திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு
தந்துஆயல் வேண்டாஓர் நாட்கேட்டுத் தாழாது வந்தால்நீ எய்துதல் வாயால்மற்று - எந்தாய் மறிமகர வார்குழையாள் வாழாள்நீ வாரல் எறிமகரம் கொட்கும் இரா. |
46 |
சிலரைக் கொணர்ந்து ஆராயவேண்டுவதில்லை; நல்லதொரு நாட்கேட்டு நீட்டியாதே நீ வரைதற்கு வந்தால் இவளை எய்துதல் மெய்ம்மையால்: எம்மிறைவனே! எறிசுறாக்கள் கழியெங்குஞ் சுழலு மிராவின்கண் வாரல்; வரின், மறிமகர வார்குழையாள் உயிர் வாழாள்.
பண்ணாது பண்மேல்தே பாடும் கழிக்கானல் எண்ணாது கண்டார்க்கே ஏரணங்கால் - எண்ணாது சாவார்சான் றாண்மை சலித்திலா மற்றிவளைக் காவார் கயிறுரீஇ விட்டார். |
47 |
யாழினைப் பண்ணாது பண்மேற் சேரத் தேன்கள் பாடுங் கழிக்கானலின்கண் ஆராயாதே வந்து கண்டார்க்கே அழகிய தெய்வங்களாம்; ஆதலான், அறிவினா னாராயாது இறந்துபடுவார் சான்றாண்மையின் கண் வேறுபட்டிலா மற்றிவளைக் காவாது கயிறுரீஇ விட்டார்சான்றாண்மையின் வேறு பட்டார்.
திரை மேற்போந்து எஞ்சிய தெள்கழிக் கானல் விரைமேவும் பாக்கம் விளக்காக் - கரைமேல் விடுவாய் பசும்புற இப்பிகால் முத்தம் படுவாய் இருளகற்றும் பாத்து. |
48 |
திரைமேற் போந்து கரைமே லொழிந்த விடு வாயையும் பசும்புறத்தையுமுடைய இப்பி கான்ற முத்தம், தெண்கழிக்கானலின் விரைமேவும் பாக்கம் ஒளியுண்டாம் வகைஇருள்படுமிட மெல்லாம் அவ்விருளைப் பகுத்தகற்றும்.
எங்கு வருதி இருங்கழித் தண்சேர்ப்ப!- பொங்கு திரையுதைப்பப் போந்தெழிந்த - சங்கு நரன்யியிர்த்த நித்திலம் நள்ளிருள்கால் சீக்கும் வரன்றுயிர்த்த பாக்கத்து வந்து. |
49 |
எவ்விடத்தானே வருவாய் இருங்கழித் தண் சேர்ப்பனே! பொங்கு திரைகளானே யுதைக்கப்பட்டுப் போந்து கரையின்கட்டங்கிய சங்குகள் கதறிப் பொறையுயிர்த்த முத்தங்கள் செறிந்த இருளை இடங்களினின்றுஞ் சீயாநிற்கும்; திரைகொணர்ந்து போதவிட்டனவற்றைக் கண்டார் வரன்றாநின்றபாக்கத்தின்கண்.
திமில்களி றாகத் திரைபறையாப் பல்புள் துயில்கெடத் தோன்றும் படையாத் - துயில்போல் குறியா வரவொழிந்து கோலநீர்ச் சேர்ப்ப! நெறியால்நீ கொள்வது நேர். |
50 |
திமிலே களிறாகத் திரையே பறையாகத் துயில் கெடத்தோன்றும் படை புட்களாக, கனாக் கண்டாற்போலத் தேறமுடியாத களவின்கட் டனியே வரும் வரவினை யொழிந்து, கோலநீர்ச் சேர்ப்பனே! நெறியானே வரைந்து இவளைக் கொள்வது நினக்குத் தகுதி.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, பதினெண், திணைமாலை, நூற்றைம்பது, முத்தம், விரைமேவும், போந்து, பாக்கம், சேர்ப்பனே, கொள்வது, கோலநீர்ச், வந்து, பொங்கு, இருங்கழித், கண்டார்க்கே, மறிமகர, எய்துதல், சங்க, வார்குழையாள், வாரல், மற்றிவளைக், எண்ணாது, பண்ணாது, கயிறுரீஇ