிக்கப்பட்டு இல்லற வாழ்க்கைக்குத் தகுதியற்றப் போய் எய்ட்ஸ் நோய்களுக்க ஆளாகி இறக்க நேரிடுகிறது.
நம் முன்னோர்களின் நேறிமுறைகள் ஒவ்வொன்றுக்கும் அதற்கான காரணம் இருக்கும் அது சரியானது தான் என்ற நாம் உணர வேண்டும். நம் இந்தியக் கலாசாரத்தின் மேன்மையை இன்று அயல்நாட்டினரும் புரிந்து கொண்டு. எப்படியும் வாழலாம் என்ற வாழக்கூடாது. இப்படித்தான் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற இந்தியப் பண்பினைக் கைகொள்ளத் தொடங்கி இருவனுக்கு ஒருத்தி தான் சரி என்று வாழத் துணிந்த பின்னர். நம்மில் சிலர் தம்நிலை தாழ்ந்து தரம் குறைந்து போவது சரியா ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
களங்கப்படுத்தும் கரும்புள்ளி - எய்ட்ஸ் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - எய்ட்ஸ், வாழ்க்கை, பால்வினை, தான், வாழ்ந்து, கூடிய, இலட்சம், உடலுறவு, கற்பு, நோய், என்பது, எல்லாம், காலத்தில், இன்று, ஒன்று