மருத்துவப் பேட்டி - சிசேரியன் குழந்தைகளுக்கு அலர்ஜி... ஆபத்து...
சிசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு உணவு அலர்ஜி வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்று ஒரு மருத்துவ இதழ் செய்தி வெளியிட்டு உள்ளது. உணவு அலர்ஜி உள்ள தாய்க்கு சிசேரியன் முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கும், உணவு அலர்ஜிகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர்.
சிசேரியன் முறை வளர்ச்சியை தாமதப் படுத்துகிறது. இந்த பாக்டீரியாக்கள் வழக்கமாக குடல் பகுதியில் காணப்படுகின்றன. இந்த பாக்டீரியாவில் ஏற்படும் தாமதம், வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள், அலர்ஜி தொடர்பான நோய்களை அதிகரித்து விடுகிறது.
அலர்ஜிக்கும் சிசேரியனுக்கும் உள்ள தொடர்பை கண்டு பிடிப்பதற்காக புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஏராளமான பெற்றோர்களை சந்தித்து, குழந்தை பிறந்த முறை, பிரசவ காலத்தில் பயன்படுத்தப்பட்ட மருந்து மாத்திரைகள், குழந்தைகள் முட்டை, மீன், கொட்டை பருப்புகள் ஆகியவற்றை வெறுக்கின்றனவா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. இப்படி சேகரித்த தகவல்களின் படி குழந்தைகள் அலர்ஜி காரணமாக 2.5 வயது முதல் முட்டையை வெறுக்கத் தொடங்குகின்றன. அது போல அலர்ஜி பிரச்சினை உள்ள தாய்க்கு சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு தாயை விட 7 மடங்கு அலர்ஜி பிரச்சினை இருந்தது. இது போன்ற குழந்தைகள் முட்டைகளை வெறுப்பது 4 மடங்கு ஆகும்.
அலர்ஜி பிரச்சினை இல்லாத தாய்க்கு சிசேரியன் மூலம் பிறந்த குழந்தைக்கு அலர்ஜி பிரச்சினை குறிப்பிட்டுச் சொல்லும் படி பெரிய அளவுக்கு இல்லை. அது போல குழந்தைக்கும், பிரசவ காலங்களில் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்களுக்கும் அலர்ஜிக்கும் இடையே எந்த விதமான தொடர்பும் இல்லை.
ஆக பிரசவ முறையில் மட்டுமே குழந்தைகளுக்கு அலர்ஜி பிரச்சினை ஏற்படுகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிசேரியன் குழந்தைகளுக்கு அலர்ஜி... ஆபத்து... - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - அலர்ஜி, சிசேரியன், பிரச்சினை, மூலம், குழந்தைகள், பிரசவ, தாய்க்கு, முறையில், உணவு, உள்ள, பிறந்த