திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

என்னரே ஏற்ற துணைப்பிரிந்தார் ஆற்றென்பார் அன்னரே யாவர் அவரவர்க்கு - முன்னரே வந்துஆரம் தேங்கா வருமுல்லை, சேர்தீந்தேன் கந்தாரம் பாடுங் களித்து. |
106 |
என்னரே யேற்ற துணைப்பிரிந்தார் என்பது எப்பெற்றியர் அவர் தமக் கன்புபட்ட காதலரைப்பிரிந்தார் என்றவாறு, ஆற்றென்பா ரன்னரே யாவ ரவரவர்க்கு என்பது அக்காதலித்தாரைப் பிரிந்தாரோடொப்பர், பிரியப்பட்டார்க் காற்றி இறந்துபடாதிருக்கச் சொல்லுவார் என்றவாறு, முன்னரே வந்து ஆரந் தேங்கா வரு முல்லை சேர்தீந்தேன் கந்தாரம் பாடுங் களித்து என்பது எனக்கு முன்னே வந்து சந்தனப் பொழிலையும், தேங்காவின்கண் வளர் முல்லையுஞ் சேர்ந்த தீந்தேன்கள் கந்தாரமென்னும் பண்ணினைக் களித்துப் பாடாநின்றன, என்றவாறு.
கருவுற்ற காயாக் கணமயிலென்று றஞ்சி உருமுஉற்ற பூங்கோடல் ஓடி - உருமுற்ற ஐந்தலை நாகம் புரையும் மணிக்கார்தான் எந்தலையே வந்தது இனி. |
107 |
கருதிக்கொண்டு பூத்த காயாம் பூவினைத் தொகுதியையுடைய மயிலென்றஞ்சி உருமுற்ற ஐந்தலை நாகங்கள் உருமுற்ற பூங்கோடல்களை யொவ்வாநின்ற அழகிய இக் கார்ப்பருவந்தான், எம்முடைய மாட்டேநலிய வந்தது இப்பொழுது,
கண்ணுள வாயின் முலையல்லை காணலாம் எண்ணுள வாயின் இறவாவால் - எண்ணுளவா அன்றொழிய நோய்மொழிச்சார் வாகாது உருமுடை வான் ஒன்றொழிய நோய்செய்த வாறு. |
108 |
உருமுடை வான் ஒன்றொழிய நோய் செய்தவாறு கண்ணுளவாயின் முல்லையல்லை காணலாம் என்பது உருமுடைய வான் இறந்து பாடொன்றையும் ஒழிய மற்றைக் குறிப்புக்கள் ஒன்பதும் எனக்குளவாம் படி என்னை நோய் செய்தவாற்றை நினக்குங் கண்ணுள வாயின் முல்லையல்லை யாதலின் நக்குக் காண் என்றவாறு,எண்ணுளவாயின் இறவாவால் என்பது அவர் குறித்த இத்துணை நாளுள் வருகின்றேன் என்ற எண் பழுது படாவாயின், அவர் சொன்ன நாளைக் கடவா அன்றோ என்றவாறு. எண்ணுளவா வன்றொழிய நோய் மொழிச் சார்வாகாது என்பது என்னை ஆற்றுவிக்க வேண்டி நின் மனத்தின்கண் எண்ணின எண்ணிண் கண்ணுள்ளவா வன்றி என்னோ யொழிதற்கு நீ யாற்றுவிக்கின்ற நின்மொழி எனக்குச் சார்வாகாதுஎன்றவாறு.
என்போல் இகுளை! இருங்கடல் மாந்தியகார் பொன்போல்தார் கொன்றை புரிந்தன - பொன்போல் துணைபிரிந்து வாழ்கின்றார் தோன்றுவர் தோன்றார், இணைபிரிந்து வாழ்வர் இனி. |
109 |
என்னைப் போன்ற தோழி! பொன் போன்ற தார்களைக் கொன்றைகள் ஈனும் வகை இருங்கடலைப் பருகின முகில்களாதலால், பொன் போலப் பெறுதற்கரிய தந்துணைகளைப் பிரிந்து போய் வாழ்கின்றார் அத்துணைக்கண் அவர்மாட்டுத் தோன்றுவர்; நம்மோடிணைதலைப் பிரிந்து வாழ்கின்றார்இப்பருவத்தின் கண்ணுந் தோன்றுகின்றிலர்.
பெரியார் பெருமை பெரிதே இடர்க்காண் அரியார் எளியரென்று ஆற்றாப் - பரிவாய்த் தலையழுங்க தண்தளவம் தாம்நகக்கண்டு ஆற்றா மலையழுத சால மருண்டு. |
110 |
பெரியாராயிருப்பார் பெருமைக்குணம் மெய்ம்மையாகப் பெரிதே: காண முன்னரியரா யுள்ளார் இடர் வந்த இப்பொழுது எளியராயினா ரென்றிரங்கி யழுங்கி ஆற்றாவாய் மலைகள் மிகவும் அழுதன; தலை சாய்க்கும் வகை பரிவாய்த்தண்டளவங்கள் தஞ்சிறுமையால் நகக் கண்டு,
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 20 | 21 | 22 | 23 | 24 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, என்பது, என்றவாறு, இலக்கியங்கள், அவர், வாயின், நோய், வான், திணைமாலை, உருமுற்ற, நூற்றைம்பது, பதினெண், கீழ்க்கணக்கு, ஒன்றொழிய, சேர்தீந்தேன், கந்தாரம், உருமுடை, எண்ணுளவா, முல்லையல்லை, என்னை, பிரிந்து, பெரிதே, பொன், தோன்றுவர், வாழ்கின்றார், இறவாவால், காணலாம், என்னரே, வந்து, துணைப்பிரிந்தார், முன்னரே, களித்து, சங்க, ஐந்தலை, தேங்கா, கண்ணுள, இப்பொழுது, வந்தது, பாடுங்