உணவுப் பழக்கம் - கறிவேப்பிலையும் ஒரு பச்சிலையே!

கறிவேப்பிலை உணவுப் பண்டங்களுக்குச் சிறந்த வாசனையைத் தருகிறது. அதனால் தான் எல்லா வகைக் கார உணவுப் பதார்த்தங்களிலும் இது சேர்க்கப்படுகிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். சாப்பிடும் போது பலர் அதை எடுத்து வெளியில் போட்டு விடுகிறார்கள். துப்பி விடுகிறார்கள்.
இதனால் தான் காரியம் முடிந்த பின்பு கவனிக்காமல் ஒதுக்கி விடுவதை கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்திக் கொண்டார்கள் என்ற வாக்கியச் சொல்லும் சிறந்தது. ஒரே ஒரு குழந்தை உள்ளவர்கள் கறிவேப்பிலை கொத்து மாதிரி ஒண்ணே ஒண்ணு இருக்கிறது என்று கறிவேப்பிலையை உதாரணம் காட்டிக் சொல்வார்கள். காரணம் உண்டு.
இச்செடியை மிகவும் பாதுகாப்பாகவும், கவனமாகவும் வளர்த்தால் தான் வளரும். கறிவேப்பிலை நமது உடலுக்குப் பலவித நன்மைகளைத் தரும் சிறந்ததொரு பச்சிலையாக விளங்குகிறது.
வயிற்று உளைச்சலைப் போக்குகிறது. வாந்தியைத் தடுக்கிறது. ரத்தத்தைச் சுத்தம் செய்கிறது. குடலுக்கு வலுவைக் கொடுக்கிறது. பித்த ஒக்காளத்தைத் தடுக்கிறது. மூலமலத்தைக் கட்டுகிறது. தீபனத்தை உண்டாக்குகிறது. ஜூரம் ஏற்படாமல் காக்கிறது.
வாயி னருசி வயிற்றுளைச்சல் நீடு சுரம்
பாயுகின்ற பித்தமுமென் பண்ணாங்காண் -தூய
மறு வேறு காந்தனங்கை மாதே உலகிற்
கறிவேப்பிலை அருந்திக் காண்!
என்பது பழந்தமிழ்ப் பாடலாகும்.
இக்கறிவேப்பிலையில் நமது உடலுக்கு வேண்டிய கார்போஹைட்ரேட், புரோட்டின், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து வைட்டமின் ஏ, பி-2, சி மற்றும் தாதுப்பொருட்கள் அனைத்தும் அடங்கி இருக்கின்றன.
கறிவேப்பிலையை பச்சையாக கூட உண்ணலாம். உணவுப் பதார்த்தங்களில் சேர்ப்பது மட்டுமல்லாமல் துவையல் அரைத்தும், காரப்பொடி செய்தும் சாதத்தில் பிசைந்தும், இட்லி, தோசை, சப்பாத்தி முதலியவற்றிற்குத் தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கறிவேப்பிலையும் ஒரு பச்சிலையே! - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - கறிவேப்பிலை, தான், உணவுப்