முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.058.திருக்கழுமலம்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.058.திருக்கழுமலம்

7.058.திருக்கழுமலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரியீசுவரர்.
தேவியார் - திருநிலைநாயகியம்மை.
593 |
சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த |
7.058.1 |
இவ்வுடம்பின் கால எல்லையில் இதன் கண் நின்று சாதலும், பின்பு வேறோர் உடம்பிற் பிறத்தலும் என்னும் இரண்டனையும் விலக்கி, இவ்வொரு பிறப்பிலே என்னைப் படைத்து, அவ்வாற்றானே இதன்கண் வந்து தனது திருவருளை எனக்கு அளித்தருளியவனும், மலைமங்கையை நன்கு மதித்துத் தன் திருமேனியின் ஒருகூற்றில் வைத்த மாணிக்கம் போல்பவனும், வானினின்றும் வந்த வெள்ளத்தை சடையிடையில் வைத்தருளினவனும், அயலதாகிய என் நெஞ்சிற்கு, அயலாகாது, காய்ந்த இரும்பு கவர்ந்த நீர்போல, உள்ளே கலந்து நிற்பவனும், எட்டுவகைப் பொருளாய் நிற்கும் ஒருவனும், காதில் வெள்ளிய குழையை அணிந்தவனும் ஆகிய எங்கள் தலைவனை, அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, ஊழிக்காலத்தில் உலகத்தைக் கடல் கொள்ளவும் தான் கொள்ளப்படாது மிதந்து நின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வள நகரிடத்திற் கண்டு கொண்டேன்; அதனால் இனி ஒரு குறையும் இலனாயினேன்.
594 |
மற்றொரு துணைஇனி மறுமைக்குங் காணேன் சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன் முத்தியும் ஞானமும் வானவ ரறியா கற்பனை கற்பித்த கடவுளை யடியேன் |
7.058.2 |
சூழ்ந்துள்ள சுற்றத்தாரையும் துணையென்று நினையாது, 'இவனே துணை' என்று தௌந்து, நாள்தோறும் என்னால் வணங்கப்படுகின்ற, ஒளியையுடைய விளக்குப் போல்பவனும், வீடாவதும், ஞானமாவதும், அவற்றை அடைவிப்பனவாய் அமைந்த, தேவராலும் அறியப்படாத அளவற்ற நெறிகளாவனவும் இவை என்பதனைப் படிமுறையானே அறிவித்து, மெய்ப்பொருளை எனக்கு உணர்த்தியருளிய கடவுளும் ஆகிய பெருமானை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வளநகரிற் கண்டு கொண்டேன்; அதனால், முன்பு அவனை மறந்து வருந்திய யான், இனி ஒருபோதும் அவனை மறவாதிருக்கும் திருவருளைப் பெற்றேன்; ஆகவே, இம்மைக்கேயன்றி மறுமைக்கும் இனி மற்றொரு துணையை நாடேன்.
595 |
திருத்தினை நகருறை சேந்தனப் பன்னென் ஒருத்தனை யல்லதிங் காரையு முணரேன் விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக் |
7.058.3 |
திருத்தினை நகரின்கண் எழுந்தருளியிருக்கின்ற, முருகக்கடவுட்குத் தந்தையும், என்னுடைய முன்னை வினைகளை யெல்லாம் விலக்குகின்ற, செம்பொன்போலும் சிறப்புடையவனும், அழகிய பொன்போலும் திருமேனியையுடைய ஒப்பற்றவனும் ஆகிய எங்கள் சிவபெருமானையல்லது வேறு யாரையும் யான் இவ்வுலகில் இறைவராக உணரேன்; யான் உய்யுங் காரணங் கூடினமையால் இத்தகைய உணர்வைப் பெற்றேன்; ஆயினும், விருத்தனும், பாலனும் ஆகிய அவனை, யான் கனவில் என் அருகே கண்டு, நனவில் எங்குங் காணமாட்டாது பிரிந்திருந்தேன்; இதுபோழ்து, யாவர்க்கும் தலைவனும், நடனம் புரிகின்ற திருவடிகளையுடையவனும் ஆகிய அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கடலை அடுத்துள்ள, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன்; அதனால், இனி அப்பிரிவு இலனாயினேன்.
