மருத்துவப் பேட்டி - புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை
- எஸ். அலெக்ஸ் ஏ பிரசாத்
! புற்றுநோய் என்றால் மரணம்தான் என்கின்ற நிலைமை மாறிவிட்டதா டாக்டர்?
பெரும்பாலான மனிதர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். கேன்ஸர் என்றால் மரணத்தை தழுவ வேண்டியதுதான் என்றிருந்த நிலைமை எவ்வளவோ இப்போது மாறி விட்டது. இன்றைய மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்த நிலையும், மக்களிடையே ஏற்பட்டிருக்கிற விழிப்புணர்ச்சியும் புற்று நோயாளிகள் மரணத்திலிருந்து மீளலாம் என்கின்ற நிலையை அடைந்துள் ளது. இதில் ஒரே ஒரு விசயம் என்னவெனில் கேன்ஸரின் ஆரம்ப நிலையிலேயே வந்தால் முற்றிலும் பூரணமாக குணப்படுத்திவிடலாம் என்பதுதான்.
! புற்றுநோயை எப்படி கண்டறிகிறீர்கள்?
கேன்ஸரை-ஸ்கிகீனிங் டெஸ்ட் என்கின்றஒரு நான்கைந்து சோதனைகளை கொண்டு தான் உறுதி செய்கிறோம். இந்த சோதனைகள் ஆணா, பெண்ணா, வயது மற்றும் வந்திருக்கும் நோயின் நிலைமை பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும். பெண்ணாக இருந்தால் அடிவயிற்றில் அல்ட்ரா சவுண்டு சோதனை, பிறப்புறுப்பில் பாப்ஸ்மியர் டெஸ்ட், மார்பகத் திற்கு மேமோகிராம் டெஸ்ட், மார்பக எக்ஸ்-ரே, இரத்த சோதனையும் செய்யப் படும். ஆண்களாக இருந்தால்-மார்பக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட், புராஸ்டேட் சுரப்பி சோதனை செய் வோம். இது தவிர-ஆண், பெண் யாராக இருந்தாலும் இரத்தத்தில் உள்ள டியூமர் மார்க்கர் சோதனையும், ஊடிடடிþடிளஉடிளில எனும் சாதனத்தில் சோதனையும் செய்து கேன்ஸரை உறுதி செய்வோம். இந்த சோதனைகளை ஆண்டுக்கு ஒரு முறை முப்பது வயதிற்கு மேற் பட்டவர்கள் செய்து கொள்வது கேன்ஸரை பற்றிய விழிப்புணர்ச்சியுடன் இருக்க உதவும்
! தமிழ்நாட்டில் எந்த மாதிரியான புற்றுநோய் அதிகமாக உள்ளது? ஏன்?
பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் பகுதியில் வருகிற கேன்ஸர், காது மூக்கு தொண்டையில் வரும் கேன்ஸர், மார்பக புற்று நோய் பரவலாக உள்ளது. இதுவே ஆண்களுக்கு வயதான காலத்தில் புராஸ் டேட் சுரப்பியில் வருகிறகேன்ஸரும் ஆண், பெண் இருவருக்கும் வருகிற நுரையீரல் கேன்ஸர், வயிறு குடல் பகுதியில் வருகிற கேன்ஸரும் அதிக அளவில் உள்ளது. இன்று தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இது போன்ற கேன்ஸர் அதிகரித்திருக்க காரணம்- வாழ்க்கை முறை மாற்றம் தான். அதிவேக வாழக்கை கொடுத்த அழுத்தம் காரணமாகத்தான் இது போன்ற நோய்கள் வருகின்றன. Aள ளை லடிரச டுகைந ளுவலடந ளுடி ளை லடிரச ஊயþஉநச அதாவது நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ற மாதிரிதான் நமக்கு வருகிற கேன்ஸரும் இருக்கும் என்பார்கள். அது முற்றிலும் நிஜம். இது தவிர பெண் களுக்கு மார்பக மற்றும் கருப்பை கேன்ஸர் வர காரணம்- அவர்கள் அதிக அளவில் கருத்தடை மாத்திரைகளை விழுங்குவது, கால தாமதமான திருமணம், கால தாமத கர்ப்பம் போன்றவை காரணமாகும்.
