திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
அஞ்சுடர்நள் வாண்முகத்து ஆயிழையும் மாநிலா வெஞ்சுடர்நீள் வேலானும் போதரக் கண்டு - அஞ்சி ஒருசுடரும் இன்றி உலகுபா ழாக இருசுடரும் போந்தனஎன் றார். |
71 |
அழகிய மதிபோன்ற நீண்ட ஒளியையுடைய முகத்தாயிழையும் எதிரில்லாத வெஞ்சுடர்நீள் வேலானும் இச்சுரத்தின்கண்ணே போதரக்கண்டு அஞ்சி, இரு சுடருள் ஒருசுடருமின்றியே உதயம் பழாம் வகை இரு சுடரும் அச்சுரத்தே போந்தன என்று கண்டார் சிலர்சொன்னார்.
முகந்தா மரைமுறுவல் ஆம்பல்கண் நீலம் இகந்தார் விரல்காந்தள் என்றென்று - உகந்தியைந்த மாழைமா வண்டிற்காம் நீழல் வருந்தாதே ஏழைதான் செல்லும் இனிது. |
72 |
இவள் முகம் தாமரை மலர், இவள் முறுவலையுடைய வாய் ஆம்பல் மலர், இவள் கண் நீல மலர், ஒன்றை யொன்றொவ்வாது கடந் தார்ந்த விரல்கள் காந்தளரும்பு என்று கருதிக் காதலித்துப் பொருந்திய மாழைமா வண்டிற்குத் தக்க நீழலிலே வருத்தமின்றி நின்னுடைய ஏழைசெல்லாநின்றாள் இனிதாக.
செவ்வாய்க் கரியகண் சீரினால் கேளாதும் கவ்வையால் காணாதும் ஆற்றாதும் - அவ் வாயம் தார்த்தத்தை வாய்மொழியும் தண்கயத்து நீலமும் ஓர்த்தொழிந்தாள் என்பேதை ஊர்ந்து. |
73 |
செவ்வாயின்கட் டார்த்தத்தை வாய் மொழியைக் கேளாதும், கரிய கண்ணின்கட் டண்கயத்து நீலங்களின் றன்மைகளைக் காணாதும், அவ்வாயம் ஆற்றாதொழிவதனை யோர்த்துப் பின்பு உடன்போக்கை யொழிந்தாள்;என் பேதை அலர் காரணத்தான் முன்பு உடன்போக்கை மேற்கொண்டு.
புன்புறவே! சேவலோடு ஊடல் பொருளன்றால் அன்புறவே உடையார் ஆயினும் - வன்புற்று அதுகாண் அகன்ற வழிநோக்கிப் பொன்போர்த்து இதுகாண்என் வண்ணம் இனி! |
74 |
புல்லிய நிறத்தையுடைய பேடைப்புறாவே! நின்சேவலோடூடல் நினக்குக் காரிய மன்றால்; எங்காதலர் எமக் கன்பு மிகவுடையாராயினும், அவர் மனநெகிழாது வலியரான தன்மையைப் பாராய்; அவர் தேரோடும் வந்து நீங்கிய வழிச் சுவடு நோக்கிப் பொன்னிறம் போர்க்க வந்த வண்ணமிதனைப் பாராய்.இப்பொழுது.
எரிந்து சுடும்இரவி ஈடில் கதிரான் விரிந்து விடுகூந்தல் வெகாப் - புரிந்து விடுகயிற்றின் மாசுணம் வீயும்நீள் அத்தம் அடுதிறலான் பின் சென்ற ஆறு. |
75 |
அழன்று சுடாநின்ற பகலோனது ஒப்பில்லாக் கதிரான் மாசுணங்கள் முறுக்கிவிட்ட கயிறுபோலப் புரண்டழியும் அத்தம், விரிந்துவிட்ட கூந்தலையுடையாள் அடுதிறலான் பின் விரும்பிச்சென்ற வழி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திணைமாலை, மலர், இவள், பதினெண், கீழ்க்கணக்கு, நூற்றைம்பது, அவர், பாராய், அத்தம், பின், அடுதிறலான், உடன்போக்கை, கதிரான், வாய், வேலானும், வெஞ்சுடர்நீள், அஞ்சி, மாழைமா, கேளாதும், சங்க, காணாதும்