முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » நாலடியார் » 21.சுற்றம் தழால்
நாலடியார் - 21.சுற்றம் தழால்

வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் கவாஅன் மகற்கண்டு தாய்மறந் தா அங்கு அசாஅத்தான் உற்ற வருத்தம் உசாஅத்தன் கேளிரைக் காணக் கெடும். |
201 |
கருக்கொண்ட காலத்து உண்டாகும் மசக்கையாகிய நோயும், அது பற்றி வரும் பல துன்பங்களும், குழந்தை பெறுங்காலத்து உண்டாகும் நோவும், ஆகிய இத்தகைய துன்பங்களையெல்லாம் மடியில் இருக்கும் குழந்தையைக் கண்டு தாய் மறப்பதுபோல், தளர்ச்சியால் தான் உற்ற துன்பம் எல்லாம் நலம் விசாரிக்கும் சுற்றத்தாரைக் காணின் நீங்கும்.
அழன்மண்டு போழ்தின் அடைந்தவர்கட் கெல்லாம் நிழன்மரம்போல் நேரொப்பத் தாங்கிப் - பழு மரம்போல் பல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே நல்லாண் மகற்குக் கடன். |
202 |
வெப்பம் மிகும் கோடைக்காலத்தில் தன்னை அடைந்தார்க்கு எல்லாம் நிழலைத்தரும் மரம் போல, தன்னைச் சார்ந்த சுற்றத்தாரையெல்லாம் ஒரே தன்மையாகக் காத்து, பழுத்த மரம் போலப் பலரும் பயன் நுகர, தான் வருந்தி உழைத்து வாழ்வது நல்ல ஆண்மகனுக்கு உரிய கடமையாம்.
அடுக்கல் மலைநாட! தன்சேர்ந் தவரை எடுக்கலம் என்னார்பெரியோர்; - அடுத்தடுத்து வன்காய் பலபல காய்ப்பினும் இல்லையே தன்காய் பொறுக்கலாக் கொம்பு. |
203 |
அடுக்கடுக்கான மலைகள் பொருந்திய நாட்டையுடைய அரசனே! ஒரு மரத்தில் பொ¢ய பொ¢ய காய்கள் பலவாகக் காய்த்தாலும் தன் காய்களைத் தாங்க மாட்டாத கிளை இல்லை. அதுபோல, பொ¢யோர் தம்மைச் சார்ந்தவர்களை 'தாங்க மாட்டோம்' என்று சொல்ல மாட்டார்.
உலகறியத் தீரக் கலப்பினும் நில்லா சிலபகலாம் சிற்றினத்தார் கேண்மை; - நிலைதிரியா நிற்கும் பெரியோர் நெறியடைய நின்றனைத்தால் ஒற்கமி லாளர் தொடர்பு. |
204 |
உலகத்தார் அறியும்படி மிகுதியாக உறவு கொண்டாலும், சிற்றினத்தாரிடம் கொண்ட உறவு, நீடித்து நில்லாது சில நாட்களே நிற்கும். பிறரைத் தாங்கும் பண்பில் தளர்ச்சியில்லாதவா¢டம் கொண்ட உறவோ, இயல்பாகவே தம் பண்பில் திரியாது நிற்கும் பொ¢யோர், வீட்டினை அடையத் தவம் செய்யும் காலத்தில் அவ்வீட்டு நெறியில் ஊன்றி நிற்பதுபோல நிலைத்து நிற்கும்.
இன்னர் இனையர் எமர்பிறர் என்னும் சொல் என்னும் இலராம் இயல்பினால் - துன்னித் தொலைமக்கள் துன்பம்தீர்ப் பாரேயார் மாட்டும் தலைமக்கள் ஆகற்பா லார். |
205 |
இவர், இப்படிப்பட்டவர்; எம் உறவினர்; அயலார்' என்று வேறுபாடு குறிக்கும் சொல்லைச் சொல்லாத இயல்பினராய், வறுமைத் துன்பத்தால் வாடும் மக்களைச் சார்ந்து அவர்தம் துயரத்தைக் களைபவரே யாவர்க்கும் தலைவர் கும் தன்மையுடையவர் ஆவர்.
