முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.055.திருப்புன்கூர்
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.055.திருப்புன்கூர்

7.055.திருப்புன்கூர்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
பண் - தக்கேசி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுந்தரமூர்த்திசுவாமிகள் திருப்புன்கூருக்கெழுந்தருளியபோது அந்தத்தலத்தார் கண்டு தொழுது சுவாமீ! இங்கு நெடுநாளாக மழைபொழிதலின்றி வருந்துகிறோம், ஆதலால் கிருபைபாலிக்கவேண்டுமென்று விண்ணப்பஞ்செய்ய, மழைபொழிந்தால் சுவாமிக்கியாது தருவீர்களென்ன, அவர்கள் பன்னிரண்டு வேலி நிலந்தருகிறோமென்னக் கிருபை கூர்ந்து இந்தப்பதிகமோதியருளலும், மழை அதிகமாய்ப்பெய்ய அவர்களுடையவேண்டுதலினால் மழை தணிந்து பெய்யும்படிசெய்து முன்னமவர்கள் சொல்லிய பன்னிரண்டுவேலி நிலமேயன்றி மீட்டும் பன்னிரண்டுவேலி நிலங்கொடுக்கப்பெற்றருளியது.
சுவாமிபெயர் - சிவலோகநாதர்.
தேவியார் - சொக்கநாயகியம்மை.
560 |
அந்த ணாளனுன் னடைக்கலம் புகுத வந்த காலன்றன் ஆருயி ரதனை எத்தை நீயெனை நமன்தமர் நலியில் சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன் |
7.055.1 |
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, முனிவன் ஒருவன் உன்னை அடைக்கலமாக அடைய, அவனைக் காத்தல் நிமித்தமாக, அவன்மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்த உனக்கு அடியேனாகிய யான், உனது அவ்வாற்றலையறிந்து, என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின், என்தந்தையாகிய நீ, 'இவன் என் அடியான்; இவனைத் துன்புறுத்தாதீர்' என்று சொல்லி விலக்குவாய் என்னும் எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள்.
561 |
வையக முற்று மாமழை மறந்து உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் செய்கை கண்டுநின் திருவடி யடைந்தேன் |
7.055.2 |
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இவ்வூரிலுள்ளவர், 'உலகமுழுதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று; மிக்க நிலங்களை உனக்குத் தருவோம்; எங்களை உய்யக்கொள்க' என்று வேண்ட, ஒளியைக் கொண்ட வெண்முகிலாய்ப் பரந்திருந்தவை, அந்நிலைமாறி, எங்கும் பெய்த பெருமழையால் உண்டாகிய பெருவெள்ளத்தை நீக்கி, அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பன்னிரு வேலி நிலத்தைப் பெற்றருளிய செயலையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
562 |
ஏத நன்னிலம் ஈரறு வேலி கோத னங்களின் பால்கறந் தாட்டக் தாதை தாளற எறிந்த சண்டிக்குன் பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன் |
7.055.3 |
பூதகணங்கட்குத் தலைவனே, அழகிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நல்ல நிலங்கள் பன்னிருவேலி கொடுத்த ஏயர்கோன் அடைந்த, துன்பத்தைச் செய்யும் பெரிய நோயை இப்பொழுது தீர்த்ததனையும், முன்பு பசுக்களது மடியில் நிறைந்திருந்த பாலைக் கறந்து ஆட்ட அதனைப் பொறாது அங்ஙனம் ஆட்டப்பட்ட அழகிய வெண் மணலாலாகிய பெருமான்மேற் சென்ற தந்தையது பாதங்கள் துணி பட்டு விழுமாறு வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு உனது முடியின் மேற் சூடியுள்ள கொன்றைமாலையை எடுத்துச் சூட்டியருளியதையும் அறிந்து வந்து, அடியேன், உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
563 |
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் |
7.055.4 |
பொன்போலும், திரளாகிய அழகிய தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளி யிருப்பவனே, 'நல்ல தமிழைப் பாட வல்ல ஞானசம்பந்தனும், நாவுக்கரையனும், நாளைப்போவானும், சூதாடுதலை நன்கு கற்ற மூர்க்கனும், நல்ல சாக்கியனும், சிலந்தியும், கண்ணப்பனும், கணம் புல்லனும்' என்ற இவர்கள் குற்றமான செயல்களைச் செய்யவும், அவைகளைக் குணமான செயலாகவே கருதிய உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து, வந்து, அடியேன், உனது ஒலிக்கின்ற கழலை யணிந்த திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள்.
