முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.057.திருவாழ்கொளிபுத்தூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.057.திருவாழ்கொளிபுத்தூர்

7.057.திருவாழ்கொளிபுத்தூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்.
தேவியார் - வண்டமர்பூங்குழலம்மை.
581 |
தலைக்க லன்தலை மேல்தரித் தானைத் கொலைக்கையா னையுரி போர்த்துகந் தானைக் அலைத்தசெங் கண்விடை ஏறவல் லானை மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர் |
7.057.1 |
தலையாகிய அணிகலனைத் தலையில் அணிந்தவனும், தன்னை எனக்கு நினைக்குமாறு தருபவனும், கொலைத் தொழிலையும், கையையும் உடைய யானையின் தோலைப் போர்த்து மகிழ்ந்தவனும், கூற்றுவனை உதைத்த, ஒலித்தல் பொருந்திய கழலை யணிந்த திருவடியை உடையவனும், எதிர்த்தவரை வருத்தும் சிவந்த கண்களையுடைய இடபத்தை ஊர வல்லவனும் ஆகிய, பயிர்கள் தம் தலைமேற்கொண்ட செந்நெற்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, அவன் ஆணை வழியே அவனுக்கு அடிமையானேனாகிய அடிநாய் போன்ற யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
582 |
படைக்கட் சூலம் பயிலவல் லானைப் கடைக்கட்பிச் சைக்கிச்சை காதலித் தானைக் சடைக்கட் கங்கையைத் தாழவைத் தானைத் மடைக்கண்நீ லம்மலர் வாழ்கொளி புத்தூர் |
7.057.2 |
படைகளுள் சூலத்தைப் பழக வல்லவனும், தன்னை நினைவாரது உள்ளத்தில் பரவி அகப்படுத்துக் கொள்பவனும், வாயில்களில் நின்று ஏற்கும் பிச்சைக்கு விரும்புதலைச் செய்பவனும், காமனது உடலை அமைப்பு அழியச் செய்தவனும், கங்கையைச் சடையில் தங்கும்படி வைத்தவனும், தண்ணிய நீரையுடைய மண்ணியாற்றின் கரையில் இருப்பவனும், எல்லாத் தகுதிகளையும் உடையவனும் ஆகிய, நீர்மடைகளில் நீலோற்பல மலர் மலர்கின்ற திருவாழ்கொளி புத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
583 |
வெந்த நீறுமெய் பூசவல் லானை அந்தமா திஅறி தற்கரி யானை சிந்தை என்தடு மாற்றறுப் பானைத் வந்தென்உள் ளம்புகும் வாழ்கொளி புத்தூர் |
7.057.3 |
வெந்த சாம்பலை உடம்பிற் பூச வல்லவனும், வேத மாகிய சிறந்த விடையை ஊர வல்லவனும், முடிவும் முதலும் அறிதற்கு அரியவனும், ஆற்றுநீர் மோதுகின்ற சடையை உடையவனும், பெரியோனும், எனது மனக் கலக்கத்தைக் களைபவனும், தேவர்களுக்குத் தேவனும், யான் இகழ்ந்து சொல்லிய சொல்லை வெறாமல் வந்து என் உள்ளத்தில் புகுந்து நிற்பவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம்போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
584 |
தடங்கை யான்மலர் தூய்த்தொழு வாரைத் படங்கொள்நா கம்மரை யார்த்துகந் தானைப் நடுங்கஆ னையுரி போர்த்துகந் தானை மடந்தை பாகனை வாழ்கொளி புத்தூர் |
7.057.4 |
பெரிய கைகளால் மலர்களை எடுத்துத் தூவிக் கும்பிடுகின்றவர்கள், பிறவிடத்துச் செல்லாது, தன் திருவடியிடத்தே செல்லுமாறு செலுத்த வல்லவனும், படத்தை உடைய பாம்பை அரையில் விரும்பிக் கட்டியுள்ளவனும், முன்னர் விளங்கும் பற்களையுடைய வெள்ளிய தலையில் உண்ணுதல் உடையவனும், தன் தேவியும் நடுங்கும்படி யானைத் தோலை விரும்பிப் போர்த்துள்ளவனும், நஞ்சினை உண்டு கண்டம்கரியதாகியவனும், மாதொரு பாகனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
585 |
