கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு

பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே சிறு முல்லைப் போது எல்லாம், செவ்வி நறு நுதல், செல்வ மழைத் தடங் கண் சில் மொழி, பேதை வாய் முள் எயிறு ஏய்ப்ப, வடிந்து. |
21 |
எந்திரச் செய்கைகளான மாட்சிமைப் பட்ட ,அலங்கரிக்கப் பட்ட திண்ணிய தேர் வந்த வழியிதே! சிறிய முல்லையின் அரும்புகளெல்லாம் கூர்மையுற்று செவ்விய அழகிய நெற்றியையும், வளப்பான மழைபோற் குளிர்ந்த அகன்ற கண்களையும். சிலவாகிய மொழியினையுமுடைய மடவாளது வாயின்கண் உள்ள கூறிய பற்களை ஒவ்வா நிற்கும்.
இளையரும் ஈரங் கட்டு அயர, உளை அணிந்து, புல் உண் கலி மாவும் பூட்டிய; நல்லார் இள நலம் போலக் கவினி, வளம் உடையார் ஆக்கம்போல் பூத்தன, காடு. |
22 |
சேவகரும் குளிர் காலத்திற்குரிய உடையினை உடுக்க , தலையாட்டம் அணிந்து .புல்லினை உண்ட மனஞ்செருக்கிய குதிரையையும், தேருடன் பூட்டுதலைச் செய்ய .காடுகள் நற்குணமுடைய மகளிரின் இளமைச் செவ்விபோல அழகுற்று வருவாயுடையாரது செல்வம் போல பொலிவுற்றன.
தோழி தலைமகட்குப் பருவம் காட்டி வற்புறுத்தது
கண் திறள் முத்தம் கடுப்பப் புறவு எல்லாம் தண் துளி ஆலி புரள, புயல் கான்று கொண்டு, எழில் வானமும் கொண்டன்று; எவன் கொலோ, ஒண்டொடி! ஊடும் நிலை? |
23 |
[இது முதல் 39 வரையுள்ள செய்யுட்களுக்குத் துறைக்
குறிப்புக்கள் ஏட்டுச் சுவடிகளில் இறந்துபட்டன.]
ஒள்ளிய வளையல்களை அணிந்தவளே! காடெங்கும் இடந்திரண்ட மேனி திரண்டமுத்தத்தை யொப்ப குளிர்ந்த நீர்த்துளிகளும், ஆலங்கட்டிகளும் புரளும் மேகம் மழைபொழிந்து கொண்டு, அழகினையுடைய வானத்திடத்தையெல்லாம் கொண்டது
எல்லா வினையும் கிடப்ப, எழு, நெஞ்சே! கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும்; பல் இருங் கூந்தல் பனி நோனாள்; கார் வானம் எல்லியும் தோன்றும், பெயல். |
24 |
மலைகள் உயர்ந்த காடுகள் யானையின் மதம் நாறா நிற்கும், கரிய வானத்திங்கண் மழை மென்மையாகத் தோன்றா நிற்கும்.(ஆதலால்) பலவாகிய கரிய கூந்தலையுடையவள் ஆற்றியிருத்தற்கு நான் கூறிய சொல்லை இனிப் பொறுக்கமாட்டாள்.மனமே! எல்லா தொழில்களும் ஒழிந்து நிற்க.நீ போதற்கு ஒருப்படு.
கருங் கால் வரகின் பொரிப்போல் அரும்பு அவிழ்ந்து, ஈர்ந் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன; சேர்ந்தன செய் குறி; வாரார் அவர் என்று கூர்ந்த, பசலை அவட்கு. |
25 |
குளிர்ச்சி மிக்க காட்டில், கரிய தாளினையுடைய வரகினது பொரியைப்போல தெறுழினது மலர்கள் அரும்புகள் முறுக்குடைந்து விரிந்தன.(தலைவன்)செய்த குறிகள் வந்து விட்டன.ஆதலால் தலைவன் இனி வரமாட்டார் என தலைவிக்கு பசலை அதிகரித்தது.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
கார் நாற்பது - பதினெண் கீழ்க்கணக்கு, கார், இலக்கியங்கள், நிற்கும், கரிய, கீழ்க்கணக்கு, நாற்பது, பதினெண், எல்லா, மதம், பசலை, தலைவன், கொண்டு, ஆதலால், கூறிய, தேர், சங்க, எல்லாம், பட்ட, அணிந்து, குளிர்ந்த, காடுகள்