திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

வண்டினம் வௌவாத ஆம்பலும் வாரிதழான் வண்டினம் வாய்வீழா மாலையும் - வண்டினம் ஆராத பூந்தார் அணிதேரான் தான்போத வாராத நாளே வரும். |
101 |
வண்டினங்கள் விரும்பாத ஆம்பலென்னும் பெயரையுடைய குழலும், ஒழுகிய மலர்களிற் புக்கு வண்டினங்கள் வாய்வீழாத அந்தியாகிய மாலையும், வண்டினங்கள் புக்கொலியாத பூச்செயல்களையு முடைய புரவி பூண்ட தார் மணிகளையுடைய புரவிகளாலே ஒப்பிக்கப்பட்ட தேரினையுமுடையான் வாராத நாளேவந்து என்னை நலியும்.
மான்எங்கும் தம்பிணையோடு ஆட மறிஉகள வான்எங்கும் வாய்த்து வளம்கொடுப்பக் - கான்எங்கும் தேனிறுத்த வண்டோடு தீதா எனத்தேராது யானிறுத்தேன் ஆவி இதற்கு. |
102 |
மான்கள் தம்பிணைகளைக் கூடி எங்கும் விளையாட, அவற்றின் மறிகளு முகள, மழை யெங்கும் பெய்து வாய்த்து வளங் கொடுப்ப, காடெங்கும் தேன்களும் தம்மொடு சார்ந்த வண்டுகளோடு தீதாவென் றொலித்தலான், ஆராயாதே மயங்கிப் பருவத்துக்கென்னா வியைக் கடனாகக் கொடுத்தேன்.
ஒருவந்தம் அன்றால் உறைமுதிரா நீரால் கருமம்தான் கண்டழிவு கொல்லோ - பருவந்தான் பட்டின்றே என்றி பணைத் தோளாய்! கண்ணீரால் அட்டினேன் ஆவி அதற்கு. |
103 |
ஒருவந்த மன்றால் என்பது இது பருவமென்பது மெய்ம்மை யன்றா லென்றவாறு. உறை முதிரா நீரால் என்பது மழை பெயல் நிரம்பாத நீராலென்றவாறு; வம்ப மழை யென்றவாறாம், கருமந்தான் கண்டழிவு கொல்லோ என்பது கருமமாவது பருவமல்லாத பருவத்தைக் கண்டழிவதோ என்றவாறு. பருவந்தான் பட்டின்றே யென்பது பருவம் வந்து பட்டதில்லை என்றவாறு, என்றி என்பது இவையெல்லாஞ் சொல்லி என்னைத் தேற்றா நின்றாய் என்றவாறு பணைத்தோளாய் கண்ணீரா லட்டினே னாவி யதற்கு என்பது கண்ணீரே நீராக வார்த்து என்னுயிரைப் பருவத்துக்குக் கொடுத்தேன்,பணைத்தோளாய் என்றவாறு.
ஐந்துருவின் வில்லெழுத நாற்றிசைக்கும் முந்நீரை இந்துருவின் மாந்தி இருங்கொண்மூ - முந்துருவின் ஒன்றாய் உருமுடைத்தாய் பெய்வான்போல் பூக்கென்று கொன்றாய்கொன் றாய்என் குழைத்து. |
104 |
ஐந்து நிறத்தினையுமுடைய வில்லை யெழுதினாற்போலக் கோலி, முந்நீரைப் பருகி, ஈந்தின் கனிபோன்றருந்துகின்ற வுருவோடு இருங்கொண்மூ நாற்றிசைக் கண்ணும் ஒன்றா யுருமுடைத்தாய்ப் பெய்யப்படுகின்ற வானம் என்னைக் கொல்கின்றாற்போலத் தழைத்துப் பூப் பேனென்று என்னைக் கொன்றாய்;கொன்றை மரமே!
எல்லை தருவான் கதிர் பருகி யீன்றகார் கொல்லைதரு வான்கொடிகள் ஏறுவகாண் - முல்லை பெருந்தண் தளவொடுதம் கேளிரைப்போல் காணாய் குருந்துஅங்கு ஒடுங்கழுத்தம் கொண்டு. |
105 |
பகலினைத் தருங் கதிரோனுடைய கதிர்கள் நீரை நிலத்தின்கட் பருகி யீன்ற காரானே கொல்லைகள் தருகின்ற வாலிய கொடிகண் மரந்தோறுஞ் சென்றேறு வனவற்றைக் காணாய்! அன்றியேயும், முல்லைகள் பெருந்தண்டளவுடனே குருந்து அங்கு ஒடுங்கு அழுத்தங் கொண்டு தங்கேளிரைப்போ லேறுவன காணாய்!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 19 | 20 | 21 | 22 | 23 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, என்பது, இலக்கியங்கள், என்றவாறு, வண்டினங்கள், பருகி, திணைமாலை, காணாய், பதினெண், கீழ்க்கணக்கு, வண்டினம், நூற்றைம்பது, பணைத்தோளாய், இருங்கொண்மூ, என்னைக், கொண்டு, என்றி, நீரால், வாராத, மாலையும், சங்க, வாய்த்து, கொடுத்தேன், பருவந்தான், கொல்லோ, கண்டழிவு, பட்டின்றே