நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு

மாண்டவர் மாண்ட வினை பெறுப; வேண்டாதார் வேண்டா வினையும் பெறுபவே; யாண்டும், பிறப்பால் பிறப்பார் அறன் இன்புறுவர்; துறப்பார், துறக்கத்தவர். |
56 |
அறிவாற் சிறந்தவர்கள் மாட்சிமைப்பட்ட செயல்களையே செய்வர். அறிவிற்குறைந்தவர்கள் தீவினையே செய்வர். உயர்ந்த குடியில் பிறந்தோர் இருமையிலும் (இம்மை, மறுமை) அறத்தையே விரும்பிச் செய்வர். பற்றற்றத் துறவிகள் வீட்டின்பத்தையே (சொர்க்கம்) விரும்புவர்.
என்றும் உளவாகும், நாளும், இரு சுடரும்; என்றும், பிணியும், தொழில் ஒக்கும்; என்றும் கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர்; பிறப்பாரும் சாவாரும் என்றும் உளர். |
57 |
விண்மீன்களும், சந்திரனும், சூரியனும் என்றும் உள்ளன. நோயும் முயற்சியும் என்றும் உள்ளன. ஈவாரும், ஏற்பாரும் என்றும் உள்ளனர். பிறப்பாரும் இறப்பாரும் என்றும் உள்ளனர்.
இனிது உண்பான் என்பான் உயிர் கொல்லாது உண்பான்; முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான்; தனியன் எனப்படுவான் செய்த நன்று இல்லான்; இனியன் எனப்படுவான் யார் யார்க்கேயானும் முனியா ஒழுக்கத்தவன். |
58 |
ஓருயிரையும் கொல்லாமல் காய்கறி உணவுகளை உண்பவன் இனிதாக உண்பவனாவான்; முகமலர்ச்சியற்றவன் பிறரால் வெறுக்கப்படுபவன் ஆவான்; பிறர்க்கு உதவி செய்யாதவன் துணையில்லாதவன் ஆவான். எவராலும் வெறுக்கத்தகாத இயல்பை உடையவன் இனியவன் ஆவான்
ஈத்து உண்பான் என்பான் இசை நடுவான்; மற்ற அவன் கைத்து உண்பான் காங்கி எனப்படுவான்; தெற்ற நகை ஆகும் நண்ணார் முன் சேறல்; பகை ஆகும், பாடு அறியாதானை இரவு. |
59 |
பிறருக்குக் கொடுத்துண்பவன் புகழுடையவனாவான். பிறருக்குக் கொடுத்துண்பவனது கைப்பொருளையே பறித்து உண்பவன் பேராசைமிக்கவனாவான். தன்னை விரும்பாதார் முன் தான் விரும்பிச் செல்லல் இகழ்ச்சிக்கு இடமாகும். தகுதியறியாதவனை ஒன்று வேண்டிச் செல்லல் பகைக்கு இடமாகும்.
நெய் விதிர்ப்ப, நந்தும், நெருப்பு அழல்; சேர்ந்து வழுத்த, வரம் கொடுப்பர், நாகர்; தொழுத் திறந்து கன்று ஊட்ட, நந்தும், கறவை; கலம் பரப்பி நன்று ஊட்ட, நந்தும், விருந்து. |
60 |
யாகத்தில் நெய்யைச் சொரிய நெருப்பு வளர்ந்து எரியும். வணங்கினால் தேவர் நன்மை தருவர். கன்றுகளை உண்பிக்க பசுவிற்குப் பால் பெருகும். இனிமையாய் விருந்தளித்தால் விருந்தினர் மகிழ்வர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 20 | 21 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, என்றும், உண்பான், இலக்கியங்கள், நான்மணிக்கடிகை, எனப்படுவான், நந்தும், ஆவான், என்பான், பதினெண், செய்வர், கீழ்க்கணக்கு, இடமாகும், செல்லல், உள்ளனர், நெருப்பு, ஊட்ட, பிறருக்குக், முன், நன்று, சங்க, உண்பவன், பிறப்பாரும், ஆகும், விரும்பிச்