மருத்துவப் பேட்டி - குண்டு குழந்தைளின் இதயத்துக்கு இழப்பு

- டாக்டர் தாமஸ் கிம்பல்
குண்டு குழந்தைகளின் இதயத்தில் அடிக்கடி அபாயகரமான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று புதிய ஆய்வு சொல்கிறது. இயல்பான அளவுக்கு மீறிய உடல் எடை உள்ள குழந்தைகளுக்கு இதய தசைகள் கடினமாகி விடுகின்றன. இதனால் அத்தகைய குழந்தைகள் ஆபத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
சின்சினாட்டியில் உள்ள குழந்தைகள் மருத்துவ மையத்தைச் சேர்ந்த டாக்டர் தாமஸ் கிம்பல் என்பவர் 12 வயதுக்குட்பட்ட 340 குழந்தைகளின் இதயத்தில் ஏற்படும் மாறுதல்கள் பற்றி பரிசோதனைகள் செய்தார். அப்போது குண்டு குழந்தைகளின் இதயத் தசைகள் கடினமாகும் ஆபத்து படிப்படியாக அதிகரிப்பது தெரிய வந்தது.
ஆகையினால் குழந்தைகள் உடல் பெருக்க விடாமல் தடுப்பது மிகவும் முக்கியமானதாகும். அதற்கு வெளிப்புற உடற்பயிற்சிகளில் அவர்களை தவறாமல் ஈடுபடுத்த வேண்டும். உடலில் அதிகப்படியான சேர்ந்த கலோரிகள் எரிக்கப்படும் போது உடல் பருமன் தானாகவே குறைந்து விடும்.
உடல் பருமன் அதிகரிப்பதால் இதயம், சிறுநீரகம் உள்பட முக்கியமான பல உறுப்புகளுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்பு ஏற்படுகிறது. ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. குழந்தைகளுக்கு சிறிய வயதிலேயே இத்தகைய பாதிப்புகள் உண்டாகும் போது, வயது கூட கூட நோயின் தாக்கமும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
குண்டு குழந்தைளின் இதயத்துக்கு இழப்பு - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - உடல், குழந்தைகள், குழந்தைகளின்