முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 7.012.திருநாட்டுத்தொகை
ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 7.012.திருநாட்டுத்தொகை

7.012.திருநாட்டுத்தொகை
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
112 |
வீழக் காலனைக் கால்கொடு கூழை ஏறுகந் தான்இடங் தாழை யூர்தகட் டூர்தக்க வாழை காய்க்கும் வளர்மரு |
7.012.1 |
கூற்றுவனை, அவன் உயிரற்று விழுமாறு, காலால் உதைத்த கயிலாய நாதனும், நடை நிரம்பாத எருதினை ஏறுதலை விரும்பியவனுமாகிய இறைவன் தனக்கு இடமாகக்கொண்ட ஊர், 'திருக்கோவலூர், தாழையூர், தகட்டூர், தக்களூர், தருமபுரம், வாழைகள் காய்க்கின்ற, செல்வம் வளர்கின்ற மருகல் நாட்டில் உள்ள மருகல்' என்பவை.
113 |
அண்டத் தண்டத்தின் அப்புறத் தண்டந் தோட்டந்தண் டங்குறை கண்டல் முண்டல்கள் சூழ்கழிப் கொண்டல் நாட்டுக்கொண் டல்குறுக் |
7.012.2 |
இவ்வண்டத்திற்கு அப்பால் உள்ள அண்டங்களுக்கும் அப்பால் நின்று நடனம் ஆடுகின்ற அமுதமாய் உள்ள இறைவனது தலங்கள், 'தண்டந்தோட்டம், தண்டங்குறை, தண்டலை, ஆலங்காடு, கடல் முள்ளியும் தாழையும் சூழ்ந்த கழிப்பாலை, கடற்கரை, கொண்டல் நாட்டிலுள்ள கொண்டல், குறுக்கை நாட்டிலுள்ள குறுக்கை' என்பவை.
114 |
மூல னூர்முத லாயமுக் கண்ணன் நால னூர்நரை ஏறுகந் தேறிய கோல நீற்றன்குற் றாலங் வேல னூர்வெற்றி யூர்வெண்ணிக் |
7.012.3 |
அழகிய திருநீற்றை அணிந்த, வெள்விடையை விரும்பியேறின, முக்கண் முதல்வனது தலங்கள், 'மூலனூர், முதல்வனூர், நாலனூர், குற்றாலம், குரங்கணின்முட்டம், வேலனூர், வெற்றியூர், வெண்ணிக் கூற்றத்திலுள்ள வெண்ணி' என்பவை.
115 |
தேங்கூ ருந்திருச் சிற்றம் பலமுஞ் பாங்கூ ரெங்கள் பிரானுறை பூங்கூ ரும்பர மன்பரஞ் சோதி நாங்கூர் நாட்டுநாங் கூர்நறை |
7.012.4 |
எமக்குத் துணையாய் வரும் தலைவனும், எப்பொருட்கும் மேலானவனும், எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் உள்ளவனும் ஆகிய இறைவன் நீங்காது வாழும் அழகு மிகுந்த ஊர்கள், 'தேங்கூர், சிற்றம்பலம், சிராப்பள்ளி, அழகு மிக்க கடம்பந்துறை, நாங்கூர் நாட்டிலுள்ள நாங்கூர், நறையூர் நாட்டிலுள்ள நறையூர்' என்பவை.
116 |
குழலை வென்ற மொழிமட மழலை யேற்று மணாளன் கிழவன் கீழை வழிபழை மிழலை நாட்டு மிழலைவெண் |
7.012.5 |
குழலிசையை வென்ற மொழியினையுடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவனாகிய, இளமையான இடபத்தையுடைய அழகனும், பெரிய கயிலாய மலைக்கு உரியவனும் ஆகிய இறைவனது தலங்கள், 'கீழைவழி, பழையாறு, கிழையம், மிழலை நாட்டிலுள்ள மிழலை, வெண்ணி நாட்டிலுள்ள மிழலை' என்பவை.
117 |
தென்னூர் கைம்மைத் திருச்சுழி பன்னூர் புக்குறை யும்பர என்னூர் எங்கள்பி ரான்உறை பொன்னூர் நாட்டுப்பொன் னூர்புரி |
7.012.6 |
சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற தலங்களிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்கு இடமாய், பரவிய புகழையுடையன எவ்வூர்கள் எனின், அவை, எங்கள் பெருமான் எழுந்தருளியுள்ள, 'தென்னூர், ஒழுக்கம் நிறைந்த சுழியல், கானப்பேர், தேவனூர், பொன்னூர் நாட்டிலுள்ள பொன்னூர், புரிசை நாட்டிலுள்ள புரிசை' என்பவை.