596 |
மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக்e |
7.058.4 |
மழையினால் அரும்புகின்ற கொன்றையினது மலரைச் சூடினவனாகிய எங்கள் பெருமானை என்றும் மறவாது நினைக்கின்ற மனத்தைப் பெற்றேனாதலின், யான் அவனைப் புறம் போகவொட்டாது என்னிடத்தே பிணித்துக் கொள்ளுதலைப் பொருந்தினேன்; இனி ஒருபோதும் இந்நிலையினின்றும் தவறி உலகிற் போய்ப் பிறவாத பெருமையைப் பெற்றுவிட்டேன்; யான் பெற்ற இப்பேற்றினை வேறு யார் பெற வல்லார்! இவ்வாறாதலின், அவனை இனியொருகால் இவ்விடத்து யான் நேர்படக் காணாதேயும், இவ்வுடம்பு நீங்கியபின் அவனை அடையவும் வல்லேன்; என்றாலும், அவனைக் காணாது என் நெஞ்சம் அமையாமையின், காதிற் குழையையுடைய நீல கண்டனாகிய அவனை மீளக் காணுதல் வேண்டியே பாடி நிற்கின்றேன்; இந்நிலையில் அவனை, இதுபோழ்து, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கழைக் கரும்பும், வாழையும் பல சோலையுடன் நிறைந்துள்ள, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வள நகரிடத்துக் கண்டு கொண்டேன்; இனியொரு குறையும் இலனாயினேன்.
597 |
குண்டலங் குழைதிகழ் காதனே யென்றுங் வண்டலம் பும்மலர்க் கொன்றைய னென்றும் பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப் கண்டலங் கழிக்கரை யோதம்வந் துலவுங் |
7.058.5 |
யான், உறக்கத்தில், 'குண்டலமும், குழையும் விளங்குகின்ற காதினை உடையவனே' என்றும், 'கொடிய மழுவாகிய ஒளியையுடைய படையை உடையவனே' என்றும், 'வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மலரைச் சூடியவனே' என்றும் வாய்பிதற்றி, விழித்த பின், பழக்கமாய் நமக்கு உள்ள பலவாறான மனத்தை ஒழித்து ஒரு நெறிப்பட்ட மனத்தையுடையேனாய், அவனது தலங்களை வினாவி அறிந்து, 'அத்தலத்திற் கிடைப்பான்' என்று எண்ணிப் பல நாளும் சென்று முறைப்படியே வணங்கினேன்; அவ்வாற்றால் வருமிடத்து, தாழைகளையுடைய கழிக்கரையிடத்துக் கடல் அலைகள் வந்து உலவுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்தே அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே கண்டுகொண்டேன்; இனி, அக் குறையிலேனாயினேன்.
598 |
வரும்பெரு வல்வினை யென்றிருந் தெண்ணி விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி அரும்பினை அலரினை அமுதினைத் தேனை கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக் |
7.058.6 |
'அளவற்ற வலிய வினைகள் வந்து வருத்துமே; என் செய்வது' என்று எண்ணியிருந்து வருந்தினேன்; அங்ஙனம் வருந்தாதபடி எம்பெருமானை மறவாத மனம் வாய்க்கப்பெற்றேன்; அதனால், என் மனத்தால் அவனை விரும்பி, மெய்சிலிர்த்து, என்னை இகழா தொழியுமாறு அவனை இரந்து நின்று, முறைப்படியே வணங்கினேன்; அதனால், அரும்பும், பூவும், அமுதும், தேனும், கரும்பும் போல இன்பம் தருபவனும், யாவர்க்கும் தலைவனும், அறவடிவினனும், எனது பிறவியை வேரோடு அறுப்பவனும் ஆகிய அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, மிக்க செந்நெல் நிறைந்த வயல்களையுடைய, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டு கொண்டேன்.
599 |
அயலவர் பரவவும் அடியவர் தொழவும் முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங் |
7.058.7 |
மேகமும், செல்வமும் போல்பவனும், பொன்னொளியும் மின்னொளியும் போலும் திருமேனியையுடையவனும், என்னிடத்துக் கிடைத்த பொருள் போல்பவனும் ஆகிய எங்கள் பெருமானை யான் அடைய நினைந்து, அதன் பொருட்டுச் சேய்மையில் உள்ளார் அவனைத் துதிக்கவும், அண்மையில் உள்ளார் அவனை வணங்கவும், அவற்றுள் ஒன்றையும் செய்யாது, அவனைத் தங்கள் வன்மையால் அடைய முயல்பவர்கள் பின்னே சென்று, 'முயல் அகப்படும் வலையில் யானை அகப்படும்' என்று சொல்லிய அவர்களது சொல்லைக்கேட்டு, அவ்வழியையே முற்றிலும் கடைப்பிடித்து, அவனிடத்து அன்புடையாரது தோற்றத்தை மேற்கொண்டிருந்தேன்; ஆயினும், எனது முன்னைத் தவத்தால், அவனை, அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, கயல் மீன்களும், சேல்மீன்களும் வயலின்கண் விளையாடுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன்; அதனால் எண்ணம் கைகூடப்பெற்றேன்.
