பாட்டி வைத்தியம் - பல்லில் ஏற்படும் கூச்சம் மறைய...

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும்.
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
உலர் திராட்சைப் பழத்தை வெது, வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
பாலூட்டும் தாய்மார்கள் வெற்றிலையைத் தணலில் வாட்டி மார்பகத்தின் மீது வைத்துக் கட்டினால் பால் நன்றாகச் சுரக்கும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பல்லில் ஏற்படும் கூச்சம் மறைய... - Grandma's Remedies - பாட்டி வைத்தியம் - Medicines - மருத்துவம் - நன்கு