முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.003.திருநெல்வாயில் அரத்துறை
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.003.திருநெல்வாயில் அரத்துறை

7.003.திருநெல்வாயில் அரத்துறை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அரத்துறைநாதர்.
தேவியார் - ஆனந்தநாயகியம்மை.
22 |
கல்வாய்அகி லுங்கதிர் மாமணியுங் நெல்வாயி லரத்துறை நீடுறையுந் நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார் சொல்லாய்க்கழி கின்ற தறிந்தடியேன் |
7.003.1 |
மலையிடத்துள்ள அகில்களையும், ஒளியை யுடைய மாணிக்கங்களையும் ஒன்று கூட்டித் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள திருநெல்வாயில் அரத் துறையின் கண் என்றும் எழுந்தருளியிருக்கும், நிலவினையுடைய வெள்ளிய பிறையைச் சூடிய மாசற்றவனே, உலகியலில் நின்றோர் அனைவரும், 'நல்ல துணையாகிய இல்லாளை மணந்தார்; இல்லற நெறியிலே ஒழுகினார்; நன்றாக உண்டார்; உடுத்தார்; மூப்படைந்தார்; இறந்தார்' என்று உலகத்தில் சொல்லப்படும் சொல்லை உடையவராய் நீங்குவதன்றி நில்லாமையை அறிந்து உன்னை அடைந்தேன்; ஆதலின், அடியேன் அச்சொல்லிலிருந்து பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
23 |
கறிமாமிள கும்மிகு வன்மரமும் நெறிவார்குழ லாரவர் காணடஞ்செய் வறிதேநிலை யாதஇம் மண்ணுலகின் பொறிவாயில்இவ் வைந்தினை யும்மவியப் |
7.003.2 |
கறிக்கப்படுகின்ற மிளகையுடைய கொடியையும், மிக்க வலிய மரங்களையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள, நெறித்த நீண்ட கூந்தலையுடைய மகளிர்தாம் பிறர் அனைவரும் விரும்பிக் காணத்தக்க நடனத்தைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே, உயிர்கள் பலவும் பயன் ஏதும் இன்றிப் பிறந்து இறக்கும் இம் மண்ணுலகத்தில் அடியேனை மகனாகப் படைத்தாய்; ஆதலின், நான் இறவாது இரேன்; அதனால், 'பொறி' எனப்படுகின்ற, அவாவின் வாயில்களாகிய இவ்வைந்தினையும் அடங்குமாறு வென்று, உன் திருவடிக்கண்ணே புகுதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
24 |
புற்றாடர வம்மரை ஆர்த்துகந்தாய் எற்றேஒரு கண்ணிலன் நின்னையல்லால் மற்றேல்ஒரு பற்றிலன் எம்பெருமான் அற்றார்பிற விக்கடல் நீந்தியேறி |
7.003.3 |
புற்றின்கண் வாழ்கின்ற ஆடுகின்ற பாம்பை விரும்பி அரையின்கண் கட்டியவனே, தூய்மையானவனே, போர் செய்கின்ற வெண்மையான இடப ஊர்தியை உடையவனே, எம் பெருமானே, வண்டுகள் ஒலிக்கின்ற கூந்தலையுடைய உமையம்மையை ஒருபாகத்தில் உடையவனே, திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கும் மாசற்றவனே, அடியேன் ஒருகண் இல்லாதவனாய் இருக்கின்றேன்; இஃது எத்தன்மைத்து என்பேன்! மற்றும் வினவின், உன்னையன்றி வேறொரு பற்றுக்கோடு இல்லேன்; ஆதலின், அடியேன், இறப்புப் பொருந்திய பிறவிக் கடலைக் கடந்து கரையேறிப் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
25 |
கோஓடுயர் கோங்கலர் வேங்கையலர் நீஇடுயர் சோலைநெல் வாயிலரத் ஓஒடுபு னற்கரை யாம்இளமை வாஅடியி ருந்துவருந் தல்செய்யா |
7.003.4 |
