உணவுப் பழக்கம் - முழுதானியம் - பீன்ஸ்

குறைந்த கார்போஹைட்ரேட் சத்து கொண்ட உணவை சாப்பிடுகிறவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை சாதாரணமாக காணப்படும். ஏனெனில் அவர்களுக்கு போதுமான நார்ச்சத்து கிடைப்பதில்லை. அதே சமயம் குறைந்த கார்போஹைட்ரேட் சத்து உணவு சாப்பிடும் வழக்கத்தையும் மாற்ற வேண்டாம்.
குறைந்த கார்போஹைட்ரேட் சத்தும் இருக்க வேண்டும், நார்ச்சத்தும் இருக்க வேண்டும். இது எப்படி சாத்தியமாகும் என்று கேட்கிறீர்கள் அல்லவா? விஷயம் சிம்பிள் தான். உங்களுடைய மெனுவில் பீன்ஸ் சேர்த்துக் கொள்ளுங்கள். பீன்ஸில் அதிகமான நார்ச்சத்தும், அதிக புரோட்டீனும் உள்ளன. அதே சமயம் கார்போஹைட்ரேட் குறைந்த அளவு தான் இருக்கிறது. ஆகையால் பீன்ஸ் சிறந்த உணவாக அமையும்.
முழு தானியங்கள் மூலம் மனிதர்களுக்கு நிறைய பலன்கள் கிடைப்பதாக மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலே சொன்ன பீன்சும் முழு தானியம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
முழுதானியம் - பீன்ஸ் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - கார்போஹைட்ரேட், குறைந்த