உணவுப் பழக்கம் - இதய ஆரோக்கியத்துக்கு மாதுளை..!
இந்தியில் ஏக் அனார் சா பீமார் என்று ஒரு பழமொழி உண்டு. நோயுற்ற மனிதனுக்கு ஒரு மாதுளம் பழமே மருந்து என்பது இதன் பொருள். இது தற்போது லண்டன் ஆராய்ச்சிக் கூடத்தில் உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆரோக்கியமான இதயத்துக்கு ஒரு கிளாஸ் மாதுளம் பழச்சாறு போதுமானது என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் உறுதிபட கூறி உள்ளனர்.
கொலஸ்ட்ரால் மற்றும் குறை ரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளால் இதயத் தசைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தாமதப்படுத்தும் அபார ஆற்றல் மாதுளம் பழத்துக்குள் ஒளிந்திருக்கிறது. மேலும் ரத்த நாளங்களை குறுகலாக்கி ஆபத்தை விளைவிக்கும். கெட்ட கொலஸ்ட்ரால் ஆக்ஸினேற்றம் அடைவதற்கு எதிராக போராடும் மாதுளம் பழம், அதன்மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாத ஆபத்துக்களை தடுத்து நிறுத்துகிறது. இதனால் பை-பாஸ் அறுவை சிகிச்சைக்கு அவசியமே இல்லாமல் போகும். மற்றப் பழ வகைகளைக் காட்டிலும் மாதுளம் பழத்தில் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்தும் ஆற்றல் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரு டம்ளர் மாதுளம் பழச்சாறானது, 2 டம்ளர் சிவப்பு ஒயினுக்கு சமம், 10 கப் பச்சை தேயிலைக்கு சமம், 6 கப் கோகோவுக்கு சமம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இதய ஆரோக்கியத்துக்கு மாதுளை..! - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - மாதுளம், சமம்