கிளைகள் உயர்ந்த கோங்க மரத்தின் மலர்களையும், வேங்கை மரத்தின் மலர்களையும் மிகுதியாகத் தள்ளிக் கொண்டு வருகின்ற நிவாநதியின் கரைமேல் உள்ள, நெடியனவாக ஓங்கிய சோலைகளை உடைய திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, உன்னை நினைகின்றவரது நெஞ்சத்தில் வாழ்பவனே, இப்பிறப்பு, உறங்கியபின் விழித்தாற் போல்வது; இதன்கண் உள்ள இளமையோ, ஓடுகின்ற நீரின் கரையை ஒக்கும்; ஆதலின், 'என் செய்வது' என்று மெலிவுற்று நின்று வருந்தாது, அடியேன், இப் பிறவியிலிருந்து பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
26 |
உலவும்முகி லிற்றலை கற்பொழிய நிலவும்மயி லாரவர் தாம்பயிலும் புலன்ஐந்து மயங்கி அகங்குழையப் அலமந்தும யங்கி அயர்வதன்முன |
7.003.5 |
உலாவுகின்ற மேகங்களினின்றும் மலையின்கண் மழை பொழியப்பட, அந்நீர், ஓங்கிய மூங்கில்களோடு இழிந்து வருகின்ற நிவாநிதியின் கரைமேல் உள்ள, விளங்குகின்ற மயில் போலும் மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியுள்ள மாசற்றவனே, ஐந்து புலன்களும் தத்தமக்கு உரிய பொறிகளுக்கு எதிர்ப்படாது மாறும்படியும், மனம் மெலியும்படியும், போர் செய்கின்ற முத்தலை வேலை (சூலத்தை) உடைய கூற்றுவனது ஏவலர் வந்து வருத்த, பற்றுக்கோடின்றி, உணர்வு தடுமாறி நின்று இளைத்தற்குமுன், அடியேன், இறப்பினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
27 |
ஏலம்மில வங்கம் எழிற்கனகம் நீலம்மலர்ப் பொய்கையில் அன்னமலி வாலூன்ற வருந்தும் உடம்பிதனை ஆலந்நிழ லில்லமர்ந் தாய்அமரா |
7.003.6 |
'ஏலம் இலவங்கம்' என்னும் மரங்களையும், அழகிய பொன்னையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவா நதியின் கரையில் உள்ள, நீலோற்பல மலர்ப் பொய்கையில் அன்னங்கள் நிறைந்திருக்கும் திருநெல்வாயில் அரத்துறையில் எழுந்தருளியுள்ளவனே, அழகனே, ஆல் நிழலில் அமர்ந்தவனே, என்றும் இறவாதிருப்பவனே, ஒரு நெல்லின் வால் ஊன்றினும் பொறாது வருந்துவதாகிய இவ்வுடம்பினை யான் உறுதி யுடையது என்று கருதி மகிழாது உறுதியை நாடி உழன்றேன்; அடியேன் இதனினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியினைச் சொல்லி யருள்.
28 |
சிகரம்முகத் திற்றிர ளாரகிலும் நிகரின்மயி லாரவர் தாம்பயிலுந் மகரக்குழை யாய்மணக் கோலமதே அகரம்முத லின்னெழுத் தாகிநின்றாய் |
7.003.7 |
மலைச் சிகரத்தினின்றும், திரளாய் நிறைந்த அகிலையும் பிறவற்றையும் மிகுதியாகத் தள்ளிக்கொண்டு வருகின்ற நிவாநதியின் கரையில் உள்ள, உலகின் மயில்கள் போலாத வேறுசில மயில்கள் போலும் சிறந்த மகளிர் ஆடல் பாடல்களைப் புரிகின்ற திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக் கின்ற மாசற்றவனே, காதில் மகர குண்டலத்தை அணிந்தவனே, எழுத்துக்களுக்கு எல்லாம் அகரமாகிய முதல் எழுத்துப்போன்று, பொருள்களுக்கெல்லாம் முதற்பொருளாகி நிற்பவனே, இவ்வுடம்பு தான், மணக்கோலந்தானே கடிதிற் பிணக்கோலமாய் மாறுகின்ற நிலையாமையை உடையது; ஆதலின், அடியேன் இதனினின்றும் பிழைத்துப் போதற்குரிய ஒரு வழியைச் சொல்லியருள்.
