திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல், எய்துவது எய்தாமை முன் காத்தல், வைகலும் மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல், - இம் மூன்றும் வீறு சால் பேர் அமைச்சர் கோள். |
61 |
ஐம்புலன்களை அடக்கவும், அரசனுக்கு வரக்கூடிய தீமையைக் காத்தலும், பகை அரசருடைய நிலையை அறிந்து கொள்வதும் அமைச்சர்களின் கடமைகளாகும்.
நன்றிப் பயன் தூக்கா நாண் இலியும், சான்றார் முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும், நன்று இன்றி வைத்த அடைக்கலம் கொள்வானும், - இம் மூவர் எச்சம் இழந்து வாழ்வார். |
62 |
நன்றியறிதல் இல்லாதவனும், பொய் சாட்சி சொல்பவனும், தன்னிடம் அடைக்கலமாக வந்த பொருளை விரும்பியவனும், தம் மக்களை இழந்து வருந்துவார்.
நேர்வு அஞ்சாதாரோடு நட்பும், விருந்து அஞ்சும் ஈர்வளையை இல்லத்து இருத்தலும், சீர் பயவாத் தன்மையிலாளர் அயல் இருப்பும், - இம் மூன்றும் நன்மை பயத்தல் இல. |
63 |
துன்பத்துக்கு அஞ்சாதவர் நட்பும், விருந்தினர்க்கு உணவளிக்காத மனைவியும், நற்குணமில்லாதவர் அயலில் குடியிருத்தலும் பயனற்றவை ஆகும்.
நல் விருந்து ஓம்பலின், நட்டாளாம்; வைகலும் இல் புறஞ் செய்தலின், ஈன்ற தாய்; தொல் குடியின் மக்கள் பெறலின், மனைக் கிழத்தி; - இம் மூன்றும் கற்புடையாள் பூண்ட கடன். |
64 |
விருந்தினரைப் போற்றுதலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால் பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமைகளாகும்.
அச்சம் அலை கடலின் தோன்றலும், ஆர்வு உற்ற விட்ட கலகில்லாத வேட்கையும், கட்டிய மெய்ந் நிலை காணா வெகுளியும், - இம் மூன்றும் தம் நெய்யில் தாம் பொரியுமாறு. |
65 |
ஒருவர் உள்ளத்தில் தோன்றும் பயமும், அனுபவித்தவற்றை விட்டு நீங்காத விருப்பமும், பொருளின் உண்மை நிலையை அறியாத சினமும், ஒருவருக்கு மிகுந்த துன்பத்தைத் தரும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, மூன்றும், இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, திரிகடுகம், ஆவாள், பதினெண், நட்பும், தாய், இழந்து, விருந்து, நிலை, சங்க, முன், வைகலும், நிலையை, கடமைகளாகும்