வளைக்கைமுன் கைமலை மங்கை மணாளன் துளைத்தவங் கத்தொடு தூமலர்க் கொன்றை திளைக்குந் தெவ்வர் திரிபுர மூன்றும் வளைத்த வில்லியை வாழ்கொளி புத்தூர் |
7.057.5 |
வளையை அணிந்த முன் கையையுடைய மலை மகளுக்கு மணாளனும், மன்மதனது அரிய உடம்பு சாம்பலாய் ஒழியுமாறு அழித்தவனும், துளைசெய்யப்பட்ட எலும்பும், தூய கொன்றை மலரும், தோலும், நூலும் நெருங்கிய, கீற்றுக்களையுடைய மார்பையுடையவனும், வானத்தில் திரிகின்ற மூன்று அரண்களும், அதன்கண் வாழ்ந்து இன்பம் நுகர்கின்ற பகைவர் மூவரும், அவரைச் சார்ந்த அசுரரும், அவர்தம் பெண்டிரும், பிள்ளைகளும் வெந்தொழியுமாறு வளைத்த வில்லையுடையவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
586 |
திருவின் நாயக னாகிய மாலுக் உருவி னானைஒன் றாஅறி வொண்ணா செருவில் லேந்திஓர் கேழற்பின் சென்று மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர் |
7.057.6 |
திருமகளுக்குக் கணவனாகிய திருமாலுக்குப் பல பொழுதுகளிற் பல திருவருள்களைச் செய்த, தேவர் தலைவனும், உருவம் உடையவனும், அவ்வுருவம் ஒன்றாக அறியப்படாது, அளவற்றனவாய் அறியப்படுங் கடவுளும் அருச்சுனனுக்கு அருள்செய்தற் பொருட்டு போருக்குரியவில் ஒன்றை ஏந்திக்கொண்டு, ஒரு பன்றியின்பின்னே, சிவந்த கண்களையுடைய வேடனாய்ச் சென்றவனும், என்னிடத்திலும் வந்து பொருந்தியுள்ளவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியுள்ள மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
587 |
எந்தை யைஎந்தை தந்தை பிரானை முந்தை யாகிய மூவரின் மிக்க கந்தின்மிக் ககரி யின்மருப் போடு வந்து வந்திழி வாழ்கொளி புத்தூர் |
7.057.7 |
என் தந்தையும், என் தந்தை தந்தைக்கும் தலைவனும், துன்பத்திற்கு வழியாகிய இடையூறுகளைப் போக்க வல்லவனும், யாவர்க்கும் முன்னோராகிய மும்மூர்த்திகளினும் மேலான மூர்த்தியும், தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய, மண்ணியாறு வழியாக, தறியிடத்தில் நின்று சினம் மிகுகின்ற யானையின் தந்தங்களும், கரிய அகிற் கட்டைகளும், கவரிமானின் மயிர்களும் வந்து வந்து வீழ்கின்ற திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல் பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
588 |
தேனை யாடிய கொன்றையி னானைத் ஊன மாயின தீர்க்கவல் லானை கான வானையின் கொம்பினைப் பீழ்ந்த வான நாடனை வாழ்கொளி புத்தூர் |
7.057.8 |
தேனில் மூழ்கிய கொன்றைமலர் மாலையை உடையவனும், தேவர்கள் வணங்கும் தலையாய தேவனும் குறையாயவற்றை எல்லாம் போக்க வல்லவனும், ஒற்றை எருதை உடையவனும், நெற்றிக்கண்ணை உடையவனும், காட்டில் வாழும் யானையின் கொம்பை ஒடித்த கள்ளத்தன்மையுடைய சிறுவனுக்கும் காண அரிதான பொருளாய் உள்ளவனும், வானுலகத்தில் வாழ்பவனும் ஆகிய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
589 |
காளை யாகி வரையெடுத் தான்றன் மூளை போத ஒருவிரல் வைத்த பாளை தெங்கின் பழம்விழ மண்டிச் வாளை பாய்வயல் வாழ்கொளி புத்தூர் |
7.057.9 |
காளைபோன்று கயிலாயத்தைப் பெயர்த்தவனாகிய இராவணனது கைகள் முரிந்து, நெருங்கிய தலைகளினின்றும் மூளை வெளிப்படுமாறு தனது கால்விரல் ஒன்றை ஊன்றிய கடவுளும், தோற்றம் அறியப்படாதவனும் ஆகிய, பாளையையுடைய தென்னை மரத்தினது நெற்றுக்கள் விழ, சிவந்த கண்களையுடைய எருமைகள், நெருங்கிச் சேறுசெய்ய, எங்கும் வாளை மீன்கள் துள்ளுகின்ற வயல்களையுடைய திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
