மருத்துவப் பேட்டி - சிசேரியனை விரும்பும் பெண்கள்

- டாக்டர். ராஜசேகர்
சிசேரியன் அறுவை சிகிச்சையை தேர்ந்தெடுக்கும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிரசவம் பற்றிய பயமும், வேதனையும் தான் இதற்கு காரணம். இத்தகைய பாதிப்பு கர்ப்பிணி பெண்களைப் போல அவர்களது குடும்பத்தினரையும் பிடித்து ஆட்டுகிறது. இதனால் வலியப் போய் சிசேரியனை தேர்வு செய்து கொள்கிறவர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
கருவின் வளர்ச்சி பற்றியும், பிரசவம் பற்றியும் போதுமான அளவுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படாமல் இருப்பதே இதற்கு காரணம். பொதுவாக சிசேரியன் செய்ய வேண்டுமானால் வயிற்றில் உள்ள குழந்தை எக்குதப்பாக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை ஒருவகையில் காரணம் என்றாலும், கர்ப்ப காலத்தின் போது நடந்து கொள்ளும் விதம்தான் முக்கிய காரணம்.
இந்த நடந்து கொள்ளும் விதத்தில் நிகழும் தவறான நடவடிக்கைகள், தவறான மருந்துகள் உள்ளிட்ட காரணங்களால் குழந்தை எக்குதப்பாக மாறி விடுவதுண்டு. உதாரணத்துக்கு கர்ப்பிணிகள் ஒரு சாய்த்து படுத்துக் கொள்ள வேண்டும். மல்லாக்க படுக்கக் கூடாது என்று உள்ளது. மல்லாக்க படுத்தால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படும். ஆகையினால் தான் ஒருக்கழித்து படுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். இதுபோன்ற சின்ன சின்ன, அதே சமயம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவற்றை கடைப்பிடிக்காமல் இஷ்டம் போல இருப்பதால் குழந்தைகளுக்கு சிக்கல் ஏற்படுவதுண்டு. அப்படிப்பட்ட நிலையில் சிசேரியன் செய்துதான் ஆக வேண்டும். இப்படி இஷ்டம் போல இருக்கும் பழக்கம், பிரசவம் பற்றிய தெளிவான அறிவின்மை ஆகியவை அதிகரித்து இருக்கும் நிலையில், சிசேரியன் எனப்படும் அறுவை சிகிச்சையும் அதிகரிப்பதில் ஆச்சரியமில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிசேரியனை விரும்பும் பெண்கள் - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - சிசேரியன், வேண்டும், காரணம், தான், பிரசவம், இதற்கு