திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

நெஞ்சம் நினைப்பினும் நெற்பொரியும் நீளத்தம் அஞ்சல் எனஆற்றின் அஞ்சிற்றால் - அஞ்சப் புடைநெடும் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட படைநெடுங்கண் கொண்ட பனி. |
76 |
என்னெஞ்சமே! இவளை ஆற்றுவிக்குஞ் சில சொற்களைச் சொல்ல நினைக்கின்றாயாயின், இவணோ தான் நெற்பொரியும் நீளத்தத்தைச் சொல்ல நினைப்பதற்கு முன்னே பிரிவினை யஞ்சிற்றால்; புடைநெடுங் காதுறப் போழ்ந்தகன்று நீண்ட படை நெடுங்கண்களும் பிரிவினை யஞ்சிப் பனி கொண்டன: ஆதலான் நமக் கிவளைப் பிரியமுடியாது.
வந்தால்தான் செல்லாமோ வாரிடையாய்! வார்கதிரால் வெந்தாற்போல் தோன்றும்நீள் வேய்அத்தம் - தந்தார் தகரக் குழல்புரளத் தாழ்துகில்கை யேந்தி மகரக் குழைமறித்த நோக்கு? |
77 |
கொண்டணிந்து நிறையப்பட்ட தகரத்தையுடைய குழல்கள் அசையத் தாழ்ந்து துகிலைக் கையானே ஏந்தி மகரக்குழை மறித்த நோக்குடனே நீ வந்தால் யாம் போகோமோ? அரிய இடையினை யுடையாய்! நீஇரங்க வேண்டா.
ஒருகை, இருமருப்பின் மும்மதமால் யானை பருகுநீர் பைஞ்சுனையில் காணாது - அருகல் வழிவிலங்கி வீழும் வரைஅத்தம் சென்றார் அழிவிலர் ஆக அவர்! |
78 |
ஒரு கையினையும் இருகோட்டினையும் மூன்று மதத்தினையும் உடைய மால் யானைகள் பருகு நீரைப் பைஞ்சுனையின்கட் காணாவாய் மருங்கே வழிவிலங்கித் தளர்ந்துவீழும் வரைகளையுடைய அத்தத்தைச் சென்ற அவர் அவ்வழிஇடையூறின்றி அழிவிலராக.
சென்றார் வருதல் செறிதொடி! சேய்த்தன்றால் நின்றார்சொல் தேறாதாய்! நீடின்றி - வென்றார் எடுத்த கொடியின் இலங்கருவி தோன்றும் கடுத்த மலைநாடு காண்! |
79 |
நம்மைப் பிரிந்து போயினார் வருதல் செறி தொடி! சேய்த்தன்றால்; நின்மாட்டு நின்றொழுகுகின்றாருடைய சொற்களைத் தெரியாதாய்! போரின்கண் வென்றாரெடுத்த கொடிகள் போலத் தெளிந்திலங்கருவி தோன்றா நின்றது மிக்க மலை நாடு; ஆதலால், நீடின்றி இன்றே இரவின்கட் காண்பாயாக.
உருவேற் கண்ணாய்! ஒரு கால்தேர்ச் செல்வன் வெருவிவீந்து உக்கநீள் அத்தம் - வருவர் சிறந்து பொருள்தருவான் சேட்சென்றார் இன்றே இறந்துகண் ஆடும் இடம். |
80 |
அஞ்சத் தக்கவேல் போன்ற கண்களை யுடையாய்! ஒரு காலையுடைய தேர்ச் செல்வனாற் பிறர் கண்டார் வெருவும் வகை வீந்தவிந்த கானத்தானே முயற்சியாற் சிறந்து பொருடருவான் வேண்டிச் சென்றவர் இன்றே வருவர்; மிக்குக் கண் இடமாடா நின்றது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 14 | 15 | 16 | 17 | 18 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திணைமாலை, கீழ்க்கணக்கு, பதினெண், நூற்றைம்பது, இன்றே, வருதல், நீடின்றி, சேய்த்தன்றால், வருவர், சிறந்து, அவர், நின்றது, சொல்ல, காதுறப், நெற்பொரியும், சங்க, போழ்ந்தகன்று, நீண்ட, யுடையாய், பிரிவினை, சென்றார்