கவிதைத் தொகுப்புகள் - மெசியாவின் காயங்கள் - துளி....துளி....
- ஜெ. பிரான்சிஸ் கிருபா வெளியூர் பயணப்படுபவனிடம் திக்கித் திணறி அ''னா ஆ''வன்னா சொல்லிப் பழகி ரயில் நிலையத்தை கடைசி நிமிடத்தில் பள்ளிக்கூடமாக்கியவரை விட்டுருண்டு பல நூறு மைல்கள் கடந்து வந்துகொண்டிருக்கும் ரயில் பெட்டியின் படிக்கட்டில் எண்ணிச் சிந்தியதுபோல் சில நீர்த் துளிகள் யாருடையதெனத் தெரியாமல் கடந்த நிறுத்தத்தில் யாரேனும் பாட்டில் நிறைத்து அவசரமாய் ஏறுகையில் தளும்பியிருக்கலாம் வாசலருகில் வாஷ் பேஷின். புழங்கும்போது தெறித்திருக்கலாம் படிக்கட்டுவரை துரத்தி வந்து ரயிலேற முயன்று தோற்றிருக்கலாம் மழை |
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 26 | 27 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மெசியாவின் காயங்கள் - துளி....துளி.... - கவிதைத் தொகுப்புகள் - Poems - கவிதைகள் -