590 |
திருந்த நான்மறை பாடவல் லானைத் பொருந்த மால்விடை ஏறவல் லானைப் இருந்துண் தேரரும் நின்றுணுஞ் சமணும் மருந்த னான்றனை வாழ்கொளி புத்தூர் |
7.057.10 |
நான்கு வேதங்களையும் செவ்வனே பாட வல்லவனும், தேவர்க்கும் அறிதற்கு அரியவனும், பெரிய விடையினை ஏற்புடைத்தாமாறு ஏற வல்லவனும், திருநீற்றுப் பையும், புலித் தோலுமாகிய இவற்றையுடையவனும், இருந்து உண்கின்ற சாக்கியரும், நின்று உண்கின்ற சமணரும் இகழ நிற்பவனும், அரிய உயிர்கட்கெல்லாம் அமுதம் போல்பவனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
591 |
மெய்யனை மெய்யில் நின்றுணர் வானை பொய்ய னைப்புரம் மூன்றெரித் தானைப் செய்ய னைவெளி யதிரு நீற்றில் மைகொள் கண்டனை வாழ்கொளி புத்தூர் |
7.057.11 |
என்றும் ஓர் அழிவில்லாதவனும், மெய்ம்மையில் நின்று உணரப்படுபவனும், அம் மெய்ம்மையை இல்லாதவர்க்கெல்லாம் உணரப்படாதவனும், முப்புரங்களை எரித்தவனும், குற்றமில்லாதவனும், புலித்தோலாகிய உடையை உடையவனும், சிவந்த நிறம் உடையதாய், வெள்ளிய திருநீற்றினால் விளங்குகின்ற திருமேனியை உடையவனும், மான்கன்றை ஏந்துகின்ற, கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையுடையனும் ஆகிய, திருவாழ்கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து, யான், வேறு எதனை நினைப்பேன்! ஒன்றையும் நினையேன்.
592 |
வளங்கி ளர்பொழில் வாழ்கொளி புத்தூர் றுளங்கு ளிர்தமிழ் ஊரன்வன் றொண்டன் நலங்கி ளர்வயல் நாவலர் வேந்தன் பலங்கி ளர்தமிழ் பாடவல் லார்மேற் |
7.057.12 |
வன்றொண்டனும், சடையனார் மகனும், வனப்பகை, சிங்கடி என்னும் நங்கையர்க்குத் தந்தையும், விளைவு மிகுகின்ற வயல்களையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனும், இறைவனை உளங்குளிர்ந்து பாடும் தமிழையுடையவனும் ஆகிய நம்பியாரூரன், 'வளமை மிக்க சோலைகளையுடைய திருவாழ் கொளிபுத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற மாணிக்கம் போல்பவனாகிய பெருமானை மறந்து வேறு எதனை நினைப்பேன்' என்று சொல்லிப் பாடிய, பயன் மிகுந்த இத்தமிழ்ப் பாடல்களைப் பாட வல்லவர்களிடத் தினின்றும், அவர்கள் செய்த பாவங்கள் திண்ணமாகப் பறந்து நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவாழ்கொளிபுத்தூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புத்தூர், மாணிக்கத், தைமறந், தென்நினைக், மறந்து, வாழ்கொளி, பெருமானை, நினைப்பேன், நினையேன், உடையவனும், திருவாழ்கொளிபுத்தூரில், வல்லவனும், மாணிக்கம், ஒன்றையும், எழுந்தருளியிருக்கின்ற, போல்பவனாகிய, நின்று, சிவந்த, காண்பரி, கண்களையுடைய, லானைப், தலைவனும், மூர்த்தி, பிரானை, யானையின், தந்தையும், தோற்றம், செங்கண், அறியப்படாதவனும், கடவுளும், யைமுதல், னான்றனை, யானைப், கெல்லாம், எழுந்தருளியுள்ள, தோலுடை, பாடவல், உண்கின்ற, வனப்பகை, பாவங்கள், வயல்களையுடைய, சிங்கடி, மிகுகின்ற, தற்கரி, தலையில், உள்ளத்தில், மாணிக்கம்போல்பவனாகிய, மால்விடை, தானைக், போர்த்துகந், திருமுறை, திருச்சிற்றம்பலம், தானைத், னையுரி, திருவாழ்கொளிபுத்தூர், அறிதற்கு, கொன்றை, பெண்டிரும், வளைத்த, நெருங்கிய, வெள்ளிய, தானைப், அரியவனும், தேவனும், நிற்பவனும், கொளிபுத்தூரில்