29 |
திண்டேர்நெடு வீதி யிலங்கையர்கோன் ஞெண்டாடுநெ டுவயல் சூழ்புறவின் பண்டேமிக நான்செய்த பாக்கியத்தாற் அண்டாஅம ரர்க்கம ரர்பெருமான் |
7.003.8 |
திண்ணிய தேர்களை உடைய, நீண்ட தெருக்களையுடைய இலங்கையில் உள்ளார்க்கு அரசனாகிய இராவணனது திரண்ட தோள்கள் இருபதையும் முன்னர் நெரித்துப் பின்னர் அவனுக்கு அருள்பண்ணி, நண்டுகள் உலாவுகின்ற நீண்ட வயல் சூழ்ந்த, முல்லை நிலத்தையுடைய திருநெல்வாயில் அரத்துறையின் கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனே, மேலான ஒளி வடிவினனே, தேவனே, தேவர்க்குத் தேவராய் உள்ளார்க்குத் தலைவனே, நான் முற்பிறப்பிற் செய்த நல்வினையினால் உனது பெயரைப் பல காலும் சொல்லும் பேற்றினைப் பெற்றேன்; இனி, அடியேன், உலகியலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
30 |
மாணாவுரு வாகியொர் மண்ணளந்தான் நீணீண்முடி வானவர் வந்திறைஞ்சுந் வாணார்நுத லார்வலைப்பட் டடியேன் ஆணோடுபெண் ணாமுரு வாகிநின்றாய் |
7.003.9 |
சிறப்பில்லாத குறள் உருவாகி உலகத்தை அளந்த திருமாலும், மலரின்கண் இருக்கும் பிரமனும் தேடியும் காணுதற்கு அரியவனே, நீண்ட முடியினையுடைய தேவர்கள் வந்து வணங்குகின்ற, திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றனவனே, மாசற்றனவனே, ஆணும், பெண்ணுமாகிய உருவத்தைக் கொண்டு நிற்பவனே, அடியேன், ஒளி பொருந்திய நெற்றியையுடைய மாதரது மையலாகிய வலையிற்பட்டு, பலாப் பழத்தில் வீழ்ந்த ஈயைப் போல அழிவதற்குமுன், அவர் மையலினின்றும் பிழைத்துப் போவதற்குரிய ஒரு வழியினைச் சொல்லியருள்.
31 |
நீரூர நெடுவயல் சூழ்புறவின் தேரூர்நெடு வீதிநன் மாடமலி ஆரூரன் உரைத்தன நற்றமிழின் காரூர்களி வண்டறை யானைமன்ன |
7.003.10 |
நீர் பாய்கின்ற நீண்ட வயல்கள் சூழ்ந்த, முல்லை நிலத்தை உடைய திருநெல்வாயில் அரத்துறையின்கண் எழுந்தருளியிருக்கின்ற மாசற்றவனாகிய இறைவனை, தேர் ஓடும் நீண்ட தெருக்களில் நல்ல மாடமாளிகைகள் நிறைந்த, தென்னாட்டில் உள்ள திருநாவலூரில் உள்ளவர்க்குத் தலைவனும், சிவபெருமானுக்கு அடித் தொண்டனும் ஆகிய அழகிய ஆரூரன் பாடிய, நல்ல தமிழ் மொழியினால் ஆகிய உயர்ந்த பாமாலையின்கண் உள்ள பத்துப் பாடல்களாகிய இவற்றைக் கற்று உணரவல்லவர், கருமை மிக்க, களிப்பினை உடைய வண்டுகள் ஒலிக்க வருகின்ற யானையை உடைய மன்னர்களாகி மண்ணுலகம் முழுதும் ஆண்டு, பின் தேவர்க்குத் தலைவராய் ஒப்பற்ற விண்ணுலகம் முழுதும் ஆள்பவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநெல்வாயில் அரத்துறை - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருநெல்வாயில், சூழல்சொல்லே, லரத்துறை, போவதொர், நெல்வாயி, அடியேன், சொல்லியருள், வழியினைச், பிழைத்துப், மாசற்றவனே, வருகின்ற, நின்மலனே, வின்கரைமேல், அரத்துறையின்கண், போதற்குரிய, வருந்நிவ, ஆதலின், அடியேன்உய்யப், மிகுதியாகத், கரைமேல், தள்ளிக்கொண்டு, மிகவுந்தி, நிவாநதியின், எழுந்தருளியிருக்கின்ற, லாரவர், அரத்துறையின், புரிகின்ற, போவதற்குரிய, எழுந்தருளியிருக்கும், கரையில், இதனினின்றும், நிறைந்த, பொய்கையில், பாடல்களைப், மகளிர், மயில்கள், போலும், சூழ்ந்த, ஆரூரன், முழுதும், மாசற்றனவனே, தேவர்க்குத், உலாவுகின்ற, முல்லை, சூழ்புறவின், அரத்துறை, உடையவனே, வண்டுகள், திருச்சிற்றம்பலம், செய்கின்ற, என்றும், கூந்தலையுடைய, அனைவரும், பொருந்திய, திருமுறை, ஓங்கிய, மரங்களையும், கொண்டு, மலர்களையும், உயர்ந்த, மரத்தின், நின்று