பொற்கலத்துப் பெய்த புலியுகிர் வான்புழுக்கல் அக்காரம் பாலோடு அமரார்கைத்து உண்டலின் உப்பிலிப் புற்கை உயிர்போல் கிளைஞர்மாட்டு எக்காலத் தானும் இனிது. |
206 |
பொற்கலத்தில் இட்ட, புலிநகம் போன்ற வெண்மையான சோற்றைச் சர்க்கரையுடன் பாலும் கலந்து பகைவர் தர, அதைப் பெற்று உண்பதைவிட, உப்பில்லாத புல்லா¢சிக் கூழை, உயிர்போன்ற சுற்றத்தாரிடத்திலே பெற்று, எந்தக் காலத்திலும் இட்டு உண்ணல் இனிதாம்.
நாள்வாய்ப் பெறினும் தம் நள்ளாதார் இல்லத்து வேளாண்மை வெங்கருணை வேம்பாகும்; - கேளாய், அபராணப் போழ்தின் அடகிடுவ ரேனும் தமராயார் மாட்டே இனிது. |
207 |
நெஞ்சமே, கேள்! பகைவர் இல்லத்தில் வேளை தவறாமல் பொரிக்கறியுடன் கூடிய உணவினை உதவியாகப் பெற்றாலும் அது, வேம்புக்கு நிகராகும், உணவுக்குரிய நேரம் கடந்தபோதும், சுற்றத்தாரிடமிருந்து கீரை உணவே கிடைத்தாலும் அ·து இனிமையாகும்.
முட்டிகை போல முனியாது வைகலும் கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்; சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே நட்டார் எனப்படு வார். |
208 |
சம்மட்டி போல, வெறுக்காமல் இருக்கும்படி நாள்தோறும் நெருங்கி இதமாக வாங்கி உண்பவர்களும், காலம் வாய்த்தால் (நெருப்பிலே இரும்பைப் போட்டு விட்டு மீளும்) குறடு போல் கைவிட்டுப் போவார். ஆனால் அன்புள்ள உறவினரோ, பொருளுடன் நெருப்பை அடையும் சூட்டுக்கோலைப் போன்று (சுற்றத்தார்க்குத் துன்பம் நேர்ந்தபோது) நெருப்பிலும் மூழ்குவர்.
நறுமலர்த் தண் கோதாய்! நட்டார்க்கு நட்டார் மறுமையும் செய்வதொன் றுண்டோ ! - இறுமளவும் இன்புறுவ இன்புற்று எழீஇ அவரோடு துன்புறுவ துன்புறாக் கால். |
209 |
நறுமண மலர்களால் கட்டிய குளிர்ந்த மாலையுடையவளே! உறவினர்க்கு உறவினராவார், சாகும் வரை அவர் இன்புறுங்கால் இன்புற்று, அவர் துன்புறுங்கால் அவரோடு சேர்ந்து தாமும் துன்புறாவிடில், மறுபிறப்பிலே போய் அவர்களுக்கு உதவுவதும் உண்டோ? (சுற்றத்தார் சமமாக இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்பது கருத்து).
விரம்பிலார் இல்லத்து வேறிருந்து உண்ணும் வெருக்குக்கண் வெங்கருணை வேம்பாம்; - விருப்புடைத் தன்போல்வார் இல்லுள் தயங்குநீர்த் தண்புற்கை என்போடு இயைந்த அமிழ்து. |
210 |
தன்னை விரும்பாதார் வீட்டிலே தனித்திருந்து உண்ணும், பூனைக்கண் போன்ற நிறமுள்ள, வெம்மையான பொரிக்கறி உணவும் வேம்பாகும். ஆனால் தன்னிடம் விருப்பம் கொண்டவர் வீட்டில் உண்ணப்படும் தெளிந்த நீருடன் கூடிய குளிர்ச்சியான புல்லா¢சிக் கூழும் உடம்புக்குப் பொருந்தும் அமிழ்தம் ஆகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
21.சுற்றம் தழால் - Naaladiyar - நாலடியார் - Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - நிற்கும், இல்லத்து, புல்லா¢சிக், வெங்கருணை, பெற்று, வேம்பாகும், உண்ணும், அவரோடு, இன்புற்று, நட்டார், பகைவர், பண்பில், துன்பம், உண்டாகும், நோவும், இலக்கியங்கள், எல்லாம், போழ்தின், literature, பொ¢யோர், வருந்தி, என்னும்