564 |
கோல மால்வரை மத்தென நாட்டிக் ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய நீல மார்கடல் விடந்தனை யுண்டு சீலங் கண்டுநின் திருவடி யடைந்தேன் |
7.055.5 |
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, தேவர்கள், அழகிய பெரிய மலையை மத்தாக நாட்டி, கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பாற்கடலைக் கடைந்து, அதில் அமுதந் தோன்றாது பெருவிடந் தோன்றியதைக் கண்டு அவர்கள் பெரிதும் ஓடிவந்து அடைய அவர்கட்கு உதவுதல் கருதி, கருமை நிறைந்த, அக் கடல் விடத்தை உண்டு, அஃது என்றும் நின்று விளங்குமாறு கண்டத்தே வைத்த பேரருளாளனே, நீ செய்த இந் நல்ல செய்கையையறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள்
565 |
இயக்கர் கின்னரர் ஞமனொடு வருணன் மயக்க மில்புலி வானரம் நாகம் அயர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை திகைப்பொன் றின்றிநின் திருவடி யடைந்தேன் |
7.055.6 |
வளவியசோலையையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, இயக்கரும், கின்னரரும், இயமனும், வருணனும், அக்கினியும், இயங்குகின்ற வாயுவும், சூரியனும், சந்திரனும், வசுக்களும், ஏனைய தேவர்களும், அசுரர்களும், மற்றும் அறியாமை நீங்கின புலி, குரங்கு, பாம்பு முதலியனவும் உனது திருவடியை மறத்தல் சிறிதும் இன்றி வழிபட்டுப் பெற்ற அரிய திருவருளை யறிந்து அடியேனும், தடுமாற்றம் சிறிதும் இன்றி உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
566 |
போ?த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப் பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத் ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை தீர்த்த னேநின்றன் திருவடி யடைந்தேன் |
7.055.7 |
தூயவனே, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நற்பொருள்களை உள்ளடக்கிய பெரிய செவிகளையுடைய முனிவர்களுக்கு, அன்று சோலைகளைச் சூழக்கொண்ட ஆலமரத்தின் கீழிருந்து அறத்தைச் சொல்லியும், அருச்சுனனுக்கு அன்று பாசுபதத்தைக் கொடுத்தும் பகீரதன் வேண்டிக்கொள்ள அவன்பொருட்டு, ஆரவாரித்து வீழ்ந்த நீர்வடிவாகிய கங்கையாளை முன்பு உனது சடையில், அடக்கியும் அருள்செய்தாய்; அவற்றை யெல்லாம் அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள்.
567 |
மூவெயில் செற்ற ஞான்றுய்ந்த மூவரில் காவ லாளர்என் றேவிய பின்னை மானை நோக்கியோர் மாநடம் மகிழ தேவ தேவநின் திருவடி யடைந்தேன் |
7.055.8 |
தேவதேவனே, வளவிய சோலைளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நீ, முப்புரத்தை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில் இருவரை உனது திருக்கோயிலின் வாயில் காவலராகும்படி பணித்தபின்பு, மற்றொருவனை, நீ, கரிந்த காடே அரங்கமாக, உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது அழகிய மத்தளத்தை முழக்கும் படி அருள்செய்ததை யறிந்து வந்து. அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள்.
568 |
அறிவி னால்மிக்க அறுவகைச் சமயத் எறியு மாகடல் இலங்கையர் கோனைத் குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக் செறிவு கண்டுநின் திருவடி யடைந்தேன் |
7.055.9 |
வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நூலறிவினால் மிக்க ஆறுவகைப் பட்ட சமயங்களில் உள்ள அவரவர்க்கும் அச்சமயத்திற்றானே, அரிய திருவருளைச் செய்தும், அலையெறியும் பெரிய கடலிடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனை, அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக்கீழ் வைத்து நெரித்து, பின்பு அவன் பாடிய, உய்யும் கருத்தைக்கொண்ட பாடலினது இனிய இசையைக்கேட்டு, அழகிய வாளோடு, மிக்க வாழ்நாளையுங் கொடுத்தும் அருளிய உனது மிகுந்த திருவருளை அறிந்து வந்து, அடியேன் உன் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
569 |
கம்ப மால்களிற் றின்னுரி யானைக் செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச் உம்ப ராளியை உமையவன் கோனை தம்பி னாற்சொன்ன அருந்தமி ழைந்தோ |
7.055.10 |
அசைதலையுடைய பெரிய யானையினது தோலை உடையவனும், காமனை எரித்த ஒரு கண்ணை உடையவனும், செம்பொன்னே போல்வதாகிய அழகிய மேனியை உடையவனும், தேவர்களை ஆள்பவனும், உமையவளுக்குத் தலைவனும் ஆகிய, வளவிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, வன்றொண்டனாகிய நம்பியாரூரன் மனத்தால் விரும்பி, அங்ஙனம் விரும்பிய அவ்வன்பானே சொல்லிய அரிய இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர், நீங்குதற்கரிய வினைகளை இல்லாதவராவர்; இது திண்ணம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 53 | 54 | 55 | 56 | 57 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புன்கூர் - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - புன்கூரு, திருப்புன்கூரில், ழில்திருப், திருவடியை, அடைந்தேன், யடைந்தேன், செழும்பொ, எழுந்தருளியிருப்பவனே, திருவடி, சோலைகளையுடைய, அடியேன், ஏன்றுகொண்டருள், அறிந்து, கண்டுநின், கொண்டருள், பன்னிரு, உடையவனும், ஆரருள், றின்றிநின், பொன்போலும், திருமுறை, வல்லவர், சிறிதும், புரிந்து, யறிந்து, மூவரில், திருவருளை, பகீரதன், முன்பு, அவர்கள், ஒருவன், சொல்லிய, பன்னிரண்டுவேலி, மீட்டும், திருச்சிற்றம்பலம், திருப்புன்கூர், அவனைக், செய்யும், கொடுத்த, வயலில், அங்ஙனம்