600 |
நினைதரு பாவங்கள் நாசங்க ளாக மனைதரு மலைமகள் கணவனை வானோர் புனைதரு புகழினை எங்கள தொளியை கனைதரு கருங்கட லோதம்வந் துலவுங் |
7.058.8 |
நினைத்து உணரப்படும் கருத்துப் பொருள்களாகிய பாவங்கள் அழிதல் உளவாகும்படி, யான், மனத்தால் நினைந்தும், கையால் தொழுதும் எழப்பட்ட, ஒளி பொருந்திய ஞாயிறு போல்பவனும், தனக்கு மனைவியைத் தர விரும்பிய மலைக்கு மகளாகிய உமைக்குக் கணவனும், தேவர்களது தலைமணியாகிய மாணிக்கம் போல்பவனும், வேதத்தின் பொருளாய் உள்ளவனும், அழகியவாகச் சொல்லப்படுகின்ற புகழை உடையவனும், எங்கள் விளக்குப் போல்பவனும், மாலும் அயனும், 'இன்னன்' என்று அறிதற்கு அரியவனும் ஆகிய இறைவனை, அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, ஒலிக்கின்ற கரிய கடலினது அலைகள் வந்து உலவுகின்ற, 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டேன்.
601 |
மறையிடைத் துணிந்தவர் மனையிடை யிருப்ப துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப் கறையணி மிடறுடை யடிகளை அடியேன் |
7.058.9 |
வேள்வி முதலிய கருமங்களையே மெய்யென்று துணிந்தவர்கள் பற்றுவிடமாட்டாது மனைவாழ்க்கையிலே கட்டுண்டு கிடத்தலும், முற்றத் துறந்தவர்போலக் காட்டினோரது பொய்யாகிய தவங்கள் ஏனையோரது முயற்சிகளோடொப்பக் கடிதில் அழிந்து போதலும் கண்கூடாய் இருக்க, அவற்றை மேற்கொண்டவர்கள், தாம் சேற்றில் அழுந்தியிருத்தலை அறியாது, நல்ல நீர்த்துறையிலே நன்கு மூழ்கியிருப்பதாகக் கருதி, பிறரையும் தம் வழியிலே செல்லக் காட்டிய தீநெறியாகிய பொருந்தா நெறியை, யான் பொருட்படுத்தாது வந்து, பிறையை யுடைய சடையை உடையவனும், எங்கள் தலைவனும், கருணையை மிக உடையவனும், ஆகிய சிவபெருமானை அடியேன், அவன் கயிலையில் வீற்றிருந்தவாறே, 'திருக்கழுமலம்' என்னும் இவ்வளநகரிடத்துக் கண்டுகொண்டேன்.
602 |
செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன் தொழுமல ரெடுத்தகை அடியவர் தம்மைத் |
7.058.10 |
செழுமையான கொன்றையினது மலரும், வில்வ இலையாகிய மலரும் கலந்துள்ள சடைமுடியையுடைய தலைவனை நினைந்து, அன்பினால் அழுகின்ற மலர்போலும் கண்ணிணையுடைய அடியார்க்கல்லது அறிதற்கரிய இணையாகிய அவன் திருவடிகள் இரண்டினையும், 'திருக்கழுமலம்' என்னும் இவ் வளநகரிடத்துக் கண்டுகொண்டு, சடையனார்க்கு மகனாகிய நம்பியாரூரன் பாடிய இப்பத்துப் பாடல்களாலும் தொழுகின்ற, மலரைத் தாங்கிய கைகளையுடைய அடியார்களை, துன்பமும், இடும்பையும் அணுகமாட்டா.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கழுமலம் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருக்கழுமலம், என்னும், கண்டுகொண், வளநகர்க், வீற்றிருந்தவாறே, கயிலையில், போல்பவனும், அதனால், எங்கள், வளநகரிடத்துக், பெற்றேன், கண்டுகொண்டேன், அடியேன், என்றும், பெருமானை, தலைவனும், துணையென்று, றேன்மற, இலனாயினேன், உடையவனும், கொண்டேன், மலரும், தலைவனை, கரும்பும், சென்று, துன்பமும், ஒலிக்கின்ற, உடையவனே, யடிகளை, பாவங்கள், துலவுங், தேன்விதி, முறைப்படியே, அடியவர், தொளியை, மலரைச், நினைந்து, உள்ளார், அவனைத், அலைகள், உலவுகின்ற, மனத்தால், அகப்படும், வணங்கினேன், திருத்தினை, பொருளாய், மாணிக்கம், குறையும், மற்றொரு, வருந்தலுற், எனக்கு, நின்று, திருமுறை, திருச்சிற்றம்பலம், சாதலும், எங்கள்பி, பட்டஒண், ஒளியையுடைய, யாவர்க்கும், பும்மலர்க், வாமனம், வல்லேன், இதுபோழ்து, ஆயினும், விளக்குப், அவற்றை, அளவற்ற, ஒருபோதும், கொன்றையினது