உணவுப் பழக்கம் - கிருமிகளை கொல்லும் சுண்டைக்காய்!

இதுவும் ஒரு வகை காய்கறிதான். இது கசப்பான சுவை கொண்டிருப்பதால் பலர் தவிர்த்து விடுகிறார்கள். ஆகையால் கசப்பு சுவையை போக்குவதற்கு பருப்புடன் சேர்த்து சமைக்கலாம். சிறிய உருண்டைகளாக உள்ள இந்தக் காய்களை சற்று கீறி தயிரில் ஊற வைத்து, பின் அதில் உப்பு சேர்த்து உலர்த்தி வற்றலாக தயாரித்து வைத்துக் கொள்ளலாம். சுண்டைக்காய் வற்றலை எண்ணெயில் பொரித்தும் உண்ணலாம். அல்லது குழம்பிலும் பயன்படுத்தலாம். இது பார்ப்பதற்கு சிறிய அளவில் இருந்தாலும் மனிதர்களுக்கு நிறைய நன்மைகள் செய்கிறது.
சுண்டைக்காய் கபத்தை உடைத்து வெளியேற்றும்.
மலக் கிருமிகளை கொன்று மலத்துடன் வெளியேற்றி விடும்.
வாதம் தொடர்பான நோய்களை குணப்படுத்தும் ஆற்றலும் இதற்கு உண்டு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கிருமிகளை கொல்லும் சுண்டைக்காய்! - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் -