திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
கள்ளிசார் காரோமை நாரில்பூ நீள்முருங்கை நற்றியவேய் வாழ்பவர் நண்ணுபவோ - புள்ளிப் பருந்து கழுகொடு வம்பலர்ப் பார்த்தாண்டு இருந்துறங்க வீயும் இடம். |
91 |
புள்ளிப் பருந்துகள் கழுகுடனே வழி போவாரைப் பார்த்து அங்கிருந்து உறங்கப்பட்டுக் கள்ளியுஞ் சாருங் காரோமையும் நாரில் பூ நீண்முருங்கையும் வேயும்பொருந்தி யமர்ந்து வீயுமிடத்தை உயிர் வாழ்பவர்நண்ணுவரோ?
செல்பவோ தம்மடைந்தார் சீரழியச் சிள்துவன்றிக் கொல்பபோல் கூப்பிடும் வெங்கதிரோன் - மல்கிப் பொடிவெந்து பொங்கிமேல் வான்சுடும் கீழால் அடிவெந்து கண்சுடும் ஆறு. |
92 |
தம்மை யடைந்தார் சீர்மையழிய நல்லார் செல்வரோ? சிள்வீடுகள் நெருங்கிக் கடிய வோசையாற் பிறரைக் கொல்வனபோலக் கூப்பிடாநிற்கும் வெய்ய வெயிலோன் மிக்குப் பொடிகள் வெந்து பொங்கி மேலேவிசும்பினைச் சுடாநிற்கும், கீழின்கண் வழிபோவார் அடி வேவ அவர் கண்களைச் சுடாநிற்கும்இப்பெற்றிப்பட்ட அவ்வழியினை.
4. முல்லை
நிலம் : காடும் காடு சார்ந்த இடமும்.
ஒழுக்கம் : ஆற்றி இருத்தலும் அதன் நிமித்தமும்.
கருங்கடல் மாந்திய வெண்தலைக் கொண்மூ இருங்கடல்மா கொன்றான்வேல் மின்னிப் - பெருங்கடல் தன்போல் முழங்கித் தளவம் குருந்தனைய என்கொல்யான் ஆற்றும் வகை. |
93 |
கருங்கடலைப் பருகிய வெண்டலை முகில்கள் இருங்கடலின்கண்ணே புக்கு மாவினைக்கொன்ற முருகன் வேல்போல மின்னிப் பெருங்கட றன்னைப்போல முழங்குதலால் முல்லைக்கொடிகளெல்லாம் குருந்தமரத்தின்மேற் சென்றணையக் கண்டு யான்ஆற்றுந் திறம் என்னை கொல்லோ?
பகல்பருகிப் பல்கதிர் ஞாயிறுகல் சேர இகல்கருதித் திங்கள் இருளைப் - பகல்வர வெண்ணிலாக் காலும் மருள்மாலை வேய்த்தோளாய் உள் நிலாது என்ஆவி யூர்ந்து. |
94 |
பகற் பொழுதைப் பருகிப் பல்கதிர்ஞாயிறு மலையின்கட் சேர, திங்ளானது இருளைப் பகையென்று கருதிப் பகலின்றன்மை வர வெண்ணிலாவை யுகாநின்ற மருண்மாலையின்கண், வேய்த்தோளாய்! என்னிடத்து நிலைகின்றதில்லை;என்னுயிர் சென்று.
மேல்நோக்கி வெங்கதிரோன் மத்தியநீர் கீழ் நோக்கிக் கால்நோக்கம் கொண்டழகாக் காண்மடவாய் - மானோக்கி போதாரி வண்டெலாம் நெட்டெழுத்தின் மேல்புரிய சாதாரி நின்றறையுஞ் சார்ந்து. |
95 |
வெங்கதிரோன் மேனோக்கிப் பருகிய நீர் கீழ் நோக்குதலால் காடெல்லாம் ஒக்கங்கொண்டு அழகாகப் போதுதோறும் அரிவண்டுகள் நெட்டெழுத்தோசைமேல் மேவிச் சாதாரி என்னும் பண்ணினைச் சார்ந்தொலியா நின்றன; மானோக்கி! இதனைக் காணாய்.அல்லதூஉம், 'போதாரி வண்டெலாம்,' என்பது போதினைப் பரந்து இவ்வண்டெல்லாம் எனலுமாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், நூற்றைம்பது, திணைமாலை, கீழ்க்கணக்கு, பதினெண், வெங்கதிரோன், மானோக்கி, போதாரி, கீழ், சாதாரி, வண்டெலாம், மின்னிப், சங்க, புள்ளிப், பருகிய, இருளைப், வேய்த்தோளாய்