மருத்துவ கட்டுரைகள் - ஞானப்பற்கள் (Wisdom Tooth) தேவைதானா?
இருபது வயதுக்கு மேல் முளைத்து படாதபாடு படுத்தும் ஞானப்பற்கள் (Wisdom Tooth) தேவைதானா? இவற்றை பல் டாக்டரிடம் சென்று எடுக்க முடியுமா?
பொதுவாக பதினெட்டு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குள் ஞானப்பல் முளைக்கும். நமக்கு நன்கு விபரம் தெரிந்து முளைக்கும் பற்கள் இவை என்பதால், இதை ஞானப்பற்கள் என்று சொல்கிறார்கள். மூன்றாவது கடவாய் பல்லான ஞானப் பற்கள் கீழ்த்தாடையில் இரண்டும், மேல்தாடையில் இரண்டும் வளரும். ஞானப்பற்கள் எல்லோருக்கும் முளைக்கும் என்று சொல்லமுடியாது. சிலருக்கு முளைக்கும். சிலருக்கு முளைக்காமலே போகும். சிலருக்குப் பாதி முளைத்து, மீதி தாடைக்குள்ளேயே தங்கிவிடும். சிலருக்குப் பல் வெளியே வர முடியாதபடிக்கு எலும்பு தடுத்துவிடும்.
இதனால் எல்லாம் பிரச்னை இலலை. ஞானப்பல் வளரும்போது கோணலாக வளர்ந்து புற்றுநோய்க்கு ஒரு காரணமாகவும் மாற வாய்ப்புண்டு. எனவே, ஞானப்பல் வளரும் பட்சத்தில் தாடையில் ஏதாவது வலி ஏற்பட்டால், உடனடியாக ஒரு பல் மருத்துவரை அணுகுவது நல்லது. உங்களுக்குப் பிரச்னையை ஏற்படுத்தும் ஞானப்பல்லைப் பிடுங்கிவிடலாமா அல்லது மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்து விடலாமா என்பதை அந்த டாக்டரே முடிவு செய்வார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஞானப்பற்கள் (Wisdom Tooth) தேவைதானா? - Medical Articles - மருத்துவ கட்டுரைகள் - Medicines - மருத்துவம் - ஞானப்பற்கள், முளைக்கும், ஞானப்பல்