உணவுப் பழக்கம் - அன்னாசிப்பழம்

பழங்களை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் ஆயுள் அதிகம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அன்னாசிப்பழம் மிகுந்த சுவையான, மணமான, இனிமையான பழமாகும். மஞ்சள் நிறத்தில் வெளிப்பக்கம் சொரசொரப்பாக இருந்தாலும் தோலை நீக்கியப் பின் பார்ப்பதற்கும். உண்பதற்கும் இனிமையான பழச்சதையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அன்னாசி மிகுந்த சத்துடைய ஒரு பழமாகும். இப்பழம் அனைவர்க்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை ஈந்து உடலை வளர்க்கிறது. ஆரோக்கியத்தைத் தருகிறது. சில நோய்களைக் குணமாக்குகிறது.
அன்னாசிப்பழ சதையில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.
அன்னாசிப்பழம் குடல் செயல்களை ஊக்குவிக்கும். புழுக்கொல்லி, விஷம் நீக்கியாகச் செயல்படும். ஜீரணத்தைக்கூட்டும். சிறுநீரைப் பெருக்கும். பசியைத் தூண்டும். குளிர்ச்சியை ஊட்டும். மேலும் மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும்.
1. அன்னாசிப்பழத்தை துண்டுகளாக்கி அல்லது சாறாக குழந்தைகட்கு கொடுக்க... வயிற்றிலுள்ள பூச்சிகள் மாறும்.
2. பழச்சாறை ஒரு நாள் நான்கு வேளை ஒரு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர... இடுப்பு வலி மாறும்.
3. அன்னாசிப்பழத் துண்டுகளை தேனில் தோய்த்து சாப்பிட்டு வர உடல்பலம் கூடும். உடல் பளபளப்பாகும்.
4. அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக்கற்கள் கரையும்.
5. அன்னாசிப்பழத்தை தொடர்ந்து சாப்பிட... இதயக் கோளாறு, பலவீனம் குணமாகும்.
6. பழச்சாறை தொண்டையில் படும்படி சிறிது நேரம் வைத்திருந்து விழுங்கி வர தொண்டைவலி, தொண்டைப்புண் தீரும்.
7. அன்னாசிப்பழத்தை வட்டமாக வெட்டி காய வைத்து பாலில் போட்டு பின் உலர வைத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு அடிக்கடி சாப்பிட்டு வர இரத்தம் ஊறும். பித்தக் கோளாறுகள் தீரும்.
8. வயிறு நிறைய உணவு உண்ட பின் ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை உண்ண எளிதில் ஜீரணம் ஆகும்.
9. இலையைப்பிழிந்து சாறு எடுத்து ஒரு ஸ்பூன் சாறுடன், சிறிதளவு சர்க்கரை கலந்து சாப்பிட, விக்கல், இழுப்பு தீரும்.
10. அன்னாசிப்பழச்சாறு மஞ்சள் காமாலைக்கு சிறந்ததாகும்.
11. அன்னாசிக்காய்க்கு கர்ப்பப்பையை சுருக்கும் தன்மை உண்டு. எனவே கர்ப்பிணிகள் இப் பழத்தைத் தவிர்க்க வேண்டும்.
12. பழச்சாறில் குடல் செயலை ஊக்குவிக்கும் அமிலம் உள்ளதால் எளிதில் ஜீரணம் ஏற்படும்.
13. அன்னாசி இலைச்சாறு வயிற்றுப்புழுக்கொல்லியாக செயல்படுகிறது.
14. குழந்தைகட்கு அடிக்கடி இப்பழச்சாறு கொடுத்து வர... எலும்பு வளர்ச்சி, உடல் வளர்ச்சி ஏற்படும். கண்கள் ஒளி பெறும்.
15. அன்னாசிப்பழச்சாறுடன் தேன் கலந்து குழந்தைகட்கு கொடுக்க உள் உறுப்புகள் பலப்படும். பசி ஏற்படும்.
16. அன்னாசி இலைச்சாறு ஒரு ஸ்பூனுடன் தேன் கலந்து அருந்த, பேதியாகும். வயிற்றுப்பூச்சிகள் வெளியேறிவிடும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அன்னாசிப்பழம் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - அன்னாசிப்பழத்தை, சாப்பிட்டு, அடிக்கடி, கலந்து, ஏற்படும், தீரும், குழந்தைகட்கு, மஞ்சள், பின், அன்னாசி, அன்னாசிப்பழம்