118 |
ஈழ நாட்டுமா தோட்டந்தென் சோழ நாட்டுத் துருத்திநெய்த் ஆழி யூரன நாட்டுக்கெல் கீழை யில்லர னார்க்கிடங் |
7.012.7 |
சிவபெருமானாருக்கு உரிய தலங்கள், ஈழநாட்டில் உள்ள மாதோட்டம், தென்னாட்டில் உள்ள இராமேச்சுரம், சோழநாட்டிலுள்ள துருத்தி, நெய்த்தானம், திருமலை, கடல் சூழ்ந்த நிலவுலகிற் கெல்லாம் அணியாய் விளங்கும் கீழையில், கிள்ளிகுடி என்பவை.
119 |
நாளும் நன்னிலந் தென்பனை நீள நீள்சடை யான்நல்லிக் காள கண்டன் உறையுங் வேளா நாட்டுவே ளூர்விளத் |
7.012.8 |
'நன்னிலம், பனையூர், கஞ்சனூர், நெல்லிக்கா, நெடுங்களம், கடைமுடி, கண்டியூர், வேளா நாட்டில் உள்ள வேளூர், விளத்தூர் நாட்டிலுள்ள விளத்தூர்' என்பவைகளில், மிக நீண்ட சடையையுடையவனும், நஞ்சணிந்த கண்டத்தை யுடையவனுமாகிய இறைவன் எந்நாளும் எழுந்தருளியிருப்பன்.
120 |
தழலு மேனியன் தையலொர் பாகம் தொழலுந் தொல்வினை தீர்க்கின்ற கழலுங் கோவை யுடையவன் பழனம் பாம்பணி பாம்புரந் |
7.012.9 |
தழல் போல ஒளிவிடும் திருமேனியை உடையவனும், மங்கையை ஒரு பங்கில் விரும்பிவைத்துள்ளவனும், தன்னைத் தொழுதவுடன் தொழுதவரது பழவினையை அறுக்கின்ற ஒளியாய் உள்ளவனும், கழல் அணிந்த மணிவடத்தை உடையவனும், ஆகிய இறைவன் விரும்புகின்ற தலங்கள், 'சோற்றுத்துறை, பழனம், பாம்பணி, பாம்புரம், தஞ்சை, தஞ்சாக்கை' என்பவை.
121 |
மைகொள் கண்டன்எண் டோளன்முக் பைகொள் வாளர வாட்டித் செய்யில் வாளைகள் பாய்ந்துக றையன் மேய பொழில் அணி |
7.012.10 |
கருமை நிறத்தைக் கொண்ட கண்டத்தையும்,. எட்டுத் தோள்களையும், மூன்று கண்களையும் உடையவனும், படத்தைக்கொண்ட கொடிய பாம்பை ஆட்டித் திரியும் மேலவனுமாகிய இறைவனுடைய தலங்கள், 'வலஞ்சுழி, வயல்களில் வாளை மீன்கள் மேலெழுந்து பாய்ந்து பிறழ்கின்ற திருப்புன்கூர், அவன் மிக விரும்பிய, சோலையை உடைய அழகிய ஆவடுதுறை' என்பவை.
122 |
பேணி நாடத னிற்றிரி ஆணை யாஅடி யார்கள் நாணிஊரன் வனப்பகை யப்பன்வன் பாணி யால்இவை ஏத்துவார் |
7.012.11 |
நாடுகளில் எல்லாம் விரும்பித் திரியும் பெருமானும், அடியார்கள் தமக்குத் தலைவனாக அறிந்து தொழப்படுகின்ற முதல்வனும் ஆகிய இறைவனை, நாணுடையவளாகிய 'வனப்பகை' என்பவளுக்குத் தந்தையும், இறைவன்முன் வன்மை பேசிப் பின் அவனுக்குத் தொண்டன் ஆகியவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இப்பாடல்களைத் தாளத்தொடு பாடித் துதிப்பவர் அடையும் இடம் சிவலோகமேயாம்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநாட்டுத்தொகை - ஏழாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நாட்டிலுள்ள, என்பவை, தலங்கள், இறைவன், பொன்னூர், நாங்கூர், கொண்டல், திரியும், உடையவனும், புரிசை, தேவனூர், கானப்பேர், பங்கில், வனப்பகை, தென்னூர், வலஞ்சுழி, திருமலை, கண்டியூர், பாம்பணி, கடைமுடி, நறையூர், கஞ்சனூர், நெடுங்களம், விளத்தூர், சிராப்பள்ளி, நாட்டில், தண்டலை, கடற்கரை, மருகல், கயிலாய, திருமுறை, திருச்சிற்றம்பலம், ஏறுகந், அப்பால், இறைவனது, வெண்ணி, திருநாட்டுத்தொகை, ஒளியாய், அணிந்த, கண்ணன், சூழ்ந்த, குறுக்கை, உள்ளவனும்