! ஒவ்வொரு உறுப்புகளில் வரும் புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும்?
மார்பக கேன்ஸரை மார்பகத்தில் வலியில்லாத கட்டி, மார்பக அமைப்பில் மாற்றம், மார்பக காம்பில் நீர் கசிவு, மார்பக காம்பு உள்ளிழுத்துக் கொள்ளுதல் போன்ற அறிகுறிகளால் அறியலாம்.
கருப்பை வாய் கேன்ஸரை - பிறப்புறுப்பில் இரத்தக் கசிவு, வெள்ளைப்படுதல், உடல் உறவிற்கு பின்னர் இரத்தக் கசிவு, மெனோபாஸ்க்கு பிறகும் இரத்தப் போக்கு போன்ற அறிகுறி மூலம் அறியலாம்.
காது மூக்கு தொண்டையில் வரும் கேன்ஸரை - வாய் தொண்டைப் பகுதியில் நீண்ட நாள் வலியில்லாத, ஆறாத புண், வாய்ப்பகுதியில் வெள்ளை (அ) சிவப்பு தோலுரிதல், குரல் மாற்றம், உணவு விழுங்க முடியாமை போன்றவற்றால் கண்டறி யலாம்.
நுரையீரல் கேன்ஸர் - நிற்காத தொடர் இருமல், சளியுடன் இரத்தம் வருதல், குரல் மாற்றம், நெஞ்சுவலி, மூச்சு வாங்குதல் போன்ற அறி குறி மூலம் வெளிப்படும்.
வயிறு-குடல் கேன்ஸர்... மலத்துடன் இரத்தக் கசிவு, மலச்சிக்கலுடன் அடிக்கடி முறையற்று மலங் கழிக்கிற நிலைமை, அஜீரணம், தீராத வயிற்று வலி போன்ற அறிகுறிகளாக வெளிப்படும்.
! மார்பக புற்றுநோய் வந்தால் மார்பகத்தையே நீக்க வேண்டுமா?
நீங்கள் சொல்வது மாதிரி மார்பக புற்றுநோய் வந்தால் முன்பு மார்பகத்தையே நீக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால் இன்று மார்பக கேன்ஸரின் ஆரம்ப நிலை என்றால் மார்பகம் முழுவதையும் எடுக்க வேண்டியதில்லை. கேன்ஸர் உள்ள பகுதியையும் அக்கிள் பகுதி யில் உள்ள கட்டியையும் நீக்கி மார்பக கேன்ஸரை குணப்படுத்தி விடலாம். பின்னர் ரேடியேஷன் தெரபி மூலம் கதிர் வீச்சு சிகிச்சை (பிராக்கி தெரபி) அளிக்கப்படும்.
! அது என்ன பிராக்கி தெரபி? இச்சிகிச்சை எதற்காக தரப்படுகிறது?
கேன்ஸர் வந்தால் எந்த உறுப்பில் கேன்ஸர் வந்திருக்கிறதோ அந்த உறுப்பை இழந்தால்தான் கேன்ஸரை குணப்படுத்த முடியும் என்றிருந்த நிலைமை மாறி, புதிய அதி நவீன புற்று நோய் சிகிச்சை முறையில் உறுப்பினை இழக்காமல் கேன்ஸரை குணப்படுத்துவதற்குத்தான் பிராக்கி தெரபி (Brachy Therapy) என்று பெயர்.
கதிர் வீச்சினை (ரேடியேஷன்) சிறுசிறு குழாய்கள் மூலம் கேன்ஸர் கட்டி இருக்கிற அடித்தளம் வரை உள் செலுத்தி (இம்பிளாண்ட்) லோக்கல் ரேடியேஷன் என்கின்ற அதிக அளவு கதிர் வீச்சினை தருவதற்குதான் பிராக்கி தெரபி என்று பெயர். இச்சிகிச்சை மார்பக கேன்ஸர், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், வயதானவர்களுக்கு வருகிற பிராஸ்டேட் கேன்ஸருக்கு இப்போது வந்துள்ள அதிநவீன புற்றுநோய் சிகிச்சையாகும்.
