மருத்துவப் பேட்டி - சிறுநீரகப் பிரச்சினை

- Dr. மோகன்
சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இளநீர், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்கிறார்களே ஏன்?
இவற்றில் அதிகமான பொட்டாசியம் சத்துக்கள் இருக்கின்றன. இளநீர், வாழைப்பழம், சாலாடுகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் ஆரஞ்சு சாறு ஆகியவற்றிலுள்ள இந்த பொட்டாசியம் அதிகமாகச் சேர்ந்தால் கிட்னியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பொதுவாக சொல்வார்கள்.
உண்மையில் கிட்னி பாதிப்பில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று சுருங்குவது, இன்னொன்று வீங்குவது.
சிறுநீரகச் சுருக்கம் உள்ளவர்கள் அவசியம் இளநீர் சாப்பிடவேண்டும். புதினா கலந்த உணவுகள், பட்டை, கிராம்பு போன்றவை சிறுநீரக சுருக்கத்தை உண்டாக்கும். இதற்கு இளநீர் அவசியம் சாப்பிடவேண்டும். புரோட்டீன் அதிகம் சாப்பிடவேண்டும். பால் சாப்பிடக்கூடாது. சிக்கன் செரிமானமாக இரண்டரை மணி நேரம் ஆகும் என்றால், பால் செரிமானம் ஆக நான்கு மணி நேரம் ஆகும். பலருக்கு இது தெரியாது.
சிறுநீரக வீக்கம் உள்ளவர்கள் அசைவம், தானியப் புரோட்டீன் இல்லாத உணவாக உண்ணவேண்டும். பால், பருப்பு, இளநீர் சாப்பிடக்கூடாது. இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு சேர்த்து சாப்பிடலாம்.
சிறுநீரக வீக்கம் இருந்தால் சிறுநீர் வெளியேறாமல் கால் வீங்கியிருக்கும், உடல் வெளுக்கும், ஹீமோகுளோபின் அளவு குறையும், அசதி ஏற்படும். சிலருக்கு சுருக்கம் இருந்தால் மெலிந்து இருப்பார்கள். அடிக்கடி சிறுநீர் போவார்கள், உடல் வறட்சியாக இருக்கும். கண் குழி விழுந்து காணப்படும்.
வயிற்றுப்போக்கு இருந்தால் என்ன காரணத்தினால் ஏற்பட்டது, என்ன தடுப்பு முறைகளைப் பயன் படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
கபம் காரணமாக வரும் வயிற்றுப்போக்குக்கு டிகாக்ஷன் நல்லது. பித்தம் காரணமாக வயிற்று வலி வந்தால் மரவள்ளி (ஆரோரூட்) மாவையும், வாதம் காரணமாக வயிற்று வலி வந்தால் பாகற்காய் வற்றல் அல்லது சுண்டைக்காய் வற்றல் சாப்பிட்டால் பேதி நிற்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நிறைய பசிப்பதாகச் சொல்வார்கள். அவர்களுக்கு எந்த உணவை சாப்பிட்டால் திரும்பத்திரும்ப பசிக்கிறதோ, உணவு உண்ட ஒரு மணி நேரத்தில் பசிக்க ஆரம்பித்தால், சாப்பிட்ட உணவுக்கு மாற்று உணவு சாப்பிடவேண்டும்.
பித்த உடம்புக்காரர்கள் வெப்பத்தை தூண்டும் உணவுகளை சாப்பிடவேண்டும். பல புதிய பெயர்களில் தண்ணீர் விற்பனைக்கு வருகிறது அல்லவா? இதிலும் வாதம், கபம், பித்தம் கலந்த தன்மைகள் இருக்கின்றன. வாத சர்க்கரை உள்ளவர்கள் அக்கு வாகா, கின்லே சாப்பிடலாம்.
பித்த சர்க்கரை உள்ளவர்கள் பிஸ்லரி, சாப்பிடலாம்.
இந்த தண்ணீரில் பாக்டீரியாக்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் பித்தத்தையும், வாதத்தையும் தூண்டும் தன்மையால் மேற்கண்ட விளைவுகள் உண்டாகின்றன.
டயனில் மாத்திரை வாதத்தையும், மெட்டாபார்மின் பித்தத்தையும் தூண்டும்.
கபநாடி உள்ளவர்கள் சாப்பிட்ட இரவு உணவு ஜீரணிக்காவிட்டால் இடப்பக்கம் கைவைத்துப்படுத்தால் சீக்கிரம் ஜீரணமாகும். ஆனால் அசிடிடி உள்ள செரிமானப் பிரச்சினை உள்ளவர்கள் மல்லாந்து படுக்க ஜீரணம் எளிதில் ஆகும். புரோட்டின் மிக்க வாத நாடி உள்ளவர்கள் வலப்பக்கம் தலை வைத்துப்படுக்க அது சரியாகிவிடும்.
உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுகூட நாடி சரியாக அமையாததால் இப்படி வருவது ஆகும். இதை போன்ற பல செய்திகளை அனுபவமாகவே தெரிந்துகொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுநீரகப் பிரச்சினை - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - உள்ளவர்கள், சாப்பிடவேண்டும், இளநீர், ஆகும், காரணமாக, சர்க்கரை, உணவு, இருந்தால், தூண்டும், பால், சாப்பிடக்கூடாது, இருக்கின்றன, சிறுநீரக, சாப்பிடலாம்