திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

கொன்றாய்! குருந்தாய்! கொடி முல்லாய்! வாடினீர் நின்றேன் அறிந்தேன் நெடுங்கண்ணாள் - சென்றாளுக்கு என்னுரைத்தீர்க்கு என்னுரைத்தாட்கு என்னுரைத்தீர்க்கு என்னுரைத்தாள் மின்னுரைத்த பூண்மிளிர விட்டு? |
81 |
கொன்றாய்! குருந்தே! கொடி முல்லாய்! நீர் வாடிநின்றீர்; இதற்குக் காரணம் யானறிந்தேன்; நெடுங் கண்ணாள் இங்கு நின்று போகின்றாட்கு நீர் என்னுரைத்தீர்? நுமக்கு அவள் என்னுரைத்தாள்? அவட்கு நீர் பின்னை என்னுரைத்தீர்? அவள் உமக்குப் பின்னை என்னுரைத்தாள், மின்னிரைத்த பூண் விட்டு மிளிராநின்று?
ஆண்கட னாம்ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்குப் பூண்கடனாப் போற்றிப் புரிந்தமையால் - பூண்கடனாச் செய்பொருட்குச் செல்வரால் சின்மொழி! நீசிறிது நைபொருட்கண் செல்லாமை நன்று. |
82 |
ஆள்வினைக் கடனாகிய நெறியை ஆராயுங்கால், ஆடவர்க்குப் பூணுங் கடனாகப் பாதுகாத்து நல்லார் சொல்லி மேவினமையாற் றமக்கு அவ் வாள்வினை பூணுங் கடனாகத் தேடும் பொருட்டுச் செல்வர் நங் காதலர்; ஆதலாற் சின்மொழியை யுடையாய்! நீயதற்கு மனனழியுந் திறத்தின்கட் செல்லாமை நன்று.
செல்பவோ சிந்தனையும் ஆகாதே நெஞ்செரியும் வெல்பவோ சென்றார் வினைமுடிய - நல்லாய் இதடி கரையும்கல் மாபோலத் தோன்றுச் சிதடி கரையும் திரிந்து. |
83 |
இப்பெற்றித்தாகிய சுரத்தின்கட் செல்வாருளரே? நினைத்தலு மாகாதால்; நினைத்த நெஞ்சும் எரியும்; மாறிச் சுரத்தின்கட் சென்றார் சுரத்தை வெல்ல வல்லவரோ? தாமெடுத்துக் கொண்டவினை முடியும்படி; நல்லாய்!காட்டெருமைப் போத்துக்களைப் பிரிந்த பெண் எருமைகள் கதறா நிற்கும்; அங்குப் பலவாய்க் கிடந்த கற்களும் மா பரந்தாற்போலத் தோன்றும்; சிள் வீடுகளும் திரிந்து கதறா நிற்கும்ஆதலான்.
கள்ளியங் காட்ட கடமா இரிந்தோடத் தள்ளியும் செல்பவோ தம்முடையார் - கொள்ளும் பொருளில ராயினும் பொங்கெனப்போந்து எய்யும் அருளில் மறவர் அதர். |
84 |
கள்ளியங் காட்டின்கட் கடமாக்கள் இரிந் தோடும் வகை மறந்துஞ் செல்வரோ தம் மறிவை யுடையார்? வழிபோம் வம்பலராற் கொள்ளும் பொருளிலராயினும் கதுமெனப் போந்தெய்கின்ற அருளில்லாத மறவர் வாழும்வழியை.
பொருள் பொருள் என்றார்சொல் பொன்போலப் போற்றி அருள்பொருள் ஆகாமை யாக - அருளான் வளமை கொணரும் வகையினால் மற்றோர் இளமை கொணர இசை. |
85 |
பொருள் பொருளாவதென்று சொன்னார் சொல்லைப் பொன்போல விரும்பித் தெளிதலான், அருளுடைமை பொருளாகாமை ஆவதாயினும் ஆக; பொருளைக் கொணரும் வகைமைபோல நின்னருளினாலே வேறோரிளமைகொணர்தற்கு எமக் குடன்படுவாயாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 15 | 16 | 17 | 18 | 19 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திணைமாலை, நீர், என்னுரைத்தாள், பொருள், பதினெண், நூற்றைம்பது, கீழ்க்கணக்கு, திரிந்து, நல்லாய், சுரத்தின்கட், சென்றார், செல்பவோ, கள்ளியங், கொணரும், மறவர், கொள்ளும், பூணுங், கதறா, பின்னை, முல்லாய், கொடி, கொன்றாய், சங்க, என்னுரைத்தீர்க்கு, விட்டு, செல்லாமை, ஆடவர்க்குப், அவள், என்னுரைத்தீர், நன்று