Organ Conser vative Oncology என்றழைக்கப்படுகிற இச்சிகிச்சையின் நன்மைகள் என்னவெனில்- கேன்ஸர் வந்த உறுப்பினை இழக்க வேண்டியிருக்காது. அழகு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது, எந்த பக்க விளைவும் இல்லை என்பதுதான்.
! புற்றுநோய்க்கு பொதுவாக என்னன்ன சிகிச்சைகள் உள்ளன?
1.அறுவை சிகிச்சை 2.கதிர்வீச்சு (ரேடியேஷன்) 3. கீமோ தெரபி (மருந்து மூலம் குண மளித்தல்) இந்த சிகிச்சைகள் ஆணா, பெண்ணா மற்றும் வயது, வந்திருக்கும் கேன்ஸரின் தன்மை போன்றவற்றை பொருத்து இவற்றில் ஒன்று மட்டுமோ அல்லது மூன்று விதமான சிகிச்சையுமோ தேவைப் படும்.
! பிராக்கி தெரபி போல... புற்றுநோயை குணமளிக்க என்ன நவீன சிகிச்சைகள் வந்துள்ளன டாக்டர்?
முன்பு மருந்து மூலம் (கீமொதெரபி) கேன்ஸரை குணப்படுத்தும்போது முடியிழப்பு, பயங்கர வலி போன்ற அவஸ்தைகள் இருக்கும். ஆனால் இப்போது வந்துள்ள நவீன Target Specific Drug என்கின்ற முறையில் மோனோ குளோனல் ஆண்டிபாடிஸ் என்கின்ற மருந்தினை கொடுத்து பழைய முறையில் உள்ள அவஸ்தை மற்றும் பக்க விளைவுகள் இல்லாமல் கேன்ஸரை குணப்படுத்தலாம்.
முன்பு வயிறு குடல் பகுதியில் கேன்ஸர் கட்டி வந்தால் குடல் பகுதியை துண்டித்து விட்டு வெளிப்புறத்தில் ஒரு பையை (கலொஸ்டமி பேக்) கட்டி விட்டு அதில் மலம் போக வழி செய்வார்கள். இப்போது அதிநவீன முறையில் குடல் பகுதியை துண்டித்து அப்பகுதியில் உள்ள கேன்ஸர் கட்டியை அகற்றி விட்டு, மீண்டும் துண்டித்த குடலை ஸ்டேப்ளர் முலம் இணைத்து விடுகிற நவீன சிகிச்சை வந்து விட்டது. இதற்கு ஸ்டேப்ளர் டெக்னிக் என்று பெயர்.
இதுநாள் வரை வயதானவர்களுக்கு பிராஸ்டெட் சுரப்பியில் வருகிற கேன்ஸரை குணப்படுத்த மருத்துவ உலகம் திண்டாடிக் கொண்டிருந்தது. ஆபரேஷனை நிதானமாக செய்ய வேண்டும். குறைபாடு வராமல் ஆபரேஷன் செய்வது என்பது எளிதான காரியமல்ல. ஆனால் இப்போது வந்துள்ள பிராக்கி தெரபி மூலம் (பிராஸ்டெட் இம்பிளாண்ட்) ஆபரேஷன் இல்லாமலே பிராஸ்டெட் சுரப்பியில் வருகிற கேன்ஸர் கட்டிகளை அகற்றி குணப்படுத்தி விடலாம். இவை எல்லாம் கேன்ஸர் வைத்தியத்தில் வந்துள்ள அதிநவீன சிகிச்சைகளாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - கேன்ஸர், மார்பக, கேன்ஸரை, தெரபி, புற்றுநோய், வருகிற, மூலம், பிராக்கி, இப்போது, நிலைமை, குடல், வந்தால், என்கின்ற, உள்ள, நவீன, சிகிச்சை, முறையில், கட்டி, மாற்றம், கசிவு, எந்த, பகுதியில், டெஸ்ட், வந்துள்ள, ரேடியேஷன், வாய், விட்டு, பிராஸ்டெட், சிகிச்சைகள், அதிநவீன, பெயர், கதிர், நுரையீரல், சோதனையும், பெண், கேன்ஸரின், புற்று, என்றால், உள்ளது, வரும், இருக்கும், இரத்தக், அதிக, வயிறு, சுரப